சங்கீதம் 87 : 1 (ERVTA)
{கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்} [PS] எருசலேமின் பரிசுத்த மலைகளில் தேவன் தமது ஆலயத்தைக் கட்டினார். [QBR2]
சங்கீதம் 87 : 2 (ERVTA)
இஸ்ரவேலின் வேறெந்த இடத்தைக் காட்டிலும் சீயோனின் வாசற்கதவுகளைக் கர்த்தர் நேசிக்கிறார். [QBR]
சங்கீதம் 87 : 3 (ERVTA)
தேவனுடைய நகரமே, ஜனங்கள் உன்னைக் குறித்து ஆச்சரியமான காரியங்களைக் கூறுகிறார்கள். [QBR]
சங்கீதம் 87 : 4 (ERVTA)
தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார். [QBR2] அவர்களுள் சிலர் எகிப்திலும் பாபிலோனிலும் வசிக்கிறார்கள். [QBR2] அவர்களுள் சிலர் பெலிஸ்தியாவிலும், தீருவிலும், எத்தியோப்பியாவிலும் பிறந்தார்கள். [QBR]
சங்கீதம் 87 : 5 (ERVTA)
சீயோனில் பிறந்த ஒவ்வொருவரையும் தேவன் அறிகிறார். [QBR2] மிக உன்னதமான தேவன் அந்நகரத்தைக் கட்டினார். [QBR]
சங்கீதம் 87 : 6 (ERVTA)
தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார். [QBR2] ஒவ்வொருவனும் எங்கே பிறதான் என்பதையும் தேவன் அறிகிறார்.
சங்கீதம் 87 : 7 (ERVTA)
விசேஷ ஓய்வு நாட்களைக் கொண்டாடுவதற்கு தேவனுடைய ஜனங்கள் எருசலேமுக்குப் போகிறார்கள். [QBR2] அவர்கள் மிக மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். [QBR] அவர்கள் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டுமிருக்கிறார்கள். [QBR2] அவர்கள், “எல்லா நல்லவையும் எருசலேமிலிருந்து வருகின்றன” என்றார்கள். [PE]

1 2 3 4 5 6 7

BG:

Opacity:

Color:


Size:


Font: