சங்கீதம் 97 : 1 (ERVTA)
கர்த்தர் ஆளுகிறார், பூமி மகிழும். தூரத்துத் தேசங்கள் எல்லாம் மகிழ்கின்றன.
சங்கீதம் 97 : 2 (ERVTA)
அடர்ந்த இருண்ட மேகங்கள் கர்த்தரைச் சூழும். நன்மையும் நீதியும் அவர் அரசை வலிமையாக்கும்.
சங்கீதம் 97 : 3 (ERVTA)
கர்த்தருக்கு முன்னே ஒரு அக்கினி செல்கிறது, அது பகைவரை அழிக்கிறது.
சங்கீதம் 97 : 4 (ERVTA)
வானத்தில் அவரது மின்னல் மின்னுகிறது. ஜனங்கள் அதைக் கண்டு அஞ்சுகிறார்கள்.
சங்கீதம் 97 : 5 (ERVTA)
கர்த்தருக்கு முன்பு மலைகள் மெழுகு போல உருகும். பூமியின் ஆண்டவருக்கு முன்பாக அவை உருகும்.
சங்கீதம் 97 : 6 (ERVTA)
வானங்களே, அவரது நம்மையைக் கூறுங்கள்! ஒவ்வொருவரும் தேவனுடைய மகிமையைக் காணட்டும்!
சங்கீதம் 97 : 7 (ERVTA)
ஜனங்கள் அவர்களது விக்கிரகங்களை தொழுதுகொள்கிறார்கள். அவர்கள் தங்கள் “தெய்வங்களைப்” பற்றிப் பெருமைப்படுகிறார்கள். ஆனால் அந்த ஜனங்கள் வெட்கமடைவார்கள். அவர்கள் “தெய்வங்கள்” குனிந்து வணங்கி கர்த்தரைத் தொழுதுகொள்வார்கள்.
சங்கீதம் 97 : 8 (ERVTA)
சீயோனே, செவிக்கொடுத்து மகிழ்வாயாக! யூதாவின் நகரங்களே, மகிழ்ச்சிக்கொள்ளுங்கள்! ஏனெனில் கர்த்தர் ஞானமுள்ள முடிவுகளை எடுக்கிறார்.
சங்கீதம் 97 : 9 (ERVTA)
மகா உன்னதமான தேவனே, மெய்யாகவே நீரே பூமியின் அரசர். பிற தெய்வங்களைக் காட்டிலும் நீர் மகத்துவமுள்ளவர்.
சங்கீதம் 97 : 10 (ERVTA)
கர்த்தரை நேசிக்கும் ஜனங்கள் தீமையை வெறுப்பார்கள். எனவே தேவன் தம்மைப் பின்பற்றுவோரைக் காப்பாற்றுகிறார். தீயோரிடமிருந்து தேவன் தம்மைப் பின்பற்றுவோரைக் காப்பாற்றுகிறார்.
சங்கீதம் 97 : 11 (ERVTA)
நல்லோர் மீது ஒளியும், மகிழ்ச்சியும் பிரகாசிக்கும்.
சங்கீதம் 97 : 12 (ERVTA)
நல்லோரே, கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள்! அவரது பரிசுத்த நாமத்தை பெருமைப்படுத்துங்கள்!
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12