சங்கீதம் 42 : 1 (ERVTA)
#0புத்தகம் 2 கோராகின் குடும்பத்தின் மஸ்கீல் என்னும் இராகத் தலைவனிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் பாடல் நீரூற்றின் தண்ணீருக்காக மானானது தாகங்கொள்ளுகிறது. அவ்வாறே என் ஆத்துமா தேவனே உமக்காகத் தாகமடைகிறது.
சங்கீதம் 42 : 2 (ERVTA)
என் ஆத்துமா ஜீவனுள்ள தேவனுக்காகத் தாகமடைகிறது. அவரைச் சந்திக்க நான் எப்போது போவேன்?
சங்கீதம் 42 : 3 (ERVTA)
என் பகைவன் எப்போதும் என்னைக் கேலி செய்து, “உன் தேவன் எங்கே? உன்னைக் காப்பாற்றுவதற்காக அவர் இன்னமும் வரவில்லையா?” என்று கேட்கிறபடியால் இரவும் பகலும் என் கண்ணீரே என் உணவாயிற்று.
சங்கீதம் 42 : 4 (ERVTA)
தேவனுடைய ஆலயத்திற்குக் கூட்டத்தினரை வழிநடத்தி நடந்ததையும், பலரோடு ஓய்வு நாளைக் கொண்டாடியதையும், துதித்துப் பாடல்களைப் பாடி மகிழ்ந்ததையும், நான் நினைவு கூரும்போது என் உள்ளம் உடைந்து போகிறது.
சங்கீதம் 42 : 5 (ERVTA)
ஏன் நான் மிகவும் துக்கமாயிருக்க வேண்டும்? ஏன் நான் மிகவும் கலங்கிப்போக வேண்டும்? நான் தேவனுடைய உதவிக்காகக் காத்திருப்பேன். அவரைத் துதிக்கும் வாய்ப்பு இன்னும் எனக்குக் கிடைக்கும். அவர் என்னை மீட்பார்.
சங்கீதம் 42 : 6 (ERVTA)
என் தேவனே, நான் மிகவும் துக்கமாயிருக்கிறேன். எனவே நான் உம்மைக் கூப்பிட்டேன். யோர்தான் பள்ளத்தாக்கிலிருந்து எர்மோன் மலைவரைக்கும் பின் மிசார் மலை (சிறுமலை) வரைக்கும் போனேன்.
சங்கீதம் 42 : 7 (ERVTA)
பூமியின் ஆழங்களிலிருந்து பொங்கியெழும் தண்ணீரைப் போன்றும், கடலிலிருந்து அலைகள் தொடர்ந்து எழும்புவதைப் போன்றும், மீண்டும் மீண்டும் தொல்லைகள் என்னைச் சூழ்ந்தன. கர்த்தாவே, உமது அலைகள் என்னைச் சூழ்ந்து தாக்குகின்றன.
சங்கீதம் 42 : 8 (ERVTA)
ஒவ்வொரு நாளும் கர்த்தர் தமது உண்மை அன்பை வெளிப்படுத்துகிறதினால் ஒவ்வொரு இரவும் அவரது பாடல்களை நான் பாடுகிறேன். ஜீவனுள்ள தேவனிடம் நான் ஜெபிக்கிறேன்.
சங்கீதம் 42 : 9 (ERVTA)
என் பாறையான தேவனிடம் நான் பேசுவேன். நான், “கர்த்தாவே, ஏன் என்னை மறந்தீர்? என் பகைவரிடமிருந்து தப்பும் வழியை எனக்கு நீர் ஏன் காட்டவில்லை” என்பேன்.
சங்கீதம் 42 : 10 (ERVTA)
என் பகைவர்கள் என்னை இடைவிடாது கேலி செய்து, “உன் தேவன் எங்கே? உன்னைக் காப்பாற்ற இன்னமும் அவர் வரவில்லையா?” என்று என்னைக் கேட்டு அவர்களின் வெறுப்பைக் காட்டுகிறார்கள்.
சங்கீதம் 42 : 11 (ERVTA)
ஏன் நான் துக்கமாயிருக்க வேண்டும்? ஏன் நான் கலக்கம் கொள்ளவேண்டும்? நான் தேவனுடைய உதவிக்காகக் காத்திருப்பேன். அவரைத் துதிக்கும் வாய்ப்பு இன்னும் எனக்குக் கிடைக்கும். அவர் என்னை மீட்பார்!
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11