சங்கீதம் 7 : 1 (ERVTA)
கர்த்தரை நோக்கி தாவீது பாடிய பாடல், பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்த கீசின் மகனாகிய சவுலைப்பற்றியது இந்தப் பாடல் எனது தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன். என்னைத் துரத்தும் மனிதரிடமிருந்து என்னைக் காப்பாற்றும். என்னை மீட்டுக்கொள்ளும்!
சங்கீதம் 7 : 2 (ERVTA)
நீர் எனக்கு உதவாவிட்டால், சிங்கத்தால் பிடிக்கப்பட்ட மிருகத்தைப் போலாவேன். என்னைக் கவர்ந்து செல்கையில் யாரும் என்னைக் காப்பாற்ற இயலாது!
சங்கீதம் 7 : 3 (ERVTA)
எனது தேவனாகிய கர்த்தாவே, நான் தவறு ஒன்றும் செய்யவில்லை. நான் தவறிழைக்க வில்லையென்று உறுதியளிக்கிறேன்!
சங்கீதம் 7 : 4 (ERVTA)
என் நண்பர்களுக்கு நான் தீங்கேதும் செய்யவில்லை. என் நண்பர்களின் பகைவர்க்கு உதவவுமில்லை.
சங்கீதம் 7 : 5 (ERVTA)
ஆனால் ஒரு பகைவன் என்னைத் துரத்துகிறான். அவன் என்னைக் கொல்ல ஆவலாயிருக்கிறான். அவன் என் ஜீவனைத் தரையில் வீழ்த்தி நசுக்க விரும்பி அழுக்குக்குள் என் ஆத்துமாவை அழுத்துகிறான்.
சங்கீதம் 7 : 6 (ERVTA)
கர்த்தாவே எழுந்து உமது கோபத்தைக் காட்டும்! என் பகைவன் கோபங்கொண்டிருக்கிறான், எழுந்து அவனோடு போர் புரியம். கர்த்தாவே, எழுந்து நீதி செய்யும்.
சங்கீதம் 7 : 7 (ERVTA)
கர்த்தாவே, ஜனங்களை நியாயந்தீரும். உம்மைச் சுற்றிலும் தேசங்களை ஒன்று சேரும்.
சங்கீதம் 7 : 8 (ERVTA)
கர்த்தாவே எனக்கு நியாயம் வழங்கும். எனது நேர்மையையும், நான் களங்கமற்றவன் என்பதையும் நிரூபியும்.
சங்கீதம் 7 : 9 (ERVTA)
தீயோரைத் தண்டியும், நல்லோருக்கு உதவும். தேவனே, நீர் நல்லவர். நீர் ஜனங்களின் இருதயங்களைப் பார்க்க வல்லவர்.
சங்கீதம் 7 : 10 (ERVTA)
நேர்மையான இருதயம் கொண்ட ஜனங்களுக்குத் தேவன் உதவுகிறார். தேவன் என்னைப் பாதுகாப்பார்.
சங்கீதம் 7 : 11 (ERVTA)
தேவன் ஒரு நல்ல நீதிபதி, எந்நேரமும் அவர் தீமைக்கு எதிராக தன் கோபத்தைக் காட்டுவார்.
சங்கீதம் 7 : 12 (ERVTA)
தேவன் ஒரு முடிவெடுத்தால் அவர் அதிலிருந்து மாறுவதில்லை.
சங்கீதம் 7 : 13 (ERVTA)
தீய ஜனங்களைத் தண்டிக்க தேவன் ஆயத்தமாயிருக்கிறார்.* தேவன்...ஆயத்தமாயிருக்கிறார் எழுத்தின் பிரகாரம் “அவர் திரும்பிவிடமாட்டார். அவர் தன் வாளைக் கூர்மைபடுத்துவார். தம் வில்லை வளைத்து குறிபார்ப்பார். மரண ஆயுதத்தைத் தயாரித்திருக்கிறார். நெருப்பு அம்புகளைச் செய்திருக்கிறார்” எனப் பொருள்படும்.
சங்கீதம் 7 : 14 (ERVTA)
சில ஜனங்கள் எப்போதும் தீயவற்றைத் திட்டமிடுவார்கள். அவர்கள் இரகசியமாய் திட்டமிடுவார்கள், பொய்யுரைப்பார்கள்.
சங்கீதம் 7 : 15 (ERVTA)
அவர்கள் பிறரை வலைக்குட்படுத்தித் துன்புறுத்த முயல்வார்கள். ஆனால் தங்கள் வலைகளில் தாங்களே சிக்கித் துன்புறுவார்கள்.
சங்கீதம் 7 : 16 (ERVTA)
அவர்கள் தங்களுக்கான தண்டனையைப் பெறுவார்கள். அவர்கள் பிறரிடம் கொடுமையாய் நடந்துகொண்டனர். ஆனால் அவர்களுக்குத் தகுதியானதைப் பெறுவார்கள்.
சங்கீதம் 7 : 17 (ERVTA)
கர்த்தர் நல்லவராயிருப்பதால் அவரைத் துதிப்பேன். மகா உன்னதமான கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17