சங்கீதம் 66 : 1 (ERVTA)
இராகத் தலைவனுக்கு, ஒரு துதிப்பாடல். பூமியிலுள்ள அனைத்தும் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும்.
சங்கீதம் 66 : 2 (ERVTA)
அவரது மகிமைமிக்க நாமத்தைத் துதியுங்கள்! துதிப்பாடல்களால் அவரைப் பெருமைப்படுத்துங்கள்!
சங்கீதம் 66 : 3 (ERVTA)
அவரது வேலைப்பாடுகள் எவ்வளவு அதிசயமானவை என்று தேவனுக்குக் கூறுங்கள்! தேவனே, உமது வல்லமை மிகப்பெரியது! உமது பகைவர்கள் குனிந்து வணங்குவார்கள். அவர்கள் உம்மைக் கண்டு அஞ்சுவார்கள்.
சங்கீதம் 66 : 4 (ERVTA)
உலகம் முழுவதும் உம்மை தொழுதுகொள்ளட்டும். ஒவ்வொருவரும் உமது நாமத்தை துதித்துப் பாடட்டும்.
சங்கீதம் 66 : 5 (ERVTA)
தேவன் செய்த காரியங்களைப் பாருங்கள்! அக்காரியங்கள் நம்மை வியக்கவைக்கும்.
சங்கீதம் 66 : 6 (ERVTA)
தேவன் கடலை வறண்ட நிலமாக்கினார். மகிழ்ச்சியுடைய அவரது ஜனங்கள் நதியைக் கடந்து போனார்கள்.
சங்கீதம் 66 : 7 (ERVTA)
தேவன், அவரது மிகுந்த வல்லமையயால் உலகத்தை ஆளுகிறார். எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களை தேவன் கண்ணோக்குகிறார். ஒருவனும் அவரை எதிர்த்துப் போராட முடியாது.
சங்கீதம் 66 : 8 (ERVTA)
ஜனங்களே, நம் தேவனைத் துதியுங்கள், உரத்த குரலில் துதிப்பாடல்களை அவருக்குப் பாடுங்கள்.
சங்கீதம் 66 : 9 (ERVTA)
தேவன் நமக்கு உயிரைத் தந்தார். தேவன் நம்மைக் காப்பாற்றுகிறார்.
சங்கீதம் 66 : 10 (ERVTA)
ஜனங்கள் வெள்ளியை நெருப்பிலிட்டுப் பரிசோதிப்பதைப்போல தேவன் நம்மைப் பரிசோதித்தார்.
சங்கீதம் 66 : 11 (ERVTA)
தேவனே, நீர் எங்களைக் கண்ணியில் விழச் செய்தீர். கனமான பாரத்தை நீர் எங்கள் மேல் வைக்கிறீர்.
சங்கீதம் 66 : 12 (ERVTA)
எங்கள் பகைவர்கள் எங்கள்மீது நடக்க நீர் அனுமதித்தீர். நெருப்பின் வழியாகவும் தண்ணீரின் வழியாகவும் நடக்குமாறு எங்களை வழி நடத்தினீர். ஆனால் ஒரு பத்திரமான இடத்திற்கு எங்களை அழைத்து வந்தீர்.
சங்கீதம் 66 : 13 (ERVTA)
(13-14)எனவே நான் உமது ஆலயத்திற்குப் பலிகளைக் கொண்டுவருவேன். நான் தொல்லையில் சிக்குண்டபோது உதவிக்காக உம்மைக் கேட்டேன். உமக்குப் பல பொருத்தனைகளைப் பண்ணினேன். இப்போது, நான் பொருத்தனைப் பண்ணினதை உமக்குக் கொடுக்கிறேன்.
சங்கீதம் 66 : 14 (ERVTA)
சங்கீதம் 66 : 15 (ERVTA)
நான் பாவப்பரிகார பலிகளை உமக்குக் கொடுக்கிறேன். நான் ஆட்டுக் கடாக்களோடு நறுமணப்பொருட்களைப் புகையிடுவேன். நான் உமக்குக் காளைகளையும் செம்மறி ஆடுகளையும் தருவேன்.
சங்கீதம் 66 : 16 (ERVTA)
தேவனைத் தொழுதுக்கொள்கிற எல்லா ஜனங்களே, வாருங்கள். தேவன் எனக்குச் செய்தவற்றை உங்களுக்குக் கூறுவேன்.
சங்கீதம் 66 : 17 (ERVTA)
நான் அவரிடம் ஜெபித்தேன், நான் அவரைத் துதித்தேன்.
சங்கீதம் 66 : 18 (ERVTA)
என் இருதயம் தூய்மையாயிருந்தது. எனவே என் ஆண்டவர் நான் கூறியவற்றைக் கேட்டார்.
சங்கீதம் 66 : 19 (ERVTA)
தேவன் நான் கூறியவற்றைக் கேட்டார். தேவன் என் ஜெபத்தைக் கேட்டார்.
சங்கீதம் 66 : 20 (ERVTA)
தேவனைத் துதியுங்கள், தேவன் என்னிடம் பாராமுகமாக இருக்கவில்லை, அவர் என் ஜெபத்தைக் கேட்டார். தேவன் அவரது அன்பை என்னிடம் காட்டியருளினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20