சங்கீதம் 73 : 1 (ERVTA)
#0புத்தகம் 3
(சங்கீதம் 73-89) ஆசாபின் துதிப்பாடல் தேவன் உண்மையாகவே இஸ்ரவேலுக்கு நல்லவர். பரிசுத்த இருதயமுள்ள ஜனங்களுக்கு தேவன் நல்லவர்.
சங்கீதம் 73 : 2 (ERVTA)
நான் தவறி வீழ்ந்து, பாவம் செய்யத் தொடங்கும் நிலையில் இருந்தேன்.
சங்கீதம் 73 : 3 (ERVTA)
கெட்ட ஜனங்கள் வெற்றியடைந்ததைக் கண்டேன். பெருமைபாராட்டும் அந்த ஜனங்களைக் கண்டு பொறாமைகொள்ள ஆரம்பித்தேன்.
சங்கீதம் 73 : 4 (ERVTA)
அந்த ஜனங்கள் ஆரோக்கியமுள்ளவர்கள். வாழ்வதற்கு அவர்கள் போராட வேண்டாம்.
சங்கீதம் 73 : 5 (ERVTA)
எங்களைப்போல அந்தப் பெருமைக்காரர்கள் தொல்லைப்படுவதில்லை. பிறரைப்போன்று அவர்களுக்குத் தொல்லைகள் இல்லை.
சங்கீதம் 73 : 6 (ERVTA)
எனவே அவர்கள் பெருமைமிக்கவர்களாய், வெறுக்கத்தக்கவர்களாய் உள்ளனர். அவர்கள் அணியும் அணிகலன்களையும் அழகிய ஆடைகளையும் போன்று அது விரைவில் கண்டுகொள்ளத்தக்கது.
சங்கீதம் 73 : 7 (ERVTA)
தாங்கள் பார்க்கும் எதையும் அந்த ஜனங்கள் விருப்பினால் போய் தங்களுக்கென அதை எடுத்துக்கொள்கின்றனர். தாங்கள் செய்ய நினைப்பவற்றை அவர்கள் செய்து முடிக்கிறார்கள்.
சங்கீதம் 73 : 8 (ERVTA)
பிறரைப்பற்றிக் கொடிய, தீய காரியங்களை அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் பெருமையும் பிடிவாதமும் உடையவர்கள். அவர்கள் எப்போதும் மற்றவர்களிடமிருந்து அனுகூலம் பெறும் வழிகளைத் திட்டமிடுகிறார்கள்.
சங்கீதம் 73 : 9 (ERVTA)
தங்களைத் தெய்வங்களென்று அப்பெருமைக்காரர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். பூமியின் அரசர்களென்று அவர்கள் தங்களைக் கருதிக்கொள்கிறார்கள்.
சங்கீதம் 73 : 10 (ERVTA)
எனவே தேவஜனங்கள் கூட அவர்களிடம் சென்று அவர்கள் கூறுபவற்றைச் செய்கிறார்கள்.
சங்கீதம் 73 : 11 (ERVTA)
அத்தீயோர், “நாங்கள் செய்து கொண்டிருப்பவற்றை தேவன் அறியார்! உன்னதமான தேவன் அறியார்! என்கிறார்கள்.
சங்கீதம் 73 : 12 (ERVTA)
அப்பெருமைக்காரர்கள் துர்க்குணம் மிக்கவர்கள். ஆனால் அவர்கள் செல்வந்தராகவும், நாளுக்கு நாள் செல்வத்தை பெறுவோராகவும் காணப்படுகிறார்கள்.
சங்கீதம் 73 : 13 (ERVTA)
எனவே நான் ஏன் என் இருதயத்தைத் தூயதாக்க வேண்டும்? ஏன் நான் எனது கைகளைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்?
சங்கீதம் 73 : 14 (ERVTA)
தேவனே, நான் நாள் முழுவதும் துன்புறுகிறேன், ஒவ்வொரு நாள் காலையிலும் நீர் என்னைத் தண்டிக்கிறீர்.
சங்கீதம் 73 : 15 (ERVTA)
தேவனே, நான் இவற்றைக் குறித்துப் பிறரிடம் பேச விரும்பினேன். அப்படிச் செய்தால் உமது ஜனங்களுக்கு நான் துரோகம் செய்தவனாவேன்.
சங்கீதம் 73 : 16 (ERVTA)
(16-17)இக்காரியங்களைப் புரிந்துகொள்ள நான் மிகவும் முயன்றேன். ஆனால் நான் உமது ஆலயத்திற்குச் செல்லும்வரை இவையனைத்தும் எனக்கு மிகவும்கடினமாயிருந்தன. நான் தேவனுடைய ஆலயத்திற்குப் போனேன், அப்போது அதை நான் உணர்ந்துக்கொண்டேன்.
சங்கீதம் 73 : 18 (ERVTA)
தேவனே, நீர் அந்த ஜனங்களை ஆபத்தான நிலையில் வைத்திருக்கிறீர். விழுந்து அழிவதென்பது அவர்களுக்கு மிகவும் சுலபமானது.
சங்கீதம் 73 : 19 (ERVTA)
தொல்லைகள் திடீரென நேரும், அப்போது அப்பெருமைக்காரர்கள் அழிந்துவிடுவார்கள். கொடியக் காரியங்கள் அவர்களுக்கு நேரிடும், அப்போது அவர்கள் அழிந்துப்போவார்கள்.
சங்கீதம் 73 : 20 (ERVTA)
கர்த்தாவே, நாங்கள் விழித்தெழும்போது மறந்துவிடும் கனவைப்போல அந்த ஜனங்கள் இருப்பார்கள். எங்கள் கனவில் வரும் பெரும் விலங்குகளைப்போல் அந்த ஜனங்கள் மறைந்துபோகும்படி நீர் செய்வீர்.
சங்கீதம் 73 : 21 (ERVTA)
(21-22)நான் மூடனாக இருந்தேன். நான் செல்வத்தைக் குறித்தும் கெட்ட ஜனங்களைக் குறித்தும் எண்ணிக் கலங்கினேன். தேவனே, நான் மனங்கலங்கி, உம்மிடம் கோபங்கொண்டேன். மூடத்தனமும் அறியாமையுமுள்ள மிருகத்தைப் போல் நடந்து கொண்டேன்.
சங்கீதம் 73 : 23 (ERVTA)
எனக்குத் தேவையானவை எல்லாம் என்னிடம் உள்ளன. நான் எப்போதும் உம்மோடிருக்கிறேன். தேவனே, நீர் என் கையைப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்.
சங்கீதம் 73 : 24 (ERVTA)
தேவனே, நீர் என்னை வழிநடத்தி, எனக்கு நல்ல போதனையைத் தருவீர். பின்பு என்னை மகிமைக்கு நேராக வழி நடத்துவீர்.
சங்கீதம் 73 : 25 (ERVTA)
தேவனே, பரலோகத்தில் நீர் எனக்காக இருக்கிறீர். நான் உம்மோடிருக்கையில் இப்பூமியில் எனக்கு என்ன வேண்டும்?
சங்கீதம் 73 : 26 (ERVTA)
என் மனமும் சரீரமும் அழிந்துப்போகலாம், ஆனால் நான் நேசிக்கும் கன்மலையாகிய தேவன் எனக்காக இருக்கிறீர். என்றென்றும் எனக்காக தேவன் இருக்கிறீர்.
சங்கீதம் 73 : 27 (ERVTA)
தேவனே, உம்மை விட்டு விலகும் ஜனங்கள் அழிந்துபோவார்கள். உமக்கு உண்மையாயில்லாத ஜனங்களை நீர் அழித்துவிடுவீர்.
சங்கீதம் 73 : 28 (ERVTA)
என்னைப் பொருத்தமட்டும், நான் தேவனிடம் வந்திருக்கிறேன், அதுவே எனக்கு நலமானது. என் ஆண்டவராகிய கர்த்தரை என் பாதுகாப்பிடமாக வைத்திருக்கிறேன். தேவனே, நீர் செய்துள்ள எல்லாவற்றையும் குறித்துக் கூற நான் வந்துள்ளேன்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28