சங்கீதம் 56 : 1 (ERVTA)
தேவனே, ஜனங்கள் என்னைத் தாக்குகிறார்கள், நீர் என்மேல் இரக்கமாயிரும். அவர்கள் என்னைப் பின்தொடர்ந்து வந்து பகலும் இரவும் என்னோடு போரிடுகிறார்கள்.
சங்கீதம் 56 : 2 (ERVTA)
என் பகைவர்கள் தொடர்ந்து என்னைத் தாக்குகிறார்கள். என்னோடு போரிடுபவர்கள் எண்ணிக்கைக்கு அடங்காதவர்கள்.
சங்கீதம் 56 : 3 (ERVTA)
நான் அஞ்சும்போது, உம்மிடம் நம்பிக்கை வைத்தேன்.
சங்கீதம் 56 : 4 (ERVTA)
நான் தேவனை நம்புகிறேன், எனவே அஞ்சேன். ஜனங்கள் என்னைத் துன்புறுத்த முடியாது! தேவன் எனக்குத் தந்த வாக்குறுதிக்காக தேவனைத் துதிப்பேன்.
சங்கீதம் 56 : 5 (ERVTA)
என் பகைவர்களோ என் வார்த்தைகளை எப்போதும் புரட்டுகிறார்கள். அவர்கள் எப்போதும் எனக்கெதிராகத் திட்டங்களை வகுக்கிறார்கள்.
சங்கீதம் 56 : 6 (ERVTA)
என்னைக் கொல்லும் வகைதேடி, அவர்கள் ஒருமித்து ஒளிந்திருந்து என் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கிறார்கள்.
சங்கீதம் 56 : 7 (ERVTA)
தேவனே, அவர்களைத் தப்பவிடாதேயும். அவர்கள் செய்த தீய காரியங்களுக்காக அவர்களை அந்நிய தேசத்தாரிடம் அனுப்பி அவர்களின் கோபத்தால் துன்புறச் செய்யும்.
சங்கீதம் 56 : 8 (ERVTA)
என் வருத்தத்தை நீர் அறிகிறீர். என் ஓயாத அழுகையை நீர் அறிகிறீர். என் கண்ணீரை நீர் நிச்சயமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறீர்.
சங்கீதம் 56 : 9 (ERVTA)
எனவே நான் உம்மிடம் உதவி வேண்டும்போது, என் பகைவர்களைத் தோல்வியடையச் செய்யும். நீர் அதைச் செய்யக்கூடுமென்பதை அறிவேன். நீரே தேவன்!
சங்கீதம் 56 : 10 (ERVTA)
தேவன் தந்த வாக்குறுதிக்காக நான் அவரைத் துதிப்பேன். கர்த்தர் எனக்களித்த வாக்குறுதிக்காக நான் அவரைத் துதிப்பேன்.
சங்கீதம் 56 : 11 (ERVTA)
நான் தேவனை நம்பியிருப்பதால் அஞ்சேன். ஜனங்கள் என்னைத் துன்புறுத்த முடியாது!
சங்கீதம் 56 : 12 (ERVTA)
தேவனே, நான் உமக்கு விசேஷ பொருத்தனைகளைப் பண்ணினேன். நான் சொன்ன பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். என் ஸ்தோத்திரபலியை உமக்குச் செலுத்துவேன்.
சங்கீதம் 56 : 13 (ERVTA)
ஏனெனில் நீர் என்னை மரணத்தினின்று காத்தீர். பிறரிடம் நான் தோல்வியடையாதவாறு செய்தீர். எனவே நான் தேவனை ஒளியில் தொழுதுகொள்வேன். அதை ஜீவனுள்ளோர் மட்டும் பார்க்க முடியும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

BG:

Opacity:

Color:


Size:


Font: