1 நாளாகமம் 23 : 1 (IRVTA)
லேவியர்கள் தாவீது வயது சென்றவனும் பூரண வயதுள்ளவனுமானபோது, தன்னுடைய மகனாகிய சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான்.
1 நாளாகமம் 23 : 2 (IRVTA)
இஸ்ரவேலின் எல்லாப் பிரபுக்களையும், ஆசாரியர்களையும், லேவியர்களையும் கூடிவரும்படிச் செய்தான்.
1 நாளாகமம் 23 : 3 (IRVTA)
அப்பொழுது முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர்கள் பெயர்பெயராக எண்ணப்பட்டார்கள்; தலைதலையாக எண்ணப்பட்ட அவர்களுடைய எண்ணிக்கை முப்பத்தெட்டாயிரம்.
1 நாளாகமம் 23 : 4 (IRVTA)
அவர்களில் இருபத்துநான்காயிரம்பேர் யெகோவாவுடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், ஆறாயிரம்பேர் தலைவர்களும் அலுவலர்களும் என்றும்,
1 நாளாகமம் 23 : 5 (IRVTA)
நான்காயிரம்பேர் வாசல் காக்கிறவர்களாக இருக்கவேண்டும் என்றும், துதி செய்வற்கு தான் செய்துவைத்த கீதவாத்தியங்களால் நான்காயிரம்பேர் யெகோவாவை துதிக்கிறவர்களாக இருக்கவேண்டும் என்றும் தாவீது சொல்லி,
1 நாளாகமம் 23 : 6 (IRVTA)
அவர்களை லேவியின் மகன்களாகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய குழுக்களின்படி பிரித்தான்.
1 நாளாகமம் 23 : 7 (IRVTA)
கெர்சோனியர்களில், லாதானும், சீமேயும் இருந்தார்கள்.
1 நாளாகமம் 23 : 8 (IRVTA)
லாதானின் மகன்கள் யெகியேல், சேத்தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைவனாக இருந்தான்.
1 நாளாகமம் 23 : 9 (IRVTA)
சீமேயின் மகன்கள் செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்று பேர்; இவர்கள் லாதான் வம்சத்தார்களின் தலைவர்களாக இறந்தார்கள்.
1 நாளாகமம் 23 : 10 (IRVTA)
யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்னும் நான்குபேர்களும் சீமேயின் மகன்களாக இருந்தார்கள்.
1 நாளாகமம் 23 : 11 (IRVTA)
யாகாத் தலைவனாக இருந்தான்; சீனா இரண்டாம் மகனாக இருந்தான்; எயூஷூக்கும் பெரீயாவுக்கும் அநேகம் மகன்கள் இல்லாததால், அவர்கள் தகப்பன்மார்களின் குடும்பத்தார்களில் ஒரே வம்சமாக எண்ணப்பட்டார்கள்.
1 நாளாகமம் 23 : 12 (IRVTA)
கோகாத்தியர்கள் கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்னும் நான்குபேர்.
1 நாளாகமம் 23 : 13 (IRVTA)
அம்ராமின் மகன்கள் ஆரோன், மோசே என்பவர்கள்; ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்தத்திற்குப் பரிசுத்தமான இடத்தை என்றென்றைக்கும் பரிசுத்தமாகக் காக்கவும், என்றைக்கும் யெகோவாவுக்கு முன்பாக தூபங்காட்டவும், அவருக்கு ஆராதனை செய்யவும், அவர் நாமத்திலே ஆசீர்வாதம் கொடுக்கவும் பிரித்துவைக்கப்பட்டார்கள்.
1 நாளாகமம் 23 : 14 (IRVTA)
தேவனுடைய மனிதனாகிய மோசேயின் மகன்களோ, லேவிகோத்திரத்தார்களுக்குள் எண்ணப்பட்டார்கள்.
1 நாளாகமம் 23 : 15 (IRVTA)
மோசேயின் மகன்கள் கெர்சோம் எலியேசர் என்பவர்கள்.
1 நாளாகமம் 23 : 16 (IRVTA)
கெர்சோமின் மகன்களில் செபுவேல் தலைவனாக இருந்தான்.
1 நாளாகமம் 23 : 17 (IRVTA)
எலியேசருடைய மகன்களில் ரெகபியா என்னும் அவனுடைய மகன் தலைவனாக இருந்தான்; எலியேசருக்கு வேறே மகன்கள் இல்லை; ரெகபியாவின் மகன்கள் அநேகராக இருந்தார்கள்.
1 நாளாகமம் 23 : 18 (IRVTA)
இத்சேயாரின் மகன்களில் செலோமித் தலைவனாக இருந்தான்.
1 நாளாகமம் 23 : 19 (IRVTA)
எப்ரோனின் மகன்களில் எரியா என்பவன் தலைவனாக இருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நான்காவது எக்காமியாம்.
1 நாளாகமம் 23 : 20 (IRVTA)
ஊசியேலின் மகன்களில் மீகா என்பவன் தலைவனாக இருந்தான்; இரண்டாவது இஷியா.
1 நாளாகமம் 23 : 21 (IRVTA)
மெராரியர்கள் மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் மகன்கள் எலெயாசார், கீஸ் என்பவர்கள்.
1 நாளாகமம் 23 : 22 (IRVTA)
எலெயாசார் மரணமடைகிறபோது, அவனுக்கு மகள்களே அன்றி மகன்கள் இல்லை; கீசின் மகன்களாகிய இவர்களுடைய சகோதரர்கள் இவர்களைத் திருமணம் செய்தார்கள்.
1 நாளாகமம் 23 : 23 (IRVTA)
மூசியின் மகன்கள் மகலி, ஏதேர், எரேமோத் என்னும் மூன்றுபேர்.
1 நாளாகமம் 23 : 24 (IRVTA)
தங்கள் பிதாகளுடைய குடும்பங்களின்படி, தகப்பன்மார்களில் தலைவனாக இருந்த லேவி சந்ததிகளின்படி பெயர்பெயராக குறிக்கப்பட்டபடி, தலைதலையாக எண்ணப்பட்ட இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இவர்களுடைய சந்ததியார்கள் யெகோவாவுடைய ஆலயத்துப் பணிவிடையைச் செய்தார்கள்.
1 நாளாகமம் 23 : 25 (IRVTA)
இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா தமது மக்களை இளைப்பாறியிருக்கச்செய்தார்; அவர்* அவர்கள் என்றென்றைக்கும் எருசலேமில் தங்குவார் என்றும்,
1 நாளாகமம் 23 : 26 (IRVTA)
இனி லேவியர்கள் தங்குமிடத்தையாவது அதின் ஊழியத்தில் அதின் பணிபொருட்களில் எதையாவது சுமக்கத் தேவையில்லை என்றும்,
1 நாளாகமம் 23 : 27 (IRVTA)
தாவீது அவர்களைக்குறித்துச் சொன்ன கடைசி வார்த்தைகளின்படியே, லேவி மகன்களில் எண்ணிக்கைக்கு உட்பட்டவர்கள் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக இருந்தார்கள்.
1 நாளாகமம் 23 : 28 (IRVTA)
அவர்கள் ஆரோனுடைய மகன்களின் கீழ் யெகோவாவுடைய ஆலயத்தின் ஊழியமாக நின்று, பிராகாரங்களையும், அறைகளையும், எல்லா பரிசுத்த பணிபொருட்களின் சுத்திகரிப்பையும், தேவனுடைய ஆலயத்தின் ஆராதனையின் வேலையையும் விசாரிப்பதும்,
1 நாளாகமம் 23 : 29 (IRVTA)
சமுகத்து அப்பங்களையும், உணவுபலிக்கு மெல்லிய மாவையும், புளிப்பில்லாத அதிரசங்களையும், சட்டிகளிலே செய்கிறதையும் சுடுகிறதையும், திட்டமான எல்லா எடையையும் அளவையும் விசாரிப்பதும்,
1 நாளாகமம் 23 : 30 (IRVTA)
நாள்தோறும் காலையிலும் மாலையிலும் யெகோவாவைப் போற்றித் துதித்து, ஓய்வு நாட்களிலும், அமாவாசைகளிலும், பண்டிகைகளிலும், யெகோவாவுக்கு சர்வாங்க தகனபலிகள் செலுத்தப்படுகிற எல்லா வேளைகளிலும்,
1 நாளாகமம் 23 : 31 (IRVTA)
எண்ணிக்கைக்கு உள்ளான அவர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டபடியே, எப்பொழுதும் அதின்படி செய்ய, யெகோவாவுக்கு முன்பாக நிற்பதும்,
1 நாளாகமம் 23 : 32 (IRVTA)
ஆசரிப்புக் கூடாரத்தின் காவலையும் பரிசுத்த இடத்தின் காவலையும் தங்களுடைய சகோதரர்களாகிய ஆரோனுடைய மகன்களின் காவலையும் காப்பதும், யெகோவாவுடைய ஆலயத்தின் பணிவிடையைச் செய்வதும், அவர்கள் வேலையாக இருந்தது.
❮
❯