உன்னதப்பாட்டு 2 : 1 (ERVTA)
நான் சரோனில் பூத்த ரோஜா. பள்ளத்தாக்குகளில் மலர்ந்த லீலிபுஷ்பம்!
உன்னதப்பாட்டு 2 : 2 (ERVTA)
அவன் பேசுகிறான் எனது அன்பே! முட்களுக்கு இடையில் லீலி புஷ்பம்போல் நீ மற்ற பெண்களுக்கிடையில் இருக்கிறாய்.
உன்னதப்பாட்டு 2 : 3 (ERVTA)
அவள் பேசுகிறாள் என் அன்பரே! காட்டு மரங்களுக்கிடையில் கிச்சிலி மரத்தைப்போல் மற்ற ஆண்களுக்கிடையில் நீர் இருக்கிறீர். அவள் பெண்களுடன் பேசுகிறாள் எனது நேசரின் நிழலில் உட்கார்ந்துகொண்டு நான் மகிழ்கிறேன். அவரின் கனி எனது சுவைக்கு இனிப்பாக உள்ளது.
உன்னதப்பாட்டு 2 : 4 (ERVTA)
என் நேசர் என்னை விருந்து சாலைக்கு அழைத்துப்போனார். என்மீதுள்ள நேசத்தை வெளிப்படுத்துவதே அவரது நோக்கம்.
உன்னதப்பாட்டு 2 : 5 (ERVTA)
காய்ந்த திராட்சையினால் செய்யப்பட்ட பலகாரத்தால் என்னைப் பலப்படுத்துங்கள். கிச்சிலிப் பழங்களால் எனக்குப் புத்துணர்ச்சி ஊட்டுங்கள். ஏனென்றால் நான் நேசத்தினிமித்தம் பலவீனமாகியுள்ளேன்.
உன்னதப்பாட்டு 2 : 6 (ERVTA)
என் நேசரின் இடதுகை என் தலையின் கீழுள்ளது. அவரது வலது கை என்னை அணைத்துக்கொள்கிறது.
உன்னதப்பாட்டு 2 : 7 (ERVTA)
எருசலேமின் பெண்களே, நான் தயாராகும்வரை, நீங்கள் என் அன்பை விழிக்கச் செய்யாமலும், அல்லது எழுப்பாமலும் இருக்க மான்கள் மீதும் காட்டு மான்கள் மீதும் வாக்குறுதி கொடுங்கள்.
உன்னதப்பாட்டு 2 : 8 (ERVTA)
அவள் மீண்டும் பேசுகிறாள் நான் என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன். இங்கே அது வந்தது. மலைகளுக்கு மேல் துள்ளி வந்தது. குன்றுகளுக்குமேல் சறுக்கி வந்தது.
உன்னதப்பாட்டு 2 : 9 (ERVTA)
என் நேசர் வெளிமான் அல்லது குட்டி மானைப் போன்றவர். அவர் எங்கள் சுவற்றுக்குப் பின்னால் நிற்பதையும், ஜன்னல் திரையின் வழியாகப் பார்ப்பதையும் நீங்கள் பார்க்கலாம்.
உன்னதப்பாட்டு 2 : 10 (ERVTA)
என் நேசர் என்னிடம், “எழுந்திரு என் அன்பே! என் அழகே! வெளியே போகலாம்.
உன்னதப்பாட்டு 2 : 11 (ERVTA)
பார், மழைக்காலம் போய்விட்டது. மழை வந்து போனது.
உன்னதப்பாட்டு 2 : 12 (ERVTA)
பூமியில் பூக்கள் மலர்ந்துள்ளன. இது பாடுவதற்குரிய காலம். கவனி, புறாக்கள் திரும்பிவிட்டன.
உன்னதப்பாட்டு 2 : 13 (ERVTA)
அத்தி மரங்களில் காய்கள் தோன்றியுள்ளன. திராட்சைக் கொடிகள் மணம் வீசுவதை நுகர்ந்துபார். எழுந்திரு என் அன்பே, அழகே, நாம் வெளியே போகலாம்.
உன்னதப்பாட்டு 2 : 14 (ERVTA)
அவன் பேசுகிறான் என் புறாவே நீ கன்மலையின் வெடிப்புகளிலும் மலைகளின் மறைவிடங்களிலும் மறைந்துள்ளாய். உன்னைப் பார்க்கவிடு, உன் குரலைக் கேட்கவிடு, உன் குரல் மிக இனிமையானது. நீ மிக அழகானவள்” என்று கூறுகிறார்.
உன்னதப்பாட்டு 2 : 15 (ERVTA)
அவள் பெண்களுடன் பேசுகிறாள் திராட்சை தோட்டங்களை அழிக்கிற சிறு நரிகளையும், குழிநரிகளை எங்களுக்காக பிடியுங்கள். நம் திராட்சைத் தோட்டங்கள் இப்போது பூத்துள்ளன.
உன்னதப்பாட்டு 2 : 16 (ERVTA)
என் நேசர் எனக்குரியவர். நான் அவருக்குரியவள்.
உன்னதப்பாட்டு 2 : 17 (ERVTA)
பகல் தனது கடைசி மூச்சை சுவாசிக்கும்போதும், நிழல் சாயும்போதும், அவர் லீலி மலர்களுக்கிடையில் மேய்கிறார். என் அன்பரே திரும்பும், இரட்டைக் குன்றுகளின் பகுதிகளிலுள்ள வெளிமான்களைப் போலவும், குட்டி மான்களைப் போலவும் இரும்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17