உன்னதப்பாட்டு 7 : 1 (ERVTA)
அவன் அவளது அழகைப் புகழ்கிறான் இளவரசியே! மிதியடியணிந்த உன் பாதங்கள் மிக அழகாயுள்ளன. உன் இடுப்பின் வளைவுகள் ஒரு தொழில் கலைஞனால் செய்யப்பட்ட நகை போன்றுள்ளது.
உன்னதப்பாட்டு 7 : 2 (ERVTA)
உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டமான கிண்ணம்போல உள்ளது. உன் வயிறானது லீலிமலர்கள் சூழ்ந்த கோதுமைக்குவியல் போன்றுள்ளது.
உன்னதப்பாட்டு 7 : 3 (ERVTA)
உன் இரு மார்பகங்களும் வெளிமானின் இரு குட்டிகள் போன்றுள்ளன.
உன்னதப்பாட்டு 7 : 4 (ERVTA)
உன் கழுத்து தந்தக் கோபுரம் போலுள்ளது. உன் கண்கள் பத்ரபீம் வாயிலருகே உள்ள எஸ்போன் குளங்கள்போல உள்ளன. உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கியுள்ள லீபனோனின் கோபுரம் போன்றுள்ளது.
உன்னதப்பாட்டு 7 : 5 (ERVTA)
உன் தலையானது கர்மேல் மலையைப் போன்றுள்ளது. உன் தலைமுடி பட்டு போன்றுள்ளது. உன் நீண்ட அசையும் கூந்தலானது அரசனையும் சிறைபிடிக்கவல்லது.
உன்னதப்பாட்டு 7 : 6 (ERVTA)
நீ மிகவும் அழகானவள். நீ மனதிற்கு மகிழ்ச்சியைத் தருபவள். நீ அன்பான, மகிழ்வளிக்கிற இளம் கன்னி.
உன்னதப்பாட்டு 7 : 7 (ERVTA)
நீ பனை மரத்தைப்போன்று உயரமானவள். உன் மார்பகங்கள் அம்மரத்தில் உள்ள கனிகளைப் போன்றுள்ளன.
உன்னதப்பாட்டு 7 : 8 (ERVTA)
நான் இம்மரத்தில் ஏறவிரும்புகிறேன். இதன் கிளைகளைப் பற்றிக்கொள்வேன். இப்போது உன் மார்பகங்கள் திராட்சைக் குலைகளைப் போலவும், உன் சுவாசத்தின் வாசனை கிச்சிலிப் பழங்கள் போலவும் இருப்பதாக.
உன்னதப்பாட்டு 7 : 9 (ERVTA)
உன் வாய் என் அன்பிற்குள் நேராக இறங்கும் தூங்குகிறவர்களின் உதடுகளிலும் இறங்கும் சிறந்த திராட்சைரசத்தைப் போன்றிருப்பதாக.
உன்னதப்பாட்டு 7 : 10 (ERVTA)
அவள் அவனோடு பேசுகிறாள் நான் என் நேசருக்கு உரியவள். அவருக்கு நான் தேவை.
உன்னதப்பாட்டு 7 : 11 (ERVTA)
என் நேசரே வாரும் வயல்வெளிகளுக்குப் போவோம் இரவில் கிராமங்களில் தங்குவோம்.
உன்னதப்பாட்டு 7 : 12 (ERVTA)
அதிகாலையில் எழுந்து திராட்சைத் தோட்டங்களுக்குப் போவோம். திராட்சைக் கொடிகள் பூப்பதைப் பார்ப்போம். மாதளஞ் செடிகள் பூத்ததையும் பார்ப்போம். அங்கே என் நேசத்தை உமக்குத் தருவேன்.
உன்னதப்பாட்டு 7 : 13 (ERVTA)
தூதாயீம் பழத்தின் மணம் வீசும் எல்லா வகைப் பூக்களும் நம் வாசலருகில் உள்ளன. ஆம் என் அன்பரே உமக்காக நான் பல மகிழ்ச்சியான பொருட்களை சேர்த்து வைத்திருக்கிறேன். அவை பழையதும் புதியதுமாக அருமையாக உள்ளன.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13