உன்னதப்பாட்டு 3 : 1 (ERVTA)
அவள் பேசுகிறாள் இரவில் என் படுக்கைமேல் நான் நேசருக்காகக் காத்திருக்கிறேன். நான் அவருக்காக எதிர்பார்த்திருந்தேன். ஆனால் என்னால் அவரைக் கண்டு பிடிக்க இயலவில்லை.
உன்னதப்பாட்டு 3 : 2 (ERVTA)
இப்போது எழுந்திருந்து நான் நகரைச் சுற்றி வருவேன். அங்குள்ள வீதிகளிலும் சந்துக்கங்களிலும் என் நேசரைத் தேடுவேன். நான் அவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் என்னால் அவரைக் காணமுடியவில்லை.
உன்னதப்பாட்டு 3 : 3 (ERVTA)
நகர காவலர்கள் என்னைக் கண்டார்கள். நான் அவர்களிடம், “எனது நேசரைக் கண்டீர்களா?” எனக்கேட்டேன்.
உன்னதப்பாட்டு 3 : 4 (ERVTA)
காவலர்கள் என்னைவிட்டுப் போனதும், நான் என் நேசரைக் கண்டுபிடித்தேன். அவரைப் பற்றிக் கொண்டேன். என் தாய் வீட்டில் என்னைப் பெற்றெடுத்த, என் தாயின் அறைக்கு அவரை நான் அழைத்துச் செல்லும்வரை நான் அவரைப் போகவிடவில்லை.
உன்னதப்பாட்டு 3 : 5 (ERVTA)
அவள் பெண்களோடு பேசுகிறாள் எருசலேமின் பெண்களே, நான் தயாராகும்வரை, என் அன்பை விழிக்கச் செய்து எழுப்பாமலிருக்க மான்களின் மீதும் மான்குட்டிகளின் மீதும் வாக்குறுதி கொடுங்கள்.
உன்னதப்பாட்டு 3 : 6 (ERVTA)
அவனும் அவனது மணப்பெண்ணும் + பெரும் ஜனங்கள் கூட்டத்தோடு வனாந்தரத்திலிருந்து வருகின்ற அந்தப் பெண் யார்? மேகங்களின் கூட்டத்தைப்போல வெள்ளைப் போளத்திலும், சாம்பிராணியிலும், சகல நறுமணத்திலும், வரும் புகைபோல அவர்களுக்குப் பின்னால் புழுதி எழும்புகிறது.
உன்னதப்பாட்டு 3 : 7 (ERVTA)
பார், சாலொமோனின் இந்தப் பல்லக்கு இஸ்ரவேலின் பலம்வாய்ந்த 60 வீரர்கள் அதனைச் சுற்றிப் பாதுகாத்து நிற்கிறார்கள்.
உன்னதப்பாட்டு 3 : 8 (ERVTA)
அவர்கள் அனைவரும் போர்ப் பயிற்சி பெற்றவர்கள். அவர்களின் இடுப்பில் வாள்கள் உள்ளன. இரவில் எந்த ஆபத்துக்கும் தயாராக உள்ளனர்.
உன்னதப்பாட்டு 3 : 9 (ERVTA)
சாலொமோன் அரசன் தனக்காக ஒரு பல்லக்கு செய்திருக்கிறான். அதற்கான மரம் லீபனோனில் இருந்து கொண்டுவரப்பட்டது.
உன்னதப்பாட்டு 3 : 10 (ERVTA)
அதன் தூண்கள் வெள்ளியால் ஆனது. அதன் இருக்கை நீலங்கலந்த சிவப்பு நிறமான துணியால் மூடப்பட்டிருந்தது. எருசலேமின் பெண்கள் அதன் உட்பகுதியை மிகப் பிரியத்தோடு அன்பால் அலங்கரித்திருக்கிறார்கள்.
உன்னதப்பாட்டு 3 : 11 (ERVTA)
சீயோனின் பெண்களே! வெளியே வாருங்கள். சாலொமோன் அரசனைப் பாருங்கள். திருமண நாளில் அவனது தலைமேல் அவன் தாய் அணிவித்த கிரீடத்தை பாருங்கள். அந்த நாளில் அவன் மிகுந்த சந்தோஷமாய் இருந்தான்.
❮
❯