சங்கீதம் 71 : 1 (ERVTA)
கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன், எனவே நான் என்றும் ஏமாற்றமடையமாட்டேன்.
சங்கீதம் 71 : 2 (ERVTA)
உமது நல்ல செயலினால், நீர் என்னை மீட்பீர். நீர் என்னைக் காப்பாற்றுவீர். நான் சொல்வதைக் கேளும், என்னை மீட்டருளும்.
சங்கீதம் 71 : 3 (ERVTA)
பாதுகாப்பிற்காக ஓடிவரக்கூடிய புகலிடமான அரணாக நீர் எனக்கு இரும். நீர் என் கன்மலை என் பாதுகாப்பிடம். எனவே என்னைக் காப்பதற்குரிய ஆணையைக் கொடும்.
சங்கீதம் 71 : 4 (ERVTA)
என் தேவனே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும். கொடியோரும் தீயோருமான ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும்.
சங்கீதம் 71 : 5 (ERVTA)
என் ஆண்டவரே, நீரே என் நம்பிக்கை. நான் சிறுவனாக இருந்தபோதே உம்மை நம்பினேன்.
சங்கீதம் 71 : 6 (ERVTA)
நான் பிறப்பதற்கு முன்பிருந்தே உம்மையே சார்ந்திருக்கிறேன். என் தாயின் கருவில் இருந்தபோதே நான் உம்மைச் சார்ந்திருந்தேன். நான் உம்மிடம் எப்போதும் ஜெபம் பண்ணினேன்.
சங்கீதம் 71 : 7 (ERVTA)
நீரே என் பெலத்தின் இருப்பிடம். எனவே நான் பிற ஜனங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டானேன்.
சங்கீதம் 71 : 8 (ERVTA)
நீர் செய்யும் அற்புதமான காரியங்களைக் குறித்து நான் எப்போதும் பாடிக்கொண்டிருக்கிறேன்.
சங்கீதம் 71 : 9 (ERVTA)
நான் வயது முதிர்ந்தவனாகிவிட்டதால் என்னைத் தள்ளிவிடாதேயும். என் பெலனை நான் இழக்கையில் என்னை விட்டுவிடாதேயும்.
சங்கீதம் 71 : 10 (ERVTA)
என் பகைவர்கள் எனக்கெதிராகத் திட்டங்கள் வகுத்தார்கள். அந்த ஜனங்கள் உண்மையிலேயே ஒருமித்துச் சந்தித்தார்கள், அவர்கள் என்னைக் கொல்லத் திட்டமிட்டார்கள்.
சங்கீதம் 71 : 11 (ERVTA)
என் பகைவர்கள், “போய் அவனைப் பிடியுங்கள்! தேவன் அவனைக் கைவிட்டார். அவனுக்கு ஒருவரும் உதவமாட்டார்கள்” என்றனர்.
சங்கீதம் 71 : 12 (ERVTA)
தேவனே, நீர் என்னை விட்டு விலகாதேயும்! தேவனே, விரையும்! வந்து என்னைக் காப்பாற்றும்!
சங்கீதம் 71 : 13 (ERVTA)
என் பகைவர்களைத் தோற்கடியும்! அவர்களை முழுமையாக அழித்துவிடும். அவர்கள் என்னைத் தாக்க முயல்கிறார்கள். அவர்கள் வெட்கமும் இகழ்ச்சியும் அடைவார்கள் என நான் நம்புகிறேன்.
சங்கீதம் 71 : 14 (ERVTA)
பின் நான் உம்மை எப்போதும் நம்புவேன். நான் உம்மை மென்மேலும் துதிப்பேன்.
சங்கீதம் 71 : 15 (ERVTA)
நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் ஜனங்களுக்குக் கூறுவேன். நீர் என்னை மீட்ட காலங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறுவேன். எண்ண முடியாத பல காலங்கள் உள்ளன.
சங்கீதம் 71 : 16 (ERVTA)
என் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது பெருமையைப்பற்றி நான் கூறுவேன். உம்மையும் உமது நற்குணங்களையும் நான் பேசுவேன்.
சங்கீதம் 71 : 17 (ERVTA)
தேவனே, நான் சிறுவனாக இருக்கையிலேயே நீர் எனக்குப் போதித்துள்ளீர். இன்றுவரை நீர் செய்துள்ள அற்புதமான காரியங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறியுள்ளேன்.
சங்கீதம் 71 : 18 (ERVTA)
இப்போது நான் வயது முதிர்ந்தவன், என் தலைமுடி நரைத்துவிட்டது. ஆனாலும் தேவனே, நீர் என்னை விட்டுவிடமாட்டீர் என்பதை நான் அறிவேன். உமது வல்லமையையும், பெருமையையும் ஒவ்வொரு புதிய தலைமுறையினருக்கும் நான் சொல்லுவேன்.
சங்கீதம் 71 : 19 (ERVTA)
தேவனே, உமது நன்மை வானங்களுக்கும் மேலாக எட்டுகிறது. தேவனே, உம்மைப் போன்ற தேவன் வேறொருவருமில்லை. நீர் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறீர்.
சங்கீதம் 71 : 20 (ERVTA)
தொல்லைகளையும் தீயகாலங்களையும் நான் காணச் செய்தீர். ஆனாலும் அவை எல்லாவற்றினின்றும் நீர் என்னை மீட்டு, உயிரோடு வைத்தீர். எத்தனை ஆழத்தில் மூழ்கியும் தொல்லைகளிலிருந்து நீர் என்னைத் தூக்கி நிறுத்தினீர்.
சங்கீதம் 71 : 21 (ERVTA)
முன்னிலும் பெரியக் காரியங்களைச் செய்ய, நீர் எனக்கு உதவும். தொடர்ந்து எனக்கு ஆறுதல் அளியும்.
சங்கீதம் 71 : 22 (ERVTA)
வீணையை மீட்டி, நான் உம்மைத் துதிப்பேன். என் தேவனே, நீர் நம்பிக்கைக் குரியவர் என்பதைப் பாடுவேன். இஸ்ரவேலின் பரிசுத்தருக்காக, என் சுரமண்டலத்தில் பாடல்களை இசைப்பேன்.
சங்கீதம் 71 : 23 (ERVTA)
நீர் என் ஆத்துமாவைக் காத்தீர். என் ஆத்துமா மகிழ்ந்திருக்கும். என் உதடுகளால் துதிப்பாடல்களை நான் பாடுவேன்.
சங்கீதம் 71 : 24 (ERVTA)
எப்போதும் உமது நன்மையை என் நாவு பாடும். என்னைக் கொல்ல விரும்பிய ஜனங்கள், தோற்கடிக்கப்பட்டு இகழ்ச்சி அடைவார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24