1 நாளாகமம் 9 : 1 (IRVTA)
எருசலேமில் உள்ள மக்கள் இஸ்ரவேல் எல்லோரும் தங்கள் வம்சவரலாற்றின்படி பதிவுசெய்யப்பட்டார்கள்; இவர்களுடைய பெயர்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்தில் எழுதியிருக்கிறது, யூதா கோத்திரத்தார்கள் தங்களுடைய துரோகத்தினால், பாபிலோனுக்கு சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.
1 நாளாகமம் 9 : 2 (IRVTA)
தங்களுடைய சொந்த நிலங்களிலும் தங்களுடைய பட்டணங்களிலும் முன்பு குடியிருந்தவர்கள் இஸ்ரவேலர்களும் ஆசாரியர்களும் லேவியர்களும் ஆலயப்பணியாளர்களுமே.
1 நாளாகமம் 9 : 3 (IRVTA)
யூதா சந்ததிகளிலும், பென்யமீன் சந்ததிகளிலும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் சந்ததிகளிலும், எருசலேமில் குடியிருந்தவர்கள் யாரென்றால்,
1 நாளாகமம் 9 : 4 (IRVTA)
யூதாவின் மகனாகிய பேரேசின் சந்ததியில் பானியின் மகனாகிய இம்ரியின் மகனான உம்ரிக்குப் பிறந்த அம்மியூதின் மகன் ஊத்தாய்.
1 நாளாகமம் 9 : 5 (IRVTA)
சேலாவின் சந்ததியில் மூத்தவனாகிய அசாயாவும், அவனுடைய பிள்ளைகளும்,
1 நாளாகமம் 9 : 6 (IRVTA)
சேராவின் சந்ததியில் யெகுவேலும், அவனுடைய சகோதரர்களாகிய அறுநூற்றுத்தொண்ணூறுபேர்களுமே.
1 நாளாகமம் 9 : 7 (IRVTA)
பென்யமீன் சந்ததியில் அசெனூவாவின் மகனாகிய ஒதாவியாவுக்குப் பிறந்த மெசுல்லாமின் மகன் சல்லு.
1 நாளாகமம் 9 : 8 (IRVTA)
எரோகாமின் மகன் இப்னெயா; மிக்கிரியின் மகனாகிய ஊசியின் மகன் ஏலா; இப்னியாவின் மகனாகிய ரேகுவேலுக்குப் பிறந்த செபதியாவின் மகன் மெசுல்லாம் என்பவர்களும்;
1 நாளாகமம் 9 : 9 (IRVTA)
தங்கள் சந்ததிகளின்படி இருந்த இவர்கள் சகோதரர்களாகிய தொளாயிரத்து ஐம்பத்தாறுபேருமே; இந்த மனிதர்கள் எல்லோரும், தங்களுடைய பிதாக்களின் வம்சத்திலே முன்னோர்களின் தலைவர்களாக இருந்தார்கள்.
1 நாளாகமம் 9 : 10 (IRVTA)
ஆசாரியர்களில் யெதாயா, யோயாரீப், யாகின்.
1 நாளாகமம் 9 : 11 (IRVTA)
அகிதூபின் மகனாகிய மெராயோதின் மகன் சாதோக்குக்குப் பிறந்த மெசுல்லாவின் மகனாகிய இல்க்கியாவின் மகன் அசரியா என்பவன் தேவாலயத்து விசாரணைக்காரன்.
1 நாளாகமம் 9 : 12 (IRVTA)
மல்கியாவின் மகனாகிய பஸ்கூருக்குப் பிறந்த எரோகாமின் மகன் அதாயா; இம்மேரின் மகனாகிய மெசில்லேமித்தின் மகன் மெசுல்லாமுக்குப் பிறந்த யாசெராவின் மகனாகிய ஆதியேலின் மகன் மாசாய் என்பவர்களும்,
1 நாளாகமம் 9 : 13 (IRVTA)
அவர்களுடைய சகோதரர்களும், தங்கள் முன்னோர்களின் வம்சத்தலைவர்களான ஆயிரத்து எழுநூற்று அறுபதுபேர் தேவாலயத்தின் பணிவிடைக்குத் திறமையுள்ளவர்களாக இருந்தார்கள்.
1 நாளாகமம் 9 : 14 (IRVTA)
லேவியர்களில் மெராரியின் சந்ததியான அசபியாவின் மகனாகிய அஸ்ரீகாமுக்குப் பிறந்த அசூபின் மகன் செமாயா,
1 நாளாகமம் 9 : 15 (IRVTA)
பக்பக்கார், ஏரேஸ், காலால், ஆசாபின் மகனாகிய சிக்ரிக்குப் பிறந்த மீகாவின் மகன் மத்தனியா,
1 நாளாகமம் 9 : 16 (IRVTA)
எதுத்தூனின் மகனாகிய காலாலுக்குப் பிறந்த செமாயாவின் மகன் ஒபதியா; நெத்தோபாத்தியர்களின் கிராமங்களில் குடியிருந்த எல்க்கானாவின் மகனாகிய ஆசாவின் மகன் பெரகியா,
1 நாளாகமம் 9 : 17 (IRVTA)
வாசல் காவலாளிகளாகிய சல்லூம், அக்கூப், தல்மோன், அகீமான் என்பவர்களும், இவர்கள் சகோதரர்களுமே; இவர்கள் தலைவன் சல்லூம்.
1 நாளாகமம் 9 : 18 (IRVTA)
லேவி சந்ததியின் சேனைகளில் இவர்கள் கிழக்கேயிருக்கிற ராஜாவின் வாசலைக் காவல் காத்துவந்தார்கள்.
1 நாளாகமம் 9 : 19 (IRVTA)
கோராகின் மகனாகிய எபியாசாபுக்குப் பிறந்த கோரேயின் மகன் சல்லூமும், அவனுடைய தகப்பன் வம்சத்தார்களாகிய அவனுடைய சகோதரர்களுமான கோராகியர்கள் பணிவிடைவேலையை விசாரித்து, அவர்கள் பிதாக்கள் யெகோவாவுடைய இடத்திலே கூடாரத்திற்குப்போகிற வழியைக் காவல்காத்ததுபோல, கூடாரத்துவாசல்களைக் காத்துவந்தார்கள்.
1 நாளாகமம் 9 : 20 (IRVTA)
எலெயாசாரின் மகனாகிய பினேகாசுடனே யெகோவா இருந்ததால், அவன் முற்காலத்திலே அவர்கள்மேல் விசாரணைக்காரனாக இருந்தான்.
1 நாளாகமம் 9 : 21 (IRVTA)
மெசெல்மியாவின் மகனாகிய சகரியா ஆசரிப்புக் கூடாரவாசல் காவல்காரனாக இருந்தான்.
1 நாளாகமம் 9 : 22 (IRVTA)
வாசல்களைக் காக்கிறதற்குத் தெரிந்துகொள்ளப்பட்ட இவர்களெல்லாரும் இருநூற்றுப் பன்னிரெண்டுபேர்களாக இருந்து, தங்கள் கிராமங்களின்படியே தங்களுடைய வம்சத்து அட்டவணைகளில் எழுதப்பட்டார்கள்; தாவீதும், தரிசனம்காண்கிறவனாகிய சாமுவேலும், அவர்களைத் தங்களுடைய வேலைகளில் வைத்தார்கள்.
1 நாளாகமம் 9 : 23 (IRVTA)
அப்படியே அவர்களும், அவர்களுடைய மகன்களும் யெகோவாவுடைய ஆலயமாகிய கூடாரத்து வாசல்களைக் காக்கிறவர்களை வரிசையாக விசாரித்து வந்தார்கள்.
1 நாளாகமம் 9 : 24 (IRVTA)
ஆலயத்தின் வாசல்களைக் காக்கிறவர்கள் நான்கு திசைகளாகிய கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்தார்கள்.
1 நாளாகமம் 9 : 25 (IRVTA)
அவர்களுடைய சகோதரர்கள் தங்களுடைய கிராமங்களிலிருந்து, ஏழுநாட்களுக்கு ஒருமுறை மாறிமாறி அவர்களோடு இருக்க வருவார்கள்.
1 நாளாகமம் 9 : 26 (IRVTA)
தேவாலயத்தின் அறைகள்மேலும் கருவூல அறைகள்மேலும் உள்ள விசாரிக்கும் வேலை லேவியர்களான அந்த நான்கு தலைமைக் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
1 நாளாகமம் 9 : 27 (IRVTA)
காவல் அவர்களுக்கு ஒப்படைத்திருந்ததால் அவர்கள் தேவாலயத்தைச் சுற்றிலும் இரவு தங்கியிருந்து, காலையில் கதவுகளைத் திறந்துவிடுவார்கள்.
1 நாளாகமம் 9 : 28 (IRVTA)
அவர்களில் சிலரிடத்தில் ஆராதனை பொருட்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தது; அவர்கள் அவைகளை எண்ணி உள்ளே கொண்டுபோய், எண்ணி வெளியே கொண்டுவருவார்கள்.
1 நாளாகமம் 9 : 29 (IRVTA)
அவர்களில் சிலர் மற்றப் பொருட்களின்மேலும், பரிசுத்த பாத்திரங்கள் எல்லாவற்றின்மேலும், மெல்லிய மாவு, திராட்சைரசம், எண்ணெய், சாம்பிராணி, நறுமணப் பொருட்களின்மேலும் விசாரணைக்காரர்களாக இருந்தார்கள்.
1 நாளாகமம் 9 : 30 (IRVTA)
ஆசாரியர்களின் மகன்களில் சிலர் நறுமணப் பொருட்களால் பரிமளதைலம் இறக்குவார்கள்.
1 நாளாகமம் 9 : 31 (IRVTA)
லேவியர்களில் கோராகியனான சல்லூமின் மூத்த மகனாகிய மத்தித்தியாவுக்குப் பலகாரம் சுடுகிற வேலையின் விசாரிப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
1 நாளாகமம் 9 : 32 (IRVTA)
அவர்கள் சகோதரர்களாகிய கோகாத்தியர்களின் மகன்களில் சிலருக்கு ஓய்வுநாள்தோறும் சமுகத்து அப்பங்களை ஆயத்தப்படுத்தும் விசாரிப்பு இருந்தது.
1 நாளாகமம் 9 : 33 (IRVTA)
இவர்களில் லேவியர்களுடைய குடும்பத்தலைவர்களாகிய சங்கீதக்காரர்கள் இரவும் பகலும் தங்களுடைய வேலையை நடத்தவேண்டியதிருந்ததால், மற்ற வேலைக்கு நீங்கலாகித் தங்களுடைய அறைகளில் இருந்தார்கள்.
1 நாளாகமம் 9 : 34 (IRVTA)
லேவியர்களில் குடும்பத்தலைவர்களாகிய இவர்கள் தங்களுடைய சந்ததிகளுக்குத் தலைமையானவர்கள்; இவர்கள் எருசலேமிலே குடியிருந்தார்கள்.
1 நாளாகமம் 9 : 35 (IRVTA)
சவுலின் வம்ச வரலாறு கிபியோனிலே குடியிருந்தவர்கள் யாரென்றால், கிபியோனின் மூப்பனாகிய யெகியேல், இவனுடைய மனைவியின் பெயர் மாக்காள்.
1 நாளாகமம் 9 : 36 (IRVTA)
அவன் மூத்த மகனாகிய அப்தோனும், சூர், கீஸ், பாகால், நேர், நாதாப்,
1 நாளாகமம் 9 : 37 (IRVTA)
கேதோர், அகியோ, சகரியா, மிக்லோத் என்பவர்களுமே.
1 நாளாகமம் 9 : 38 (IRVTA)
மிக்லோத் சீமியாமைப் பெற்றான்; இவர்களும் தங்களுடைய சகோதரர்களோடு எருசலேமிலிருக்கிற தங்களுடைய சகோதரர்களுக்கு சமீபத்தில் குடியிருந்தார்கள்.
1 நாளாகமம் 9 : 39 (IRVTA)
நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
1 நாளாகமம் 9 : 40 (IRVTA)
யோனத்தானின் மகன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.
1 நாளாகமம் 9 : 41 (IRVTA)
மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
1 நாளாகமம் 9 : 42 (IRVTA)
ஆகாஸ் யாராகைப் பெற்றான்; யாராக் அலமேத்தையும், அஸ்மவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
1 நாளாகமம் 9 : 43 (IRVTA)
மோசா பினியாவைப் பெற்றான்; இவனுடைய மகன் ரப்பாயா; இவனுடைய மகன் எலியாசா; இவனுடைய மகன் ஆத்சேல்.
1 நாளாகமம் 9 : 44 (IRVTA)
ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்களுடைய பெயர்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், சேராயா, ஒபதியா, ஆனான், இவர்கள் ஆத்சேலின் மகன்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44