சங்கீதம் 60 : 1 (ERVTA)
தேவனே, எங்களோடு சினங்கொண்டீர், எனவே எங்களை நிராகரித்து அழித்தீர். [QBR2] தயவாய் எங்களிடம் திரும்பி வாரும். [QBR]
சங்கீதம் 60 : 2 (ERVTA)
நீர் பூமியை அசைத்து அதைப் பிளக்கப் பண்ணினீர். [QBR2] நம் உலகம் பிரிந்து விழுந்தது. [QBR2] அருள் கூர்ந்து அவற்றை ஒன்றாக இணைத்து விடும். [QBR]
சங்கீதம் 60 : 3 (ERVTA)
நீர் உமது ஜனங்களுக்குப் பல தொல்லைகளை அனுமதித்தீர். [QBR2] நாங்களோ தள்ளாடி விழுகின்ற குடிவெறியர்களைப் போலானோம். [QBR]
சங்கீதம் 60 : 4 (ERVTA)
உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்களை நீர் எச்சரித்தீர். [QBR2] அவர்கள் இப்போது பகைவனிடமிருந்து தப்பிச்செல்ல முடியும்.
சங்கீதம் 60 : 5 (ERVTA)
உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி எங்களைக் காப்பாற்றும்! [QBR2] என் ஜெபத்திற்குப் பதில் தாரும், நீர் நேசிக்கிற ஜனங்களைக் காப்பாற்றும்.
சங்கீதம் 60 : 6 (ERVTA)
தேவன் அவரது ஆலயத்தில் பேசினார்: [QBR2] “நான் யுத்தத்தில் வென்று, அவ்வெற்றியால் மகிழ்வேன்! [QBR] இந்நாட்டை எனது ஜனங்களோடு பகிர்ந்துகொள்வேன். [QBR2] அவர்களுக்கு சீகேமைக் கொடுப்பேன். [QBR2] அவர்களுக்கு சுக்கோத் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன். [QBR]
சங்கீதம் 60 : 7 (ERVTA)
கீலேயாத்தும், மனாசேயும் என்னுடையவை. [QBR2] எப்பிராயீம் எனது தலைக்குப் பெலன். [QBR2] யூதா என் நியாயத்தின் கோல். [QBR]
சங்கீதம் 60 : 8 (ERVTA)
மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம் [QBR2] ஏதோம் என் மிதியடிகளைச் சுமக்கும் அடிமை. [QBR2] நான் பெலிஸ்தரை வென்று என் வெற்றியை முழக்கமிடுவேன்!”
சங்கீதம் 60 : 9 (ERVTA)
(9-10) தேவனே நீர் எங்களை விட்டு விலகினீர்! [QBR2] வலிய, பாதுகாவலான நகரத்திற்குள் யார் என்னை அழைத்துச் செல்வார்? [QBR] ஏதோமிற்கு எதிராகப் போர் செய்ய யார் என்னை வழி நடத்துவார்? [QBR2] தேவனே, நீர் மட்டுமே எனக்கு உதவக்கூடும். [QBR] ஆனால் நீரோ எங்களை விட்டு விலகினீர்! [QBR2] நீர் எங்கள் சேனையோடு செல்லவில்லை. [QBR]
சங்கீதம் 60 : 10 (ERVTA)
தேவனே, எங்கள் பகைவரை வெல்ல எங்களுக்கு உதவும்! [QBR2] மனிதர்கள் எங்களுக்கு உதவ முடியாது! [QBR]
சங்கீதம் 60 : 11 (ERVTA)
தேவன் மட்டுமே எங்களைப் பலப்படுத்த முடியும். [QBR2] தேவன் எங்கள் பகைவர்களை வெல்ல முடியும். [PE]
சங்கீதம் 60 : 12 (ERVTA)

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

BG:

Opacity:

Color:


Size:


Font: