சங்கீதம் 86 : 1 (ERVTA)
தாவீதின் விண்ணப்பம் நான் ஒரு ஏழை, உதவியற்ற மனிதன். கர்த்தாவே, தயவாய் எனக்குச் செவிகொடுத்து என் ஜெபத்திற்குப் பதில் தாரும்.
சங்கீதம் 86 : 2 (ERVTA)
கர்த்தாவே, நான் உம்மைப் பின்பற்றுபவன். தயவாய் என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்! நான் உமது பணியாள். நீரே என் தேவன். நான் உம்மை நம்புகிறேன். எனவே என்னைக் காப்பாற்றும்.
சங்கீதம் 86 : 3 (ERVTA)
என் ஆண்டவரே, என்னிடம் தயவாயிரும். நாள் முழுவதும் நான் உம்மிடம் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன்.
சங்கீதம் 86 : 4 (ERVTA)
ஆண்டவரே, உமது கைகளில் என் ஜீவனை வைக்கிறேன். என்னை மகிழ்ச்சியாக்கும். நான் உமது பணியாள்.
சங்கீதம் 86 : 5 (ERVTA)
ஆண்டவரே, நீர் நல்லவர், கிருபையுள்ளவர். உமது ஜனங்கள் உதவிக்காக உம்மைக் கூப்பிடுவார்கள். நீர் உண்மையாகவே அந்த ஜனங்களை நேசிக்கிறீர்.
சங்கீதம் 86 : 6 (ERVTA)
கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும். இரக்கத்திற்கான ஜெபத்திற்குச் செவிகொடும்.
சங்கீதம் 86 : 7 (ERVTA)
கர்த்தாவே, தொல்லைமிக்க காலத்தில் நான் உம்மிடம் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன். நீர் பதிலளிப்பீர் என்பதை நான் அறிவேன்.
சங்கீதம் 86 : 8 (ERVTA)
தேவனே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை. நீர் செய்தவற்றை வேறெவரும் செய்ய முடியாது.
சங்கீதம் 86 : 9 (ERVTA)
ஆண்டவரே, நீர் ஒவ்வொருவரையும் உண்டாக்கினீர். அவர்கள் எல்லோரும் வந்து உம்மை தொழுதுகொள்வார்கள் என்றும், அவர்கள் எல்லோரும் உமது நாமத்தை பெருமைப்படுத்துவார்கள் என்றும் நான் நம்புகிறேன்.
சங்கீதம் 86 : 10 (ERVTA)
தேவனே, நீர் மேன்மையானவர்! நீர் அற்புதமான காரியங்களைச் செய்கிறீர். நீரே, நீர் மட்டுமே தேவன்!
சங்கீதம் 86 : 11 (ERVTA)
கர்த்தாவே, உமது வழிகளை எனக்குப் போதியும். நான் வாழ்ந்து உமது சத்தியங்களுக்குக் கீழ்ப்படிவேன். உமது நாமத்தைத் தொழுது கொள்வதையே என் வாழ்க்கையின் மிக முக்கியமான காரியமாகக்கொள்ள எனக்கு உதவும்.
சங்கீதம் 86 : 12 (ERVTA)
என் ஆண்டவராகிய தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன். உமது நாமத்தை என்றென்றும் துதிப்பேன்.
சங்கீதம் 86 : 13 (ERVTA)
தேவனே, என்னிடம் மிகுந்த அன்பு காட்டுகிறீர். கீழே மரணத்தின் இடத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்.
சங்கீதம் 86 : 14 (ERVTA)
தேவனே, பெருமைமிக்க மனிதர்கள் என்னைத் தாக்குகிறார்கள். கொடிய மனிதர்களின் கூட்டம் என்னைக் கொல்லமுயல்கிறது. அம்மனிதர்கள் உம்மை மதிப்பதில்லை.
சங்கீதம் 86 : 15 (ERVTA)
ஆண்டவரே, நீர் தயவும் இரக்கமும் உள்ள தேவன். நீர் பொறுமையுடையவர், உண்மையும் அன்பும் நிறைந்தவர்.
சங்கீதம் 86 : 16 (ERVTA)
தேவனே, நீர் எனக்குச் செவிகொடுப்பதை எனக்குக் காண்பித்து, என்மீது தயவாயிரும். நான் உமது பணியாள். எனக்குப் பெலனைத் தாரும். நான் உமது பணியாள். என்னைக் காப்பாற்றும்.
சங்கீதம் 86 : 17 (ERVTA)
தேவனே, நீர் எனக்கு உதவுவீர் என்பதற்கு ஒரு அடையாளத்தைத் தாரும். என் பகைவர்கள் அந்த அடையாளத்தைக் கண்டு, ஏமாற்றம்கொள்வார்கள். நீர் என் ஜெபத்தைக் கேட்டு எனக்கு உதவுவீர் என்பதை அது காட்டும்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17