உன்னதப்பாட்டு 4 : 1 (ERVTA)
{அவன் அவளோடு பேசுகிறான்} [PS] என் அன்பே! நீ அழகானவள். [QBR2] ஓ நீ அழகானவள். [QBR] உன் முக்காட்டின் நடுவே உனது கண்கள் [QBR2] புறாக்களின் கண்களைப் போன்றுள்ளன. [QBR] உன் நீண்ட கூந்தல் கீலேயாத் மலைச்சரிவில் [QBR2] நடன மாடிக்கொண்டிருக்கும் வெள்ளாட்டு மந்தை போல அசைந்துகொண்டிருக்கிறது. [QBR]
உன்னதப்பாட்டு 4 : 2 (ERVTA)
உன் பற்கள் வெள்ளைப் பெண் ஆட்டுக் குட்டிகள் குளித்து கரையேறுவது போன்றுள்ளன. [QBR2] அவை இரட்டைக் குட்டிகள் போட்டு எந்தக் குட்டியையும் இழக்காத ஆட்டினைப்போன்றுள்ளன. [QBR]
உன்னதப்பாட்டு 4 : 3 (ERVTA)
உனது உதடுகள் சிவந்த பட்டுக் கயிற்றைப் போன்றுள்ளன. [QBR2] உனது வாய் அழகானது. [QBR] உனது கன்னங்கள் முக்காட்டின் நடுவே [QBR2] வெட்டி வைக்கப்பட்ட மாதுளம் பழம்போல் உள்ளன. [QBR]
உன்னதப்பாட்டு 4 : 4 (ERVTA)
உன் கழுத்து நீண்டு மென்மையாக தாவீதின் கோபுரம்போல் உள்ளது. [QBR2] அக்கோபுரத்தின் சுவர்கள் ஆயிரம் வீரர்களின் கேடயங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. [QBR]
உன்னதப்பாட்டு 4 : 5 (ERVTA)
உன் இரண்டு மார்பகங்களும் லீலி மலர்களை மேயும் [QBR2] வெளிமானின் இரட்டைக் குட்டிகளைப் போலுள்ளன. [QBR]
உன்னதப்பாட்டு 4 : 6 (ERVTA)
பகலின் கடைசி மூச்சு இருக்கும்போதும் நிழல் சாயும்போதும், [QBR2] நான் வெள்ளைப்போள மலைக்கும் சாம்பிராணி மலைக்கும் போவேன். [QBR]
உன்னதப்பாட்டு 4 : 7 (ERVTA)
என் அன்பே, முழுவதும் நீ அழகானவள் [QBR2] உனக்கு எதிலும் குறைவில்லை. [QBR]
உன்னதப்பாட்டு 4 : 8 (ERVTA)
என்னோடு வா, என் மணமகளே [QBR2] லீபனோனிலிருந்து என்னோடு வா. [QBR] அமனா மலையின் உச்சியிலிருந்து வா. [QBR2] சேனீர் எர்மோனின் சிகரங்களிலிருந்தும், [QBR2] சிங்கக் குகைகளிலிருந்தும், சிறுத்தைகளினுடைய மலைகளிலிருந்தும் வா. [QBR]
உன்னதப்பாட்டு 4 : 9 (ERVTA)
என் அன்பே! என் மணமகளே! [QBR2] என்னைக் கவர்ந்தவள் நீ உன் ஒரு கண்ணால், [QBR2] உன் கழுத்திலுள்ள ஒரு நகையால் என் இதயத்தைக் கவர்ந்துவிட்டாய். [QBR]
உன்னதப்பாட்டு 4 : 10 (ERVTA)
என் அன்பே, என் மணமகளே, [QBR2] உன் அன்பு மிக அழகானது. [QBR] உன் அன்பு திராட்சை ரசத்தைவிடச் சிறந்தது. [QBR2] உன் பரிமள தைலங்களின் மணம் சகல சுகந்தவர்க்கங்களின் மணத்தைவிடச் சிறந்தது. [QBR]
உன்னதப்பாட்டு 4 : 11 (ERVTA)
என் மணமகளே! உன் உதடுகளில் தேன் ஒழுகுகிறது. [QBR2] உன் நாவின் அடியில் பாலும் தேனும் ஊறுகிறது. [QBR] உன் ஆடைகளின் மணம் வீபனோனின் மணம்போல் உள்ளது. [QBR]
உன்னதப்பாட்டு 4 : 12 (ERVTA)
என் அன்பே! என் மணமகளே! நீ சுத்தமானவள். [QBR2] நீ பூட்டப்பட்ட தோட்டத்தைப் போன்றும், [QBR] பூட்டிவைக்கப்பட்ட குளத்தைப் போன்றும், [QBR2] அடைக்கப்பட்ட நீரூற்றைப்போன்றும் இருக்கிறாய். [QBR]
உன்னதப்பாட்டு 4 : 13 (ERVTA)
உன் பக்க உறுப்புகள் ஒரு தோட்டம் மாதளஞ் செடிகளாலும் [QBR2] மற்ற பழமரங்களாலும் நிறைந்துள்ளதுபோல் உள்ளன, நளதம்.
உன்னதப்பாட்டு 4 : 14 (ERVTA)
குங்குமம், வசம்பு, லவங்கம், [QBR2] தூபவர்க்க மரங்களும் வெள்ளைப்போளச் செடிகளும் சந்தன [QBR2] மரங்களும் சகலவித மணப்பொருள் செடிகளும் உள்ள தோட்டம் போலுள்ளன. [QBR]
உன்னதப்பாட்டு 4 : 15 (ERVTA)
நீ தோட்டத்து நீரூற்று போன்றவள் [QBR2] சுத்தமான தண்ணீருள்ள கிணறும், [QBR2] லீபனோன் மலையிலிருந்து ஓடிவரும் ஓடைகளும் அதிலே உள்ளன.
உன்னதப்பாட்டு 4 : 16 (ERVTA)
{அவள் பேசுகிறாள்} [PS] வாடைக் காற்றே எழும்பு. [QBR2] தென்றலே வா. [QBR] என் தோட்டத்தில் வீசு. [QBR2] உன் இனிய மணத்தைப் பரப்பு. [QBR] என் அன்பரைத் தன் தோட்டத்திற்குள் நுழையவிடு. [QBR2] அவர் இனிய பழங்களைச் சாப்பிடட்டும். [PE]
❮
❯