சங்கீதம் 58 : 1 (ERVTA)
“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல். நியாயாதிபதிகளாகிய நீங்கள் உங்கள் தீர்ப்புகளில் நியாயமானவர்களாக இருக்கவில்லை. நீங்கள் ஜனங்களுக்குச் சரியான நீதி வழங்கவில்லை.
சங்கீதம் 58 : 2 (ERVTA)
நீங்கள் தீயகாரியங்களைச் செய்வதைக் குறித்தே எண்ணுகிறீர்கள். இந்நாட்டில் நீங்கள் கொடிய குற்றங்களைச் செய்கிறீர்கள்.
சங்கீதம் 58 : 3 (ERVTA)
அத்தீயோர் அவர்கள் பிறந்த உடனேயே தவறுகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். பிறந்தது முதலே அவர்கள் பொய்யர்களாக வாழ்கிறார்கள்.
சங்கீதம் 58 : 4 (ERVTA)
அவர்கள் பாம்புகளைப்போன்று ஆபத்தானவர்கள். காதுகேளாத விரியன் பாம்புகளைப் போன்று, அவர்கள் உண்மையைக் கேட்க மறுக்கிறார்கள்.
சங்கீதம் 58 : 5 (ERVTA)
பாம்பாட்டிகளின் இசையையோ, பாடல்களையோ, விரியன் பாம்புகளால் கேட்க முடிவதில்லை. அத்தீயோரும் அப்பாம்புகளைப் போன்றவர்களே.
சங்கீதம் 58 : 6 (ERVTA)
கர்த்தாவே, அந்த ஜனங்கள் சிங்கங்களைப் போன்றவர்கள். எனவே கர்த்தாவே, அவர்கள் பற்களை உடைத்துவிடும்.
சங்கீதம் 58 : 7 (ERVTA)
வழிந்தோடுகிற தண்ணீரைப்போன்று அந்த ஜனங்கள் மறைந்துபோகட்டும். பாதையின் களைகளைப்போல் அவர்கள் சிதைக்கப் படட்டும்.
சங்கீதம் 58 : 8 (ERVTA)
அவர்கள், அசையும்போதெல்லாம் கரைந்து போகிற நத்தையைப் போலாகட்டும். அவர்கள் பகலின் ஒளியைக் காணாமல் பிறக்கும்போதே மரித்துப்போன குழந்தையைப்போல இருக்கட்டும்.
சங்கீதம் 58 : 9 (ERVTA)
நெருப்பில் வைக்கப்படும் பானையைச் சூடேற்றுவதற்காக விரைந்து எரியும் முட்களைப்போன்று அவர்கள் விரைவில் அழியட்டும்.
சங்கீதம் 58 : 10 (ERVTA)
நல்லவனுக்குத் தீமைசெய்த ஜனங்கள் தண்டிக்கப்படுவதை, அவன் பார்க்கையில் மகிழ்ச்சியடைவான். அக்கெட்ட மனிதர்களின் இரத்தத்தால் அவன் தனது பாதங்களைக் கழுவுவான்.
சங்கீதம் 58 : 11 (ERVTA)
அவ்வாறு நிகழும்போது, ஜனங்கள், “நல்லோர் உண்மையிலேயே பயன்பெறுவர், உலகை நியாயந்தீர்க்கும் தேவன் உண்மையாகவே இருக்கிறார்” என்பார்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11