சங்கீதம் 81 : 1 (ERVTA)
{கித்தீத் என்னும் இசைக்கருவியை வாசிக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்களுள் ஒன்று} [PS] நமது பெலனாகிய தேவனைப் பாடி மகிழ்ச்சியாயிருங்கள். [QBR2] இஸ்ரவேலரின் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரியுங்கள். [QBR]
சங்கீதம் 81 : 2 (ERVTA)
இசையைத் தொடங்குங்கள், தம்புராவை வாசியுங்கள். [QBR2] வீணையையும் சுரமண்டலத்தையும் இசையுங்கள். [QBR]
சங்கீதம் 81 : 3 (ERVTA)
மாதப்பிறப்பு நாளில் எக்காளம் ஊதுங்கள். [QBR2] முழு நிலவின் நாளில் எக்காளம் ஊதுங்கள். [QBR2] அப்போது நம் விடுமுறை ஆரம்பமாகிறது. [QBR]
சங்கீதம் 81 : 4 (ERVTA)
அது இஸ்ரவேலருக்கு சட்டமாக வகுக்கப்பட்டிருந்தது. [QBR2] தேவன் அக்கட்டளையை யாக்கோபிற்குக் கொடுத்தார். [QBR]
சங்கீதம் 81 : 5 (ERVTA)
தேவன் யோசேப்பை [*யோசேப்பு இங்கு இது யோசேப்பின் குடும்பம் என்று அர்த்தம், இவர்கள் இஸ்ரவேல் ஜனங்கள்.] எகிப்திலிருந்து அழைத்துச் சென்றபோது அவனோடு இந்த உடன்படிக்கையைச் செய்தார். [QBR2] எகிப்தில், எங்களால் புரிந்துகொள்ள முடியாத மொழியை நாங்கள் கேட்டோம். [QBR]
சங்கீதம் 81 : 6 (ERVTA)
தேவன், “உனது தோள்களிலிருந்து பாரத்தை இறக்கியிருக்கிறேன். [QBR2] உன்னிடமிருந்து பணியாட்களின் கூடையை விழப்பண்ணினேன். [QBR]
சங்கீதம் 81 : 7 (ERVTA)
நீங்கள் தொல்லைகளில் சிக்குண்டிருந்தீர்கள். [QBR2] நீங்கள் உதவிக்காகக் கூப்பிட்டீர்கள், நான் உங்களை விடுவித்தேன். [QBR] புயல் மேகங்களில் மறைந்திருந்து உங்களுக்குப் பதிலளித்தேன். [QBR2] மேரிபாவின் தண்ணீரண்டையில் நான் உங்களை சோதித்தேன்.”
சங்கீதம் 81 : 8 (ERVTA)
“எனது ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். [QBR2] அப்போது என் உடன்படிக்கையை உங்களுக்குத் தருவேன். [QBR2] இஸ்ரவேலே, நான் சொல்வதை தயவாய்க்கேள்! [QBR]
சங்கீதம் 81 : 9 (ERVTA)
வேற்றுநாட்டார் தொழுதுகொள்ளும் பொய் தெய்வங்களை [QBR2] நீ தொழுதுகொள்ளாதே. [QBR]
சங்கீதம் 81 : 10 (ERVTA)
கர்த்தராகிய நானே உன் தேவன். [QBR2] நான் உன்னை எகிப்திலிருந்து வரவழைத்தேன். [QBR] இஸ்ரவேலே, உன் வாயைத் திற, [QBR2] நான் உன்னைப் போஷிப்பேன்.
சங்கீதம் 81 : 11 (ERVTA)
“ஆனால் என் ஜனங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை. [QBR2] இஸ்ரவேல் எனக்குக் கீழ்ப்படியவில்லை. [QBR]
சங்கீதம் 81 : 12 (ERVTA)
எனவே அவர்கள் செய்ய விரும்பியதைச் செய்யுமாறு அனுமதித்தேன். [QBR2] இஸ்ரவேலர் அவர்கள் விரும்பியவற்றையெல்லாம் செய்தார்கள். [QBR]
சங்கீதம் 81 : 13 (ERVTA)
என் ஜனங்கள் நான் கூறுவதைக் கேட்டு, [QBR2] என் விருப்பப்படியே வாழ்ந்தால், [QBR]
சங்கீதம் 81 : 14 (ERVTA)
அப்போது நான் அவர்கள் பகைவர்களைத் தோற்கடிப்பேன். [QBR2] இஸ்ரவேலருக்குத் தொல்லை தரும் ஜனங்களைத் தண்டிப்பேன். [QBR]
சங்கீதம் 81 : 15 (ERVTA)
கர்த்தருடைய பகைவர்கள் அச்சத்தால் நடுங்குவார்கள். [QBR2] அவர்கள் என்றென்றைக்கும் தண்டிக்கப்படுவார்கள். [QBR]
சங்கீதம் 81 : 16 (ERVTA)
தேவன் அவரது ஜனங்களுக்குச் சிறந்த கோதுமையை கொடுப்பார். [QBR2] அவர்கள் திருப்தியடையும்வரை கன்மலையானவர் அவரது ஜனங்களுக்குத் தேனைக் கொடுப்பார்”. [PE]
❮
❯