சங்கீதம் 91 : 1 (ERVTA)
மிக உன்னதமான தேவனிடம் மறைந்துகொள்ள நீ போகமுடியும். [QBR2] சர்வ வல்லமையுள்ள தேவனிடம் பாதுகாப்பிற்காக நீ போக முடியும். [QBR]
சங்கீதம் 91 : 2 (ERVTA)
நான் கர்த்தரை நோக்கி, “நீரே என் பாதுகாப்பிடம், என் கோட்டை, [QBR2] என் தேவனே, நான் உம்மை நம்புகிறேன்” என்று கூறுகிறேன். [QBR]
சங்கீதம் 91 : 3 (ERVTA)
மறைவான ஆபத்துக்களிலிருந்தும் [QBR2] ஆபத்தான நோய்களிலிருந்தும் தேவன் உன்னைக் காப்பாற்றுகிறார். [QBR]
சங்கீதம் 91 : 4 (ERVTA)
நீ தேவனைப் பாதுகாப்பிற்காக அணுகமுடியும். [QBR2] அவர் உன்னை ஒரு பறவை சிறகை விரித்துத் தன் குஞ்சுகளைக் காப்பதைப்போன்று காப்பார். [QBR2] தேவன் ஒரு கேடகத்தைப் போன்றும் சுவரைப் போன்றும் உன்னைப் பாதுகாக்கிறார். [QBR]
சங்கீதம் 91 : 5 (ERVTA)
இரவில் நீ அஞ்சத்தக்கது எதுவுமில்லை. [QBR2] நீ பகலில் பகைவரின் அம்புக்கும் பயப்படமாட்டாய். [QBR]
சங்கீதம் 91 : 6 (ERVTA)
இருளில் வரும் கொடிய நோய்களுக்கும், [QBR2] நடுப் பகலில் வரும் கொடிய நோய்களுக்கும் நீ அஞ்சமாட்டாய். [QBR]
சங்கீதம் 91 : 7 (ERVTA)
நீ ஆயிரம் பகைவர்களைத் தோற்கடிப்பாய். [QBR2] உன் சொந்த வலதுகை பதினாயிரம் பகைவீரர்களைத் தோற்கடிக்கும். [QBR2] உன் பகைவர்கள் உன்னைத் தொடக்கூடமாட்டார்கள். [QBR]
சங்கீதம் 91 : 8 (ERVTA)
சற்றுப்பார், [QBR2] அத்தீயோர் தண்டிக்கப்பட்டதை நீ காண்பாய்! [QBR]
சங்கீதம் 91 : 9 (ERVTA)
ஏனெனில் நீ கர்த்தரை நம்புகிறாய். [QBR2] மிக உன்னதமான தேவனை நீ உன் பாதுகாப்பிடமாகக்கொண்டாய். [QBR]
சங்கீதம் 91 : 10 (ERVTA)
தீயவை உனக்கு நிகழாது, [QBR2] உன் வீட்டில் எந்தவிதமான நோய்களும் இருப்பதில்லை. [QBR]
சங்கீதம் 91 : 11 (ERVTA)
தேவன் அவரது தூதர்களை உனக்காகக் கட்டளையிடுவார். [QBR2] நீ போகுமிடங்களிலெல்லாம் அவர்கள் உன்னைப் பாதுகாப்பார்கள். [QBR]
சங்கீதம் 91 : 12 (ERVTA)
உன் கால் பாறையில் மோதாதபடிக்கு [QBR2] அவர்கள் கைகள் உன்னைப் பிடித்துக்கொள்ளும். [QBR]
சங்கீதம் 91 : 13 (ERVTA)
சிங்கங்களின் மேலும் [QBR2] விஷம் நிரம்பிய பாம்புகளின் மேலும் நடக்கும் வல்லமை உனக்கு வாய்க்கும். [QBR]
சங்கீதம் 91 : 14 (ERVTA)
கர்த்தர்: “ஒருவன் என்னை நம்பினால், நான் அவனை மீட்பேன். [QBR2] என் நாமத்தை தொழுது கொண்டு என்னைப் பின்பற்றுவோரை நான் கப்பாற்றுவேன்” என்கிறார். [QBR]
சங்கீதம் 91 : 15 (ERVTA)
என்னைப் பின்பற்றுவோர் உதவிக்காக என்னை அழைப்பார்கள். [QBR2] நான் அவர்களுக்குப் பதில் கொடுப்பேன். [QBR] அவர்களுக்குத் தொல்லை நேரும்போது நான் அவர்களோடு இருப்பேன். [QBR2] நான் அவர்களைக் காப்பாற்றிப் பெருமைப்படுத்துவேன். [QBR]
சங்கீதம் 91 : 16 (ERVTA)
என்னைப் பின்பற்றுவோருக்கு நான் நீண்ட ஆயுளைக் கொடுப்பேன். [QBR2] நான் அவர்களைக் காப்பாற்றுவேன். [PE]
❮
❯