சங்கீதம் 53 : 1 (ERVTA)
தேவன் இல்லை என்று மூடன் மட்டுமே நினைப்பான். [QBR2] அத்தகைய மனிதர்கள் கெட்டவர்களாகவும் தீயவர்களாகவும் அருவருப்பானவர்களாகவும் இருக்கிறார்கள். [QBR2] அவர்கள் நல்ல காரியங்களைச் செய்வதில்லை. [QBR]
சங்கீதம் 53 : 2 (ERVTA)
தேவனுக்காக எதிர்நோக்கியிருக்கும் ஞானமுள்ளவர்கள் உண்டோ என்று [QBR2] பரலோகத்திலிருந்து தேவன் நம்மைக் கவனித்துக்கொண்டிருக்கிறார். [QBR]
சங்கீதம் 53 : 3 (ERVTA)
ஆனால் ஒவ்வொருவரும் தேவனை விட்டு வழி விலகிப் போனார்கள். [QBR2] ஒவ்வொரு மனிதனும் தீயவன். [QBR] நன்மையான காரியத்தைச் செய்பவன் [QBR2] ஒருவன் கூட இல்லை.
சங்கீதம் 53 : 4 (ERVTA)
தேவன்: “அத்தீயோர் நிச்சயமாக உண்மையை அறிவர்! [QBR2] ஆனால் அவர்கள் என்னிடம் ஜெபிப் பதில்லை. [QBR2] தங்கள் உணவை உண்பதைப் போல் தீயோர் விரைந்து என் ஜனங்களை அழிக்கக் காத்திருக்கிறார்கள்” என்கிறார். [QBR]
சங்கீதம் 53 : 5 (ERVTA)
ஆனால் அந்த தீயோர்கள் முன்பு ஒருபோதும் அஞ்சாத அளவுக்கு அஞ்சுவார்கள். [QBR2] அத்தீயோர் இஸ்ரவேலரின் பகைவர்கள். [QBR] அத்தீயோரைக் தேவன் தள்ளிவிட்டார். [QBR2] எனவே தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தோற்கடிப்பார்கள். [QBR] அத்தீயோரின் எலும்புகளை தேவன் சிதறடிப்பார்.
சங்கீதம் 53 : 6 (ERVTA)
சீயோனிலிருந்து இஸ்ரவேலருக்கு வெற்றி வருவதாக. [QBR2] தேவன், அவர்கள் வெற்றிபெற உதவுவார். [QBR] அடிமைத்தனத்திலிருந்து தேவன் தமது ஜனங்களை மீட்கும்போது யாக்கோபு களிகூருவான். [QBR2] இஸ்ரவேல் மிகுந்த மகிழ்ச்சிகொள்வான். [PE]

1 2 3 4 5 6

BG:

Opacity:

Color:


Size:


Font: