1 நாளாகமம் 24 : 1 (IRVTA)
ஆசாரியர்களின் பிரிவுகள் ஆரோன் சந்ததிகளின் பிரிவுகளாவன: ஆரோனின் மகன்கள் நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.
1 நாளாகமம் 24 : 2 (IRVTA)
நாதாபும், அபியூவும் மகன்கள் இல்லாமல் தங்களுடைய தகப்பனுக்கு முன்னே இறந்ததால் எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.
1 நாளாகமம் 24 : 3 (IRVTA)
தாவீது சாதோக்கைக்கொண்டு எலெயாசாரின் சந்ததிகளையும், அகிமெலேக்கைக்கொண்டு இத்தாமாரின் சந்ததிகளையும் அவர்கள் செய்யவேண்டிய ஊழியத்திற்கு முறைப்படி அவர்களைப் பிரித்தான்.
1 நாளாகமம் 24 : 4 (IRVTA)
அவர்களைப் பிரிக்கிறபோது, இத்தாமாரின் சந்ததிகளைவிட எலெயாசாரின் சந்ததிகளுக்குள்ளே தலைவர்கள் அதிகமானபேர் இருந்ததால், எலெயாசாரின் மகன்களில் பதினாறுபேர் தங்களுடைய பிதாக்களுடைய குடும்பத்திற்கும், இத்தாமாரின் மகன்களில் எட்டுபேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்திற்கும் தலைவர்களாக வைக்கப்பட்டார்கள்.
1 நாளாகமம் 24 : 5 (IRVTA)
எலெயாசாரின் சந்ததியாரிலும் இத்தாமாரின் சந்ததியாரிலும், பரிசுத்த இடத்திற்கும், தேவனுக்கு அடுத்த காரியங்களில் பிரபுக்களாக இருக்கும்படி, இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்செய்யாமல் சீட்டுப்போட்டு அவர்களைப் பிரித்தார்கள்.
1 நாளாகமம் 24 : 6 (IRVTA)
லேவியர்களில் எழுத்தாளனாகிய செமாயா என்னும் நெதனெயேலின் மகன், ராஜாவுக்கும், பிரபுக்களுக்கும், ஆசாரியனாகிய சாதோக்குக்கும், அபியத்தாரின் மகனாகிய அகிமெலேக்குக்கும், ஆசாரியர்களும் லேவியர்களுமான குடும்பத்தார்களின் தலைவர்களுக்கு முன்பாக அவர்கள் பெயர்களை எழுதினான்; ஒரு குடும்பத்தின் சீட்டு எலெயாசாரின் சந்ததிக்கு விழுந்தது; பின்பு அப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது.
1 நாளாகமம் 24 : 7 (IRVTA)
முதலாவது சீட்டு யோயாரீபிற்கும், இரண்டாவது யெதாயாவிற்கும்,
1 நாளாகமம் 24 : 8 (IRVTA)
மூன்றாவது ஆரிமிற்கும், நான்காவது செயோரீமிற்கும்,
1 நாளாகமம் 24 : 9 (IRVTA)
ஐந்தாவது மல்கியாவிற்கும், ஆறாவது மியாமீனிற்கும்,
1 நாளாகமம் 24 : 10 (IRVTA)
ஏழாவது அக்கோத்சிற்கும், எட்டாவது அபியாவிற்கும்,
1 நாளாகமம் 24 : 11 (IRVTA)
ஒன்பதாவது யெசுவாவிற்கும், பத்தாவது செக்கனியாவிற்கும்,
1 நாளாகமம் 24 : 12 (IRVTA)
பதினோராவது எலியாசிபிற்கும், பன்னிரெண்டாவது யாக்கீமிற்கும்,
1 நாளாகமம் 24 : 13 (IRVTA)
பதின்மூன்றாவது உப்பாவிற்கும், பதினான்காவது எசெபெயாபிற்கும்,
1 நாளாகமம் 24 : 14 (IRVTA)
பதினைந்தாவது பில்காவிற்கும், பதினாறாவது இம்மேரிற்கும்,
1 நாளாகமம் 24 : 15 (IRVTA)
பதினேழாவது ஏசீரிற்கும், பதினெட்டாவது அப்சேசிற்கும்,
1 நாளாகமம் 24 : 16 (IRVTA)
பத்தொன்பதாவது பெத்தகியாவிற்கும், இருபதாவது எகெசெக்கியேலிற்கும்,
1 நாளாகமம் 24 : 17 (IRVTA)
இருபத்தோராவது யாகினிற்கும், இருபத்திரண்டாவது காமுவேலிற்கும்,
1 நாளாகமம் 24 : 18 (IRVTA)
இருபத்துமூன்றாவது தெலாயாவிற்கும், இருபத்துநான்காவது மாசியாவிற்கும் விழுந்தது.
1 நாளாகமம் 24 : 19 (IRVTA)
இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா அவர்களுடைய தகப்பனாகிய ஆரோனுக்குக் கற்பித்தபடியே, அவர்கள் அவனுடைய கட்டளையின்படி, தங்கள் செயல்முறை வரிசைகளில் யெகோவாவுடைய ஆலயத்திற்குள் நுழையும் அவர்களுடைய ஊழியத்திற்காகச் செய்யப்பட்ட வகுப்புகள் இவைகளே.
1 நாளாகமம் 24 : 20 (IRVTA)
மீதமுள்ள லேவியர்கள் லேவியின் மற்ற சந்ததிகளுக்குள்ளே இருக்கிற அம்ராமின் சந்ததியில் சூபவேலும், சூபவேலின் சந்ததியில் எகேதியாவும்,
1 நாளாகமம் 24 : 21 (IRVTA)
ரெகபியாவின் சந்ததியில் மூத்தவனாகிய இஷியாவும்,
1 நாளாகமம் 24 : 22 (IRVTA)
இத்சாரியர்களில் செலெமோத்தும், செலெமோத்தின் சந்ததியில் யாகாத்தும்,
1 நாளாகமம் 24 : 23 (IRVTA)
எப்ரோனின் சந்ததியில் மூத்தவனாகிய எரியாவும், இரண்டாம் மகனாகிய அமரியாவும், மூன்றாம் மகனாகிய யாகாசியேலும், நான்காம் மகனாகிய எக்காமியாமும்,
1 நாளாகமம் 24 : 24 (IRVTA)
ஊசியேலின் சந்ததியில் மீகாவும், மீகாவின் சந்ததியில் சாமீரும்,
1 நாளாகமம் 24 : 25 (IRVTA)
மீகாவின் சகோதரனாகிய இஷியாவும், இஷியாவின் மகன்களில் சகரியாவும்,
1 நாளாகமம் 24 : 26 (IRVTA)
மெராரியின் சந்ததியில் மகேலி, மூசி என்பவர்களும், யாசியாவின் சந்ததியில் பேனோவும்,
1 நாளாகமம் 24 : 27 (IRVTA)
மெராரியின் சந்ததியில் யாசியாவின் சந்ததியில் பேனோ, சோகாம், சக்கூர், இப்ரி என்பவர்களும்,
1 நாளாகமம் 24 : 28 (IRVTA)
மகேலியின் சந்ததியில் மகன்களில்லாத எலெயாசாரும்,
1 நாளாகமம் 24 : 29 (IRVTA)
கீசின் சந்ததியில் யெராமியேலும்,
1 நாளாகமம் 24 : 30 (IRVTA)
மூசியின் சந்ததியில் மகலி, ஏதேர், எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் தகப்பன்மார்களுடைய குடும்பங்களின்படியே வரிசைப்படுத்தப்பட்ட லேவியர்கள் இவர்களே.
1 நாளாகமம் 24 : 31 (IRVTA)
இவர்களும் ராஜாவாகிய தாவீதுக்கும் சாதோக்குக்கும் அகிமெலேக்குக்கும் ஆசாரியர்களிலும் லேவியர்களிலும் குடும்பத் தலைவர்களாக இருக்கிற தலைவர்களுக்கும் முன்பாக, தங்கள் சகோதரர்களாகிய ஆரோனின் சந்ததி செய்ததுபோல, தங்களில் இருக்கிற குடும்பத் தலைவர்களான தலைவர்களுக்கும், அவர்களுடைய சிறிய சகோதரர்களுக்கும் சரிசமமாக சீட்டு போட்டுக்கொண்டார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31