சங்கீதம் 76 : 1 (ERVTA)
இசைக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப்பாடல் யூதாவின் ஜனங்கள் தேவனை அறிவார்கள். இஸ்ரவேலின் ஜனங்கள் தேவனுடைய நாமத்தை மதிக்கிறார்கள்.
சங்கீதம் 76 : 2 (ERVTA)
தேவனுடைய ஆலயம் சாலேமில்* சாலோம் இது எருசலேமுக்கு மற்றொரு பெயர். இப்பெயருக்கு “சமாதானம்” எனப் பொருள்படும். இருக்கிறது. தேவனுடைய வீடு சீயோன் மலையில் இருக்கிறது.
சங்கீதம் 76 : 3 (ERVTA)
அவ்விடத்தில் தேவன் வில்கள், அம்புகள், கேடயங்கள், வாள்கள், மற்றும் போர்க்கருவிகளையெல்லாம் உடைத்தெறிந்தார்.
சங்கீதம் 76 : 4 (ERVTA)
தேவனே, நீர் உமது பகைவர்களை முறியடித்த போது மலைகளிலிருந்து மகிமை பொருந்தியவராய் வெளிப்பட்டீர்.
சங்கீதம் 76 : 5 (ERVTA)
அவர்கள் வலிமையுள்ளவர்கள் என அந்த வீரர்கள் நம்பினார்கள். ஆனால் இப்போது அவர்கள் களங்களில் (வயல்களில்) மரித்துக்கிடக்கிறார்கள். அவர்கள் அணிந்திருந்தவையெல்லாம் அவர்கள் உடம்பிலிருந்து அகற்றப்பட்டன. அவ்வலிய வீரர்களில் எவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை.
சங்கீதம் 76 : 6 (ERVTA)
யாக்கோபின் தேவன் அவ்வீரர்களிடம் குரல் உயர்த்திக் கண்டித்தார். இரதங்களோடும் குதிரைகளோடும் கூடிய அப்படையினர் மரித்து வீழ்ந்தனர்.
சங்கீதம் 76 : 7 (ERVTA)
தேவனே, நீர் பயங்கரமானவர்! நீர் சினமடையும்போது ஒருவனும் உமக்கெதிராக நிற்க முடிவதில்லை.
சங்கீதம் 76 : 8 (ERVTA)
(8-9)கர்த்தர் நீதிபதியாக இருந்து, அவரது முடிவை அறிவிக்கிறார். தேசத்தின் எளிய ஜனங்களை தேவன் மீட்டார். பரலோகத்திலிருந்து அவர் இம்முடிவைத் தந்தார். பூமி முழுவதும் அமைதியாகப் பயத்தோடு காணப்பட்டது.
சங்கீதம் 76 : 9 (ERVTA)
சங்கீதம் 76 : 10 (ERVTA)
தேவனே, நீர் தீயோரைத் தண்டிக்கும்போது ஜனங்கள் உம்மை மதிக்கிறார்கள். நீர் உமது கோபத்தை வெளிப்படுத்தும். தப்பித்து வாழ்பவர்கள் வலிமையுள்ளோராவர்கள்.
சங்கீதம் 76 : 11 (ERVTA)
ஜனங்களே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வாக்குறுதிப் பண்ணினீர்கள். இப்போது, வாக்குறுதிப் பண்ணினவற்றை நீங்கள் அவருக்குக் கொடுங்கள். எல்லா இடங்களிலும் ஜனங்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கிறார்கள். அவர்கள் அவருக்குப் பரிசுகளைக் கொண்டு வருகிறார்கள்.
சங்கீதம் 76 : 12 (ERVTA)
தேவன் பெருந்தலைவர்களைத் தோற்கடிக்கிறார். பூமியின் எல்லா அரசர்களும் அவருக்குப் பயப்படுகிறார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12