சங்கீதம் 45 : 1 (ERVTA)
“சோஷனீம்” என்னும் இசைக்கருவியில் வாசிக்க கோரா குடும்பத்தினரின் இராகத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட, ஒரு நேசத்தின் பாடல் அரசனுக்கு இவற்றை எழுதுகையில் அழகு சொற்கள் என் இதயத்தை நிரப்பும். தேர்ந்த எழுத்தாளனின் எழுதுகோல் வெளிப்படுத்தும் சொற்களாய் என் நாவிலிருந்து சொற்கள் வெளிப்படுகின்றன.
சங்கீதம் 45 : 2 (ERVTA)
நீரே யாவரினும் அழகானவர்! நீர் பேச்சில் வல்லவர், எனவே தேவன் உம்மை என்றென்றும் ஆசீர்வதிப்பார்.
சங்கீதம் 45 : 3 (ERVTA)
வாளை எடும். மேன்மையான ஆடைகளை அணியும்.
சங்கீதம் 45 : 4 (ERVTA)
நீர் அற்புதமாகக் காட்சியளிக்கிறீர்! நன்மைக்காகவும், நீதிக்காகவும் சென்று போரில் வெல்லும். அதிசயங்களைச் செய்வதற்கு வல்லமைமிக்க உமது வலக்கரத்தைப் பயன்படுத்தும்.
சங்கீதம் 45 : 5 (ERVTA)
உமது அம்புகள் ஆயத்தமாயுள்ளன. நீர் பலரைத் தோற்கடிப்பீர். உமது பகைவர்கள் மீது அரசனாயிரும்.
சங்கீதம் 45 : 6 (ERVTA)
தேவனே, உமது ஆட்சி என்றென்றும் தொடரும். நன்மையே உமது செங்கோலாகும்.
சங்கீதம் 45 : 7 (ERVTA)
நீர் நன்மையை விரும்பித் தீமையைப் பகைக்கிறீர். எனவே உமது தேவன் உம் நண்பர்களுக்கு மேலாக உம்மை அரசனாக்கினார்.
சங்கீதம் 45 : 8 (ERVTA)
வெள்ளைப்போளம், இலவங்கம், சந்தனம் ஆகியவற்றின் நறுமணம் உம் ஆடைகளில் வீசும். தந்தத்தால் மூடப்பட்ட அரண்மனைகளிலிருந்து உம்மை மகிழ்வூட்டும் இசை பரவும்.
சங்கீதம் 45 : 9 (ERVTA)
மணத்தோழியரே அரசனின் குமாரத்திகள் ஆவர். உமது வலப் பக்கத்தில் மணப்பெண் பொன்கிரீடம் சூடி நிற்கிறாள்.
சங்கீதம் 45 : 10 (ERVTA)
மகளே, கேள், கவனமாகக் கேள், நீ புரிந்துகொள்வாய். உன் ஜனங்களையும், உன் தந்தையின் குடும்பத்தையும் மறந்துவிடு.
சங்கீதம் 45 : 11 (ERVTA)
அரசர் உன் அழகை விரும்புகிறார். அவர் உன் புது மணமகன். நீ அவரைப் பெருமைப்படுத்துவாய்.
சங்கீதம் 45 : 12 (ERVTA)
தீருவின் செல்வந்தர்கள் ஜனங்கள் உனக்குப் பரிசுகள் தருவார்கள். அவர்கள் உன்னைக் காண விரும்புவார்கள்.
சங்கீதம் 45 : 13 (ERVTA)
அரச குமாரத்தி பொன்னில் பதிக்கப் பெற்ற விலையுயர்ந்த அழகிய மணியைப் போன்றவள்.
சங்கீதம் 45 : 14 (ERVTA)
மணமகள் அழகிய ஆடையணிந்து அரசனிடம் அழைத்துவரப்பட்டாள். மணத் தோழியர் அவளைத் தொடர்ந்தனர்.
சங்கீதம் 45 : 15 (ERVTA)
அவர்கள் மகிழ்ச்சி பொங்க வந்தனர். மனமகிழ்வோடு அரண்மனைக்குள் நுழைந்தனர்.
சங்கீதம் 45 : 16 (ERVTA)
அரசே, உம் மகன்கள் உமக்குப் பின் ஆட்சி செய்வார்கள். தேசம் முழுவதும் அவர்களை ஆளச் செய்வீர்.
சங்கீதம் 45 : 17 (ERVTA)
உமது நாமத்தை என்றென்றும் புகழ் பெறச் செய்வேன். என்றென்றும் ஜனங்கள் உம்மைத் துதிப்பார்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17