சங்கீதம் 84 : 1 (ERVTA)
கீத்தித் என்னும் வாத்தியத்தில் இசைக்கும் இராகத் தலைவனுக்குக் கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல். சர்வ வல்லமையுள்ள தேவனே, உமது ஆலயம் உண்மையிலேயே இனிமையானது.
சங்கீதம் 84 : 2 (ERVTA)
கர்த்தாவே, உமது ஆலயத்திற்குள் நுழைவதற்கு என்னால் காத்திருக்க முடியாது. ஏனெனில் நான் மிகுந்த ஆவலாய் இருக்கிறேன். என் அவயவங்கள் ஒவ்வொன்றும் ஜீவனுள்ள தேவனோடு இருப்பதையே விரும்புகிறது.
சங்கீதம் 84 : 3 (ERVTA)
என் அரசரே, என் தேவனே, சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, குருவிகளுக்கும், அடைக்கலான் குருவிகளுக்கும் உம்முடைய ஆலயத்தில் வீடுகள் உண்டு. உமது பலிபீடத்தருகே அப்பறவைகள் தங்கள் கூடுகளை அமைக்கும், அங்கு அவற்றின் குஞ்சுகளைப் பெறும்.
சங்கீதம் 84 : 4 (ERVTA)
உமது ஆலயத்தில் வாழும் ஜனங்கள் மிகுந்த பாக்கியமுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் உம்மைத் துதித்துக்கொண்டிருக்கிறார்கள்.
சங்கீதம் 84 : 5 (ERVTA)
தங்கள் இருதயத்தில் கீதங்களைப் பாடிக் கொண்டு ஆலயத்திற்கு வருகிற ஜனங்கள் மிகுந்த சந்தோஷமாயிருக்கிறார்கள்.
சங்கீதம் 84 : 6 (ERVTA)
அவர்கள் அழுகையின் பள்ளத்தாக்கின் வழியாகப் பயணம் செய்கிறார்கள். தேவன் அதை ஒரு நீரூற்றாகச் செய்கிறார். இலையுதிர்கால மழையின் தண்ணீரால் குளங்கள் தோன்றும்.
சங்கீதம் 84 : 7 (ERVTA)
தேவனைச் சந்திப்பதற்காக சீயோனுக்குச் செல்லும் வழியில் ஜனங்கள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணமாகிறார்கள்.
சங்கீதம் 84 : 8 (ERVTA)
சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும். யாக்கோபின் தேவனே, எனக்குச் செவிகொடும்.
சங்கீதம் 84 : 9 (ERVTA)
தேவனே, எங்கள் பாதுகாவலரைப் (கேடகத்தைப்) பாதுகாத்துக்கொள்ளும். நீர் தேர்ந்தெடுத்த அரசன் மீது இரக்கமாயிரும்.
சங்கீதம் 84 : 10 (ERVTA)
வேறிடங்களில் செலவிடும் ஆயிரம் நாட்களைக் காட்டிலும் உமது ஆலயத்தில் இருக்கும் ஒரே நாள் நல்லது. எனது தேவனுடைய வீட்டின் வாசலில் நிற்பதோ தீயவனின் வீட்டில் வாழ்வதைக் காட்டிலும் நல்லது.
சங்கீதம் 84 : 11 (ERVTA)
கர்த்தர் நமது கேடகமும் மகிமை வாய்ந்த அரசருமானவர்.* கேடகமும்...அரசனுமானவர் “சூரியனும் கேடகமும்” எனப் பொருள்படும். தயவினாலும் மகிமையாலும் தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார். அவரைப் பின்பற்றிக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு தேவன் எல்லா நல்ல பொருள்களையும் தருகிறார்.
சங்கீதம் 84 : 12 (ERVTA)
சர்வ வல்லமையுள்ள தேவனே, உம்மை நம்புகிற ஜனங்கள் உண்மையாகவே சந்தோஷமானவர்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12