1 நாளாகமம் 2 : 1 (IRVTA)
இஸ்ரவேலுடைய மகன்கள் இஸ்ரவேலின் மகன்கள் ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,
1 நாளாகமம் 2 : 2 (IRVTA)
தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் என்பவர்கள்.
1 நாளாகமம் 2 : 3 (IRVTA)
யூதாவின் மகன்கள் யூதாவின் மகன்கள் ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூன்று மகன்களும் சூவாவின் மகளான கானானிய பெண்ணிடம் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர் என்னும் யூதாவின் மூத்த மகன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாதவனானதால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.
1 நாளாகமம் 2 : 4 (IRVTA)
யூதாவின் மருமகளாகிய தாமார் அவனுக்குப் பாரேசையும் சேராவையும் பெற்றாள்; யூதாவின் மகன்கள் எல்லோரும் ஐந்துபேர்.
1 நாளாகமம் 2 : 5 (IRVTA)
பாரேசின் மகன்கள் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
1 நாளாகமம் 2 : 6 (IRVTA)
சேராவின் மகன்கள் எல்லோரும் சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.
1 நாளாகமம் 2 : 7 (IRVTA)
சாபத்தீடான காரியத்திலே துரோகம்செய்து இஸ்ரவேலைக் கலங்கச்செய்த ஆகார்* யோசுவா 7 அதிகாரம் பார்க்க என்பவன் கர்மீ மகன்களில் ஒருவன்.
1 நாளாகமம் 2 : 8 (IRVTA)
ஏத்தானின் மகன்கள் அசரியா முதலானவர்கள்.
1 நாளாகமம் 2 : 9 (IRVTA)
எஸ்ரோனுக்குப் பிறந்த மகன்கள் யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.
1 நாளாகமம் 2 : 10 (IRVTA)
எஸ்ரோனின் மகனாகிய ராமிலிருந்து ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா சந்ததியின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான்.
1 நாளாகமம் 2 : 11 (IRVTA)
நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.
1 நாளாகமம் 2 : 12 (IRVTA)
போவாஸ் ஓபேத்தைப் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்.
1 நாளாகமம் 2 : 13 (IRVTA)
ஈசாய் தன்னுடைய மூத்த மகன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் மகனையும், சம்மா என்னும் மூன்றாம் மகனையும்,
1 நாளாகமம் 2 : 14 (IRVTA)
நெதனெயேல் என்னும் நான்காம் மகனையும், ரதாயி என்னும் ஐந்தாம் மகனையும்,
1 நாளாகமம் 2 : 15 (IRVTA)
ஓத்சேம் என்னும் ஆறாம் மகனையும், தாவீது என்னும் ஏழாம் மகனையும் பெற்றான்.
1 நாளாகமம் 2 : 16 (IRVTA)
அவர்களுடைய சகோதரிகள் செருயாள், அபிகாயில் என்பவர்கள்; செருயாளின் மகன்கள், அபிசாய், யோவாப், ஆசகேல் என்னும் மூன்றுபேர்.
1 நாளாகமம் 2 : 17 (IRVTA)
அபிகாயில் அமாசாவைப் பெற்றாள்; அமாசாவின் தகப்பன் இஸ்மவேலனாகிய ஏத்தேர் என்பவன்.
1 நாளாகமம் 2 : 18 (IRVTA)
எஸ்ரோனின் மகனாகிய காலேப் எஸ்ரோனின் மகன் காலேப் எரீயோத் காலேபுடைய மகளாக இருக்கலாம் என்னப்பட்ட தன்னுடைய மனைவியாகிய அசுபாளாலே பெற்ற மகன்கள் ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள்.
1 நாளாகமம் 2 : 19 (IRVTA)
அசுபாள் இறந்த பின்பு காலேப் எப்ராத்தைத் திருமணம் செய்தான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள்.
1 நாளாகமம் 2 : 20 (IRVTA)
ஊர் ஊரியைப் பெற்றான்; ஊரி பெசலெயேலைப் பெற்றான்.
1 நாளாகமம் 2 : 21 (IRVTA)
பின்பு, எஸ்ரோன் அறுபது வயதானபோது கிலெயாத்தினுடைய தகப்பனாகிய மாகீரினுடைய மகளைத் திருமணம்செய்தான்; இவள் அவனுக்குச் செகூபைப் பெற்றாள்.
1 நாளாகமம் 2 : 22 (IRVTA)
செகூப் யாவீரைப் பெற்றான்; இவனுக்குக் கீலேயாத் தேசத்தில் இருபத்து மூன்று ஊர்கள் இருந்தது.
1 நாளாகமம் 2 : 23 (IRVTA)
கெசூரும், ஆராமும் யாவீரின் கிராமங்களையும், கேனாத்திலுள்ள கிராமங்களாகிய அறுபது ஊர்களையும் எடுத்துக்கொண்டார்கள்; இவர்கள் எல்லோரும் கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் மகன்கள்.
1 நாளாகமம் 2 : 24 (IRVTA)
காலேபினுடைய ஊரான எப்ராத்தாவில் எஸ்ரோன் இறந்தபின்பு, எஸ்ரோனின் மனைவியாகிய அபியாள் அவனுக்கு தெக்கோவாவின் தகப்பனாகிய அசூரைப் பெற்றாள்.
1 நாளாகமம் 2 : 25 (IRVTA)
எஸ்ரோனின் மகனாகிய யெர்மெயேல் எஸ்ரோனுக்கு முதலில் பிறந்த யெர்மெயேலின் மகன்கள் ராம் என்னும் மூத்தவனும், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா என்பவர்களுமே.
1 நாளாகமம் 2 : 26 (IRVTA)
அத்தாராள் என்னும் பெயருள்ள வேறொரு மனைவியும் யெர்மெயேலுக்கு இருந்தாள்; இவள் ஓனாமின் தாய்.
1 நாளாகமம் 2 : 27 (IRVTA)
யெர்மெயேலுக்கு முதலில் பிறந்த ராமின் மகன்கள் மாஸ், யாமின், எக்கேர் என்பவர்கள்.
1 நாளாகமம் 2 : 28 (IRVTA)
ஓனாமின் மகன்கள் சம்மாய், யாதா என்பவர்கள்; சம்மாயின் மகன்கள் நாதாப், அபிசூர் என்பவர்கள்.
1 நாளாகமம் 2 : 29 (IRVTA)
அபிசூருடைய மனைவியின் பெயர் அபியாயேல்; அவள் அவனுக்கு அக்பானையும் மோளிதையும் பெற்றாள்.
1 நாளாகமம் 2 : 30 (IRVTA)
நாதாபினுடைய மகன்கள் சேலேத், அப்பாயிம் என்பவர்கள்; சேலேத் பிள்ளைகள் இல்லாமல் இறந்தான்.
1 நாளாகமம் 2 : 31 (IRVTA)
அப்பாயிமின் மகன் இஷி; இஷியின் மகன் சேசான்; சேசானின் மகள் அக்லாய்.
1 நாளாகமம் 2 : 32 (IRVTA)
சம்மாயினுடைய சகோதரனாகிய யாதாவினுடைய மகன்கள், யெத்தெர், யோனத்தான் என்பவர்கள்; யெத்தெர் பிள்ளைகள் இல்லாமல் இறந்தான்.
1 நாளாகமம் 2 : 33 (IRVTA)
யோனத்தானின் மகன்கள், பேலேத், சாசா என்பவர்கள்; இவர்கள் யெர்மெயேலின் சந்ததி.
1 நாளாகமம் 2 : 34 (IRVTA)
சேசானுக்கு மகள்களைத் தவிர மகன்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பெயருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.
1 நாளாகமம் 2 : 35 (IRVTA)
சேசான் தன்னுடைய மகளைத் தன் வேலைக்காரனாகிய யர்காவுக்கு திருமணம் செய்துகொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்.
1 நாளாகமம் 2 : 36 (IRVTA)
அத்தாயி நாதானைப் பெற்றான். நாதான் சாபாதைப் பெற்றான்.
1 நாளாகமம் 2 : 37 (IRVTA)
சாபாத் எப்லாலைப் பெற்றான்; எப்லால் ஓபேதைப் பெற்றான்.
1 நாளாகமம் 2 : 38 (IRVTA)
ஓபேத் ஏகூவைப் பெற்றான்; ஏகூ அசரியாவைப் பெற்றான்.
1 நாளாகமம் 2 : 39 (IRVTA)
அசரியா எலேசைப் பெற்றான்; ஏலேஸ் எலெயாசாவைப் பெற்றான்.
1 நாளாகமம் 2 : 40 (IRVTA)
எலெயாசா சிஸ்மாயைப் பெற்றான்; சிஸ்மாய் சல்லூமைப் பெற்றான்.
1 நாளாகமம் 2 : 41 (IRVTA)
சல்லூம் எக்கமியாவைப் பெற்றான்; எக்கமியா எலிஷாமாவைப் பெற்றான்.
1 நாளாகமம் 2 : 42 (IRVTA)
காலேபின் சந்ததி யெர்மெயேலின் சகோதரனாகிய காலேபின் மகன்கள் முதலில் பிறந்த சீப்பின் தகப்பனாகிய மேசாவும், எப்ரோனின் தகப்பனாகிய மெரேசாவின் மகன்களுமே.
1 நாளாகமம் 2 : 43 (IRVTA)
எப்ரோனின் மகன்கள் கோராகு, தப்புவா, ரெக்கேம், செமா என்பவர்கள்.
1 நாளாகமம் 2 : 44 (IRVTA)
செமா யோர்க்கேயாமின் தகப்பனாகிய ரெக்கேமைப் பெற்றான்; ரெக்கேம் சம்மாயைப் பெற்றான்.
1 நாளாகமம் 2 : 45 (IRVTA)
சம்மாயின் மகன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.
1 நாளாகமம் 2 : 46 (IRVTA)
காலேபின் மறுமனையாட்டியாகிய எப்பாள் ஆரானையும், மோசாவையும், காசேசையும் பெற்றாள்; ஆரான் காசேசைப் பெற்றான்.
1 நாளாகமம் 2 : 47 (IRVTA)
யாதாயின் மகன்கள் ரேகேம், யோதாம், கேசான், பேலேத், எப்பா, சாகாப் என்பவர்கள்.
1 நாளாகமம் 2 : 48 (IRVTA)
காலேபின் மறுமனையாட்டியாகிய மாகாள் சேபேரையும் திர்கானாவையும் பெற்றாள்.
1 நாளாகமம் 2 : 49 (IRVTA)
அவள் மத்மன்னாவின் தகப்பனாகிய சாகாபையும், மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தகப்பனாகிய சேவாவையும் பெற்றாள்; காலேபின் மகள் அக்சாள் என்பவள்.
1 நாளாகமம் 2 : 50 (IRVTA)
எப்ராத்தாளிடம் முதலில் பிறந்த ஊருடைய மகனாகிய காலேபினுடைய மகன்கள் கீரியாத்யாரீமின் மூப்பனான சோபாலும்,
1 நாளாகமம் 2 : 51 (IRVTA)
பெத்லெகேமின் மூப்பனான சல்மாவும், பெத்காதேரின் மூப்பனான ஆரேப்புமே.
1 நாளாகமம் 2 : 52 (IRVTA)
கீரியாத்யாரிமின் மூப்பனான சோபாலின் மகன்கள், ஆரோவே, ஆசியம் மெனுகோத் என்பவர்கள்.
1 நாளாகமம் 2 : 53 (IRVTA)
கீரியாத்யாரிமிலிருந்த வம்சங்கள், இத்ரியர்களும் பூகியர்களும் சுமாத்தியர்களும் மிஸ்ராவியர்களுமே; இவர்களிடம் சோராத்தியர்களும், எஸ்தாவோலியர்களும் பிறந்தார்கள்.
1 நாளாகமம் 2 : 54 (IRVTA)
சல்மாவின் சந்ததிகள் பெத்லெகேமியர்களும், நெத்தோப்பாத்தியர்களும், பெத்யோவாப் என்னும் அதரோத் ஊர்க்காரர்களும், மானாத்தியர்களிலும் சோரியர்களிலும் பாதி மக்களுமே.
1 நாளாகமம் 2 : 55 (IRVTA)
யாபேசில் குடியிருந்த வேத வல்லுனர்களுடைய வம்சங்கள் திராத்தியர்களும் சிமாத்தியர்களும் சுக்காத்தியர்களுமே; ரேகாப் வீட்டாரின் தகப்பனாகிய அம்மாத்தின் சந்ததியார்களான கேனியர்கள் இவர்களே.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55