சங்கீதம் 70 : 1 (ERVTA)
ஜனங்கள் நினைவுக்கு உதவும்படியாக இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. தேவனே, என்னை மீட்டருளும்! தேவனே விரைந்து எனக்கு உதவும்!
சங்கீதம் 70 : 2 (ERVTA)
ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள். அவர்கள் ஏமாற்றமடையச் செய்யும்!
சங்கீதம் 70 : 3 (ERVTA)
ஜனங்கள் என்னை ஏளனம் செய்தார்கள். அவர்கள் விழுந்து வெட்கமடைவார்கள் என நம்புகிறேன்.
சங்கீதம் 70 : 4 (ERVTA)
உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன். உமது உதவியை வேண்டும் (நாடும்) ஜனங்கள் எப்போதும் உம்மைத் துதிக்க முடியும் என நம்புகிறேன்.
சங்கீதம் 70 : 5 (ERVTA)
நான் ஏழையான, உதவியற்ற மனிதன். தேவனே, விரைந்து வந்து என்னை மீட்டருளும்! தேவனே, நீர் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும். மிகவும் தாமதியாதேயும்!

1 2 3 4 5