சகரியா 2 : 1 (ERVTA)
எருசலேமின் அளவுகள் பிறகு நான் பார்த்தேன், நான் ஒரு மனிதன், அளவு கயிற்றினை எடுத்துக் கொண்டு நிற்பதைக் கண்டேன்.
சகரியா 2 : 2 (ERVTA)
நான் அவனிடம், “எங்கே போய்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டேன். அவன் என்னிடம், “நான் எருசலேமை அளந்து எவ்வளவு நீளம் எவ்வளவு அகலம் எனப் பார்க்கப் போகிறேன்” என்றான்.
சகரியா 2 : 3 (ERVTA)
பிறகு என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதன் விலகினான். இன்னொரு தூதன் அவனோடு பேசப் போனான்.
சகரியா 2 : 4 (ERVTA)
அவன் அவனிடம், “ஓடிப்போய் அந்த இளைஞனிடம் எருசலேமானது அளக்க முடியாத வகையில் பெரிதாக உள்ளது என்று சொல். அவனிடம் இவற்றைச் சொல்! “ ‘எருசலேம் சுவர்களில்லாத நகரமாகும். ஏனென்றால் அங்கே ஏராளமான ஜனங்களும் மிருகங்களும் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றன.’
சகரியா 2 : 5 (ERVTA)
கர்த்தர் கூறுகிறார்: ‘நான் அவளைக் காப்பாற்றுவதற்கு அவளைச் சுற்றி நெருப்புச் சுவராக இருப்பேன். அந்நகரத்திற்கு மகிமையைக் கொண்டுவர நான் அங்கே குடியிருப்பேன்’ ” என்றான். தேவன் தமது ஜனங்களை வீட்டிற்கு அழைக்கின்றார் கர்த்தர் கூறுகிறார்:
சகரியா 2 : 6 (ERVTA)
“சீக்கிரம்! வடக்கே உள்ள நிலத்திலிருந்து ஓடு. ஆம், நான் உங்கள் ஜனங்களை எல்லாத் திசைகளுக்கும் சிதறடித்தேன் என்பது உண்மை.
சகரியா 2 : 7 (ERVTA)
சீயோனிலிருந்து உனது ஜனங்கள் பாபிலோனில் கைதிகளாக இருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது தப்பி, அந்த நகரத்திலிருந்து வெளியே ஓடுங்கள்!”
சகரியா 2 : 8 (ERVTA)
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார். உன்னிடமிருந்து திருடிய ஜனங்களிடத்திற்கு என்னை அனுப்பினார். உங்களைக் கனப்படுத்தும்படி என்னை அனுப்பினார். ஏனென்றால், யார் உன்னைக் காயப்படுத்தினாலும், அது தேவனுடைய கண்மணியைக் காயப்படுத்துவது போன்றதாகும்.
சகரியா 2 : 9 (ERVTA)
பாபிலோனியர், என் ஜனங்களை அடிமைப்படுத்தினார்கள். ஆனால் நான் அவர்களைப் பலமாக அடிப்பேன், அவர்கள் என் ஜனங்களின் அடிமைகளாவார்கள், பிறகு சர்வ வல்லமையுள்ள கர்த்தர் என்னை அனுப்பினார் என்பதை அறிவார்கள்.
சகரியா 2 : 10 (ERVTA)
கர்த்தர் கூறுகிறார்: “சீயோனே, மகிழ்ச்சியோடு இரு. ஏனென்றால், நான் வந்துக்கொண்டிருக்கிறேன். நான் உங்கள் நகரத்தில் வாழ்வேன்.
சகரியா 2 : 11 (ERVTA)
அந்த நேரத்தில், பல நாடுகளிலிருந்து ஜனங்கள் என்னிடம் வருவார்கள். அவர்கள் எனது ஜனங்களாவார்கள். நான் உங்கள் நகரில் வாழ்வேன்” பிறகு, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் என்னை அனுப்பினார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
சகரியா 2 : 12 (ERVTA)
கர்த்தர் எருசலேமைத் தனது சிறப்புக்குரிய நகரமாகத் தேர்ந்தெடுப்பார். யூதா பரிசுத்தமான நாடாக, அவரது பங்காகச் சேரும்.
சகரியா 2 : 13 (ERVTA)
ஒவ்வொருவரும் அமைதியாக இருப்பார்கள். கர்த்தர் அவரது பரிசுத்தமான வீட்டை விட்டு வெளியே வருவார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13