சங்கீதம் 85 : 1 (ERVTA)
கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த ஒரு துதிப் பாடல் கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் தயவாயிரும். யாக்கோபின் ஜனங்கள் ஒரு அந்நிய தேசத்தில் அடிமைகளாக இருக்கிறார்கள். அடிமைப்பட்டவர்களை மீண்டும் அவர்கள் தேசத்திற்கு அழைத்து வாரும்.
சங்கீதம் 85 : 2 (ERVTA)
கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும்! அவர்கள் பாவங்களை போக்கிவிடும்!
சங்கீதம் 85 : 3 (ERVTA)
கர்த்தாவே, சினமாயிருப்பதை நீர் நிறுத்தும். கடுங்கோபமாக இராதேயும்.
சங்கீதம் 85 : 4 (ERVTA)
எங்கள் தேவனும் இரட்சகருமானவரே, எங்களிடம் கோபமாயிருப்பதை விட்டு விட்டு எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
சங்கீதம் 85 : 5 (ERVTA)
நீர் என்றென்றும் கோபங்கொள்வீரோ?
சங்கீதம் 85 : 6 (ERVTA)
தயவுகூரும், எங்களை மீண்டும் வாழச் செய்யும். உமது ஜனங்களை சந்தோஷப்படுத்தும்.
சங்கீதம் 85 : 7 (ERVTA)
கர்த்தாவே, எங்களைக் காப்பாற்றும். நீர் எங்களை நேசிப்பதை எங்களுக்குக் காட்டும்.
சங்கீதம் 85 : 8 (ERVTA)
தேவனாகிய கர்த்தர் கூறியதை நான் கேட்டேன். அவரது ஜனங்களுக்கும், உண்மையான சீடர்களுக்கும் சமாதானம் உண்டாகுமென்று கர்த்தர் கூறினார். எனவே மூடத்தனமான வாழ்க்கை முறைக்கு அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லக் கூடாது.
சங்கீதம் 85 : 9 (ERVTA)
தேவன் தம்மைப் பின்பற்றுவோரை விரைவில் மீட்பார். நமது தேசத்தில் நாம் பெருமையோடு விரைவில் வாழுவோம்.
சங்கீதம் 85 : 10 (ERVTA)
தேவனுடைய உண்மையான அன்பு அவரை பின்பற்றுவோரை வந்தைடையும். நன்மையும் சமாதானமும் முத்தமிட்டு அவர்களை வாழ்த்தும்.
சங்கீதம் 85 : 11 (ERVTA)
பூமியின் ஜனங்கள் தேவனிடம் நேர்மையானவர்களாயிருப்பார்கள். பரலோகத்தின் தேவனும் அவர்களுக்கு நல்லவராக இருப்பார்.
சங்கீதம் 85 : 12 (ERVTA)
கர்த்தர் நமக்குப் பல நல்ல பொருள்களைத் தருவார். நிலம் பல நல்ல பயிர்களை விளைவிக்கும்.
சங்கீதம் 85 : 13 (ERVTA)
நன்மை தேவனுக்கு முன்பாகச் செல்லும். அது அவருக்கு வழியை ஆயத்தப்படுத்தும்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13