சங்கீதம் 9 : 1 (ERVTA)
என் முழு இருதயத்தோடும் நான் கர்த்தரைத் துதிப்பேன். கர்த்தாவே, நீர் செய்த எல்லா அற்புதமான காரியங்களையும் நான் எடுத்துக் கூறுவேன்.
சங்கீதம் 9 : 2 (ERVTA)
நீர் என்னை மிகவும் சந்தோஷப்படுத்துகிறீர். உன்னதமான தேவனே, நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
சங்கீதம் 9 : 3 (ERVTA)
என் பகைவர்கள் உம்மிடமிருந்து ஓட முயன்றார்கள். ஆனால் அவர்கள் விழுந்து அழிந்தார்கள்.
சங்கீதம் 9 : 4 (ERVTA)
நீர் நல்ல நீதிபதி. உமது சிங்காசனத்தில் நீதிபதியாக அமர்ந்தீர். கர்த்தாவே, என் வழக்கைக் கேட்டீர். எனக்குரிய நீதியான முடிவை அளித்தீர்.
சங்கீதம் 9 : 5 (ERVTA)
பிற ஜனங்களை நீர் கண்டித்தீர் கர்த்தாவே, நீர் அந்தத் தீயோரை அழித்தீர். உயிருள்ள ஜனங்களின் பட்டியலிலிருந்து என்றென்றும் அவர்கள் பெயரை அகற்றினீர்.
சங்கீதம் 9 : 6 (ERVTA)
பகைவன் ஒழிக்கப்பட்டான்! கர்த்தாவே, அவர்கள் நகரங்களை அழித்தீர், அழிந்த கட்டிடங்களே இன்று உள்ளன. அத்தீயோரை நினைவுபடுத்த எதுவும் இன்று இல்லை.
சங்கீதம் 9 : 7 (ERVTA)
ஆனால் கர்த்தர் என்றென்றும் அரசாளுவார். கர்த்தர் அவர் அரசை வலுவாக்கு வார். உலகிற்கு நியாயத்தை வழங்க அவர் இதைச் செய்தார்.
சங்கீதம் 9 : 8 (ERVTA)
உலகில் உள்ள எல்லா ஜனங்களுக்கும் கர்த்தர் நியாயமான தீர்ப்பு வழங்குவார். எல்லா நாடுகளுக்கும் நீதியோடு தீர்ப்பு வழங்குவார்.
சங்கீதம் 9 : 9 (ERVTA)
பல குழப்பங்கள் இருப்பதால் பல ஜனங்கள் அகப்பட்டுக் காயமுற்றனர். அவர்கள் தங்கள் துன்பங்களின் பாரத்தால் நசுங்குண்டு போயினர். கர்த்தாவே, நீர் அவர்களுக்கு அடைக்கலமாயிரும்.
சங்கீதம் 9 : 10 (ERVTA)
உமது நாமத்தை அறிந்த ஜனங்கள் உம்மை நம்பவேண்டும். கர்த்தாவே, ஜனங்கள் உம்மிடம் வந்தால் அவர்களுக்கு உதவாது விடமாட்டீர்.
சங்கீதம் 9 : 11 (ERVTA)
சீயோனில் வாழும் ஜனங்களே கர்த்தரைத் துதித்துப் பாடுங்கள். கர்த்தர் செய்த பெரிய காரியங்களைப் பிற தேசங்களில் கூறுங்கள்.
சங்கீதம் 9 : 12 (ERVTA)
உதவிநாடிப் போனோரைக் கர்த்தர் நினைவு கூருவார். அந்த ஏழை ஜனங்கள் உதவிக்காக அவரிடம் சென்றனர். கர்த்தர் அவர்களை மறக்கவில்லை.
சங்கீதம் 9 : 13 (ERVTA)
நான் தேவனிடம் இந்த ஜெபத்தைக் கூறினேன்: "கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும். பாரும், என் பகைவர்கள் என்னைத் தாக்குகிறார்கள். ‘மரணவாசலில்’ இருந்து என்னைக் காப்பாற்றும்.
சங்கீதம் 9 : 14 (ERVTA)
அப்போது கர்த்தாவே, எருசலேமின் வாசல்களில் நான் உம்மைத் துதித்துப் பாடக்கூடும். என்னை நீர் காப்பாற்றியதால் நான் மிகவும் மகிழ்ச்சிகொள்வேன்."
சங்கீதம் 9 : 15 (ERVTA)
பிறரை அகப்படுத்த யூதரல்லாத ஜனங்கள் குழிகளைத் தோண்டினார்கள். அக்குழிகளில் அவர்களே வீழ்ந்தனர். பிறரை அகப்படுத்த வலைகளை விரித்தனர். அவ்வலைகளில் அவர்களே சிக்குண்டனர்.
சங்கீதம் 9 : 16 (ERVTA)
கர்த்தர் அத்தீயோரைப் பிடித்தார். தீயவை செய்வோரைக் கர்த்தர் தண்டிப்பாரென அந்த ஜனங்கள் அறிந்துகொண்டனர்.
சங்கீதம் 9 : 17 (ERVTA)
தேவனை மறக்கும் ஜனங்கள் தீயோர்கள். அந்த ஜனங்கள் மரணத்தின் இடங்களுக்குச் செல்வார்கள்.
சங்கீதம் 9 : 18 (ERVTA)
துன்பப்பட்ட ஜனங்களை தேவன் மறந்துவிட்டாரென சில நேரங்களில் தோன்றும். அந்த ஏழைகள் நம்பிக்கையிழக்கும் நிலை வந்ததென்று தோன்றும். ஆனால் தேவன் அவர்களை என்றென்றும் மறப்பதில்லை.
சங்கீதம் 9 : 19 (ERVTA)
கர்த்தாவே, எழுந்து தேசங்களை நியாந் தீரும். தாங்கள் வல்லமை மிகுந்தோரென ஜனங்கள் தங்களை நினையாதபடி செய்யும்.
சங்கீதம் 9 : 20 (ERVTA)
ஜனங்களுக்குப் பாடம் கற்பியும். அவர்கள் தாங்கள் சாதாரண மனிதப் படைப்பு மட்டுமே என்றறியச் செய்யும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

BG:

Opacity:

Color:


Size:


Font: