சங்கீதம் 5 : 1 (ERVTA)
புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம் கர்த்தாவே, என் வார்த்தைகளைக் கேளும். நான் சொல்ல முயற்சிப்பதை புரிந்துகொள்ளும்.
சங்கீதம் 5 : 2 (ERVTA)
எனது தேவனாகிய அரசனே, என் ஜெபத்தைக் கேளும்.
சங்கீதம் 5 : 3 (ERVTA)
கர்த்தாவே, என் அன்பளிப்புகளை காலைதோறும் உமக்கு படைக்கிறேன். உம்மை உதவிக்காக நோக்குகிறேன், நீர் என் ஜெபங்களைக் கேளும்.
சங்கீதம் 5 : 4 (ERVTA)
தேவனே, தீய ஜனங்கள் உம்மருகே வருவதை நீர் விரும்புகிறதில்லை. தீய ஜனங்கள் உம்மை ஆராதிக்க முடியாது.
சங்கீதம் 5 : 5 (ERVTA)
மூடர் உம்மிடம் வர இயலாது, தீமை செய்யும் ஜனங்களை நீர் வெறுக்கிறீர்.
சங்கீதம் 5 : 6 (ERVTA)
பொய் கூறும் ஜனங்களை நீர் அழிக்கிறீர். பிறரைத் தாக்குவதற்காக இரகசியமாகத் திட்டமிடுவோரைக் கர்த்தர் வெறுக்கிறார்.
சங்கீதம் 5 : 7 (ERVTA)
கர்த்தாவே, உமது மிகுந்த இரக்கத்தினால் நான் உமது ஆலயத்திற்கு வருவேன். உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கித் தலை தாழ்த்தி அச்சத்தோடும், மரியாதையோடும் உம்மை வணங்குவேன்.
சங்கீதம் 5 : 8 (ERVTA)
கர்த்தாவே, சரியான வாழ்க்கை வாழ உமது வழியைக்காட்டும். ஜனங்கள் எனது குறைகளைத் தேடுகிறார்கள். எனவே நான் எவ்வாறு வாழ நீர் விரும்புகிறீரோ, அவ்வழியை எனக்குக் காட்டும்.
சங்கீதம் 5 : 9 (ERVTA)
அந்த ஜனங்கள் உண்மை பேசுவதில்லை அவர்கள் உண்மையைப் புரட்டும் பொய்யர்கள். அவர்கள் வாய்கள் திறந்த கல்லறைகளைப் போன்றவை. அவர்கள் பிறரிடம் நயமான மொழிகளைச் சொல்வார்கள். ஆனால், அவர்கள் கண்ணியில் சிக்கவைப்பதற்காகவே அவ்வாறு செய்வார்கள்.
சங்கீதம் 5 : 10 (ERVTA)
தேவனே, அவர்களைத் தண்டியும். அவர்கள் தங்கள் வலையிலேயே விழட்டும். அந்த ஜனங்கள் உமக்கெதிராகத் திரும்புகிறார்கள். எனவே அவர்களின் எண்ணிக்கையற்ற குற்றங்களுக்காக அவர்களைத் தண்டியும்.
சங்கீதம் 5 : 11 (ERVTA)
ஆனால் தேவனை நம்பும் ஜனங்கள் களிகூரட்டும். என்றென்றும் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். தேவனே, உமது நாமத்தை நேசிக்கும் ஜனங்களைப் பாதுகாத்து, பெலனைத் தாரும்.
சங்கீதம் 5 : 12 (ERVTA)
கர்த்தாவே, நல்லோருக்கு நீர் நன்மை செய்தால் அவர்களைக் காக்கும் பெருங்கேடகமாவீர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12