சங்கீதம் 96 : 1 (ERVTA)
கர்த்தர் செய்த புதுகாரியங்களைப்பற்றி ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்! உலகம் முழுவதும் கர்த்தரை நோக்கிப் பாடட்டும்.
சங்கீதம் 96 : 2 (ERVTA)
கர்த்தரை நோக்கிப் பாடுங்கள்! அவரது நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்! ஒவ்வொரு நாளும் அவர் நம்மை பாதுகாப்பதைப் பற்றிச் சொல்லுங்கள்!
சங்கீதம் 96 : 3 (ERVTA)
தேவன் உண்மையிலேயே அற்புதமானவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுங்கள். தேவன் செய்கிற வியப்பிற்குரிய காரியங்களை எங்குமுள்ள ஜனங்களுக்குச் சொல்லுங்கள்.
சங்கீதம் 96 : 4 (ERVTA)
கர்த்தர் மேன்மையானவர், துதிகளுக்குரியவர். வேறெந்த “தெய்வங்களைக்” காட்டிலும் அவர் அஞ்சத்தக்கவர்.
சங்கீதம் 96 : 5 (ERVTA)
பிற தேசங்களின் “தெய்வங்கள்” எல்லாரும் வெறும் சிலைகளே. ஆனால் கர்த்தரோ வானங்களை உண்டாகினவர்.
சங்கீதம் 96 : 6 (ERVTA)
அவருக்கு முன்னே அழகிய மகிமை ஒளி வீசும். தேவனுடைய பரிசுத்த ஆலயத்தில் பெலனும் அழகும் விளங்கும்.
சங்கீதம் 96 : 7 (ERVTA)
குடும்பங்களும் தேசங்களும் கர்த்தருக்கு மகிமையும், துதியும் நிரம்பிய பாடல்களைப் பாடுவார்கள்.
சங்கீதம் 96 : 8 (ERVTA)
கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள். உங்கள் காணிக்கைகளோடு ஆலயத்திற்குச் செல்லுங்கள்.
சங்கீதம் 96 : 9 (ERVTA)
கர்த்தருடைய அழகான ஆலயத்தில் அவரைத் தொழுதுகொள்ளுங்கள். கர்த்தரைப் பூமியிலுள்ள ஒவ்வொருவரும் தொழுதுகொள்ளுங்கள்.
சங்கீதம் 96 : 10 (ERVTA)
கர்த்தரே அரசரென்று தேசங்களுக்கெல்லாம் அறிவியுங்கள்! அதனால் உலகம் அழிக்கப்படுவதில்லை. கர்த்தர் ஜனங்களை நியாயமாக அரசாளுவார்.
சங்கீதம் 96 : 11 (ERVTA)
விண்ணுலகங்களே! மகிழ்ச்சிகொள்ளுங்கள். பூமியே! களிகூரு. கடலும் அதிலுள்ளவையும் களிப்பால் குரல் எழுப்பட்டும்!
சங்கீதம் 96 : 12 (ERVTA)
வயல்களும் அதில் விளைந்துள்ள அனைத்தும் மகிழ்ச்சிகொள்ளட்டும்! வனத்தின் மரங்களே, பாடி மகிழுங்கள்!
சங்கீதம் 96 : 13 (ERVTA)
கர்த்தர் வருகிறார் ஆதலால் மகிழ்ச்சியடையுங்கள். கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வந்துகொண்டிருக்கிறார். நீதியோடும் நியாயத்தோடும் அவர் உலகை ஆளுகை செய்வார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13