சங்கீதம் 95 : 1 (ERVTA)
வாருங்கள், நாம் கர்த்தரைத் துதிப்போம்! [QBR2] நம்மைக் காப்பாற்றுகின்ற பாறையை நோக்கி துதிகளை உரக்கக் கூறுவோம். [QBR]
சங்கீதம் 95 : 2 (ERVTA)
கர்த்தருக்கு நன்றி கூறும் பாடல்களைப் பாடுவோம். [QBR2] அவருக்கு மகிழ்ச்சியான துதி பாடல்களைப் பாடுவோம். [QBR]
சங்கீதம் 95 : 3 (ERVTA)
ஏனெனில் கர்த்தர் மேன்மையான தேவன்! [QBR2] பிற “தெய்வங்களை” எல்லாம் ஆளுகின்ற பேரரசர் ஆவார். [QBR]
சங்கீதம் 95 : 4 (ERVTA)
ஆழமான குகைகளும் உயரமான பர்வதங்களும் கர்த்தருக்கு உரியவை. [QBR]
சங்கீதம் 95 : 5 (ERVTA)
சமுத்திரம் அவருடையது. அவரே அதைப் படைத்தார். [QBR2] தேவன் உலர்ந்த நிலத்தைத் தமது சொந்த கைகளால் உண்டாக்கினார். [QBR]
சங்கீதம் 95 : 6 (ERVTA)
வாருங்கள், நாம் தாழ்ந்து குனிந்து அவரைத் தொழுதுகொள்வோம். [QBR2] நம்மை உண்டாக்கின தேவனை நாம் துதிப்போம். [QBR]
சங்கீதம் 95 : 7 (ERVTA)
அவரே நமது தேவன்! [QBR2] நாம் அவரது ஜனங்கள். [QBR2] அவரது சத்தத்திற்கு நாம் செவிகொடுத்தால் இன்று நாம் அவரது ஆடுகளாயிருப்போம். [QBR2]
சங்கீதம் 95 : 8 (ERVTA)
தேவன்: “பாலைவனத்தில் மேரிபாவில் செய்தது போலவும், மாசாவில் செய்தது போலவும் அடம்பிடிக்காதீர்கள்” என்று கூறினார். [QBR]
சங்கீதம் 95 : 9 (ERVTA)
உங்கள் முற்பிதாக்கள் என்னை சோதித்தார்கள். [QBR2] அவர்கள் என்னை சோதித்தபோது நான் செய்யக்கூடியவற்றைக் கண்டார்கள். [QBR]
சங்கீதம் 95 : 10 (ERVTA)
நாற்பது ஆண்டுகள் அந்த ஜனங்களிடம் நான் பொறுமையாக இருந்தேன். [QBR2] அவர்கள் உண்மையில்லாதவர்கள் என நான் அறிவேன். [QBR2] அந்த ஜனங்கள் என் போதனைகளைப் பின்பற்ற மறுத்தார்கள். [QBR]
சங்கீதம் 95 : 11 (ERVTA)
எனவே நான் கோபமடைந்தேன், [QBR2] எனது இளைப்பாறுதலின் தேசத்தில் அவர்கள் நுழைவதில்லை என ஆணையிட்டேன். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11

BG:

Opacity:

Color:


Size:


Font: