சங்கீதம் 8 : 1 (ERVTA)
கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் சங்கீதம் எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் பூமியின் எல்லா இடத்திலும் மிகுந்த அற்புதமானது! விண்ணுலகிலும் உமது நாமம் உமக்குத் துதிகளைக் கொண்டு வருகிறது.
சங்கீதம் 8 : 2 (ERVTA)
பிள்ளைகள், குழந்தைகள் வாயிலுமிருந்து உம்மைத் துதிக்கும் பாடல்கள் வெளிப்படும். உம் பகைவரை அமைதிப்படுத்த இவ்வல்லமையான பாடல்களைக் கொடுத்தீர்.
சங்கீதம் 8 : 3 (ERVTA)
கர்த்தாவே, உமது கைகளால் நீர் செய்த வானங்களை நான் கண்டேன். நீர் படைத்த நிலாவையும், நட்சத்திரங்களையும் நான் கண்டு ஆச்சரியமடைந்தேன்.
சங்கீதம் 8 : 4 (ERVTA)
ஏன் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்? ஏன் அவர்களை நீர் நினைவுகூருகிறீர்? ஏன் அவர்களைக் கவனிக்கிறீர்?
சங்கீதம் 8 : 5 (ERVTA)
ஆனால் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்! அவர்களை ஏறக்குறைய தேவர்களைப் போலவே உண்டாக்கினீர். மனிதரை மகிமையாலும், மேன்மையாலும் முடிசூட்டினீர்.
சங்கீதம் 8 : 6 (ERVTA)
நீர் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவர்களை அதிகாரிகளாக வைத்தீர்.
சங்கீதம் 8 : 7 (ERVTA)
ஆடுகள்,பசுக்கள், காட்டு மிருகங்கள் அனைத்தையும் மனிதர்கள் ஆண்டனர்.
சங்கீதம் 8 : 8 (ERVTA)
வானத்துப் பறவைகளையும் சமுத்திரத்தில் நீந்தும் மீன்களையும் அவர்கள் ஆண்டனர்.
சங்கீதம் 8 : 9 (ERVTA)
எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் உலகத்தில் எங்கும் மிகவும் மிகவும் அற்புதமானது!

1 2 3 4 5 6 7 8 9