சங்கீதம் 41 : 1 (ERVTA)
இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல் ஏழைகள் வெற்றிபெற உதவி செய்யும் ஒருவன் பல ஆசீர்வாதங்களைப் பெறுவான். தொல்லைகள் வரும்போது கர்த்தர் அவனை மீட்பார்.
சங்கீதம் 41 : 2 (ERVTA)
கர்த்தர் அவனைக் காத்து அவன் வாழ்வை மீட்பார். பூமியில் அவன் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பான். அவனை அழிக்க அவனுடைய பகைவர்களை தேவன் அனுமதிக்கமாட்டார்.
சங்கீதம் 41 : 3 (ERVTA)
அவன் நோயுற்றுப் படுக்கையில் விழும்போது கர்த்தர் அவனுக்குப் பலமளிப்பார். அவன் நோயுற்றுப் படுக்கையில் இருக்கலாம், ஆனால் கர்த்தர் அவனைக் குணப்படுத்துவார்.
சங்கீதம் 41 : 4 (ERVTA)
நான், “கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும். நான் உமக்கெதிராகப் பாவம் செய்தேன். ஆனால் என்னை மன்னித்து என்னைக் குணப்படுத்தும்!” என்றேன்.
சங்கீதம் 41 : 5 (ERVTA)
என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீமையானவற்றைப் பேசினார்கள். அவர்கள், “அவன் எப்போது மரித்து, மறக்கப்படுவான்?” என்றார்கள்.
சங்கீதம் 41 : 6 (ERVTA)
சிலர் என்னைச் சந்திக்க வந்தார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் நினைப்பதை என்னிடம் கூறவில்லை. அவர்கள் என்னைப்பற்றியச் செய்திகளை தெரிந்து கொள்ள வந்தார்கள். அதன் பிறகு அவர்கள் சென்று வதந்திகளை பரப்புகிறார்கள்.
சங்கீதம் 41 : 7 (ERVTA)
என்னைப்பற்றிய தீயசொற்களை என் பகைவர்கள் இரகசியமாக முணுமுணுக்கிறார்கள். அவர்கள் எனக்கெதிராகத் திட்டமிடுகிறார்கள்.
சங்கீதம் 41 : 8 (ERVTA)
அவர்கள், “அவன் ஏதோ தவுறு செய்தான், எனவே நோயுற்றான். அவன் குணப்படப் போவதில்லை” என்கிறார்கள்.
சங்கீதம் 41 : 9 (ERVTA)
என் சிறந்த நண்பன் என்னோடு சாப்பிட்டான். நான் அவனை நம்பினேன். ஆனால் இப்போது அவனும் எனக்கெதிராகத் திரும்பிவிட்டான்.
சங்கீதம் 41 : 10 (ERVTA)
எனவே கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும். நான் குணமாகி எழுந்திருக்கட்டும், அவர்களுக்குப் பதில் அளிப்பேன்.
சங்கீதம் 41 : 11 (ERVTA)
கர்த்தாவே, என் பகைவர்கள் என்னை காயப்படுத்தாதிருக்கட்டும். அப்போது நீர் என்னை ஏற்றுக்கொண்டீர் என்பதை அறிவேன்.
சங்கீதம் 41 : 12 (ERVTA)
நான் களங்கமற்றிருந்தேன். நீர் எனக்கு ஆதரவளித்தீர். என்னை எழுந்திருக்கப் பண்ணி, என்றென்றும் உமக்குச் சேவை செய்யப்பண்ணும்.
சங்கீதம் 41 : 13 (ERVTA)
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை வாழ்த்துங்கள். இவர் இருந்தவரும் இருக்கிறவருமானவர். ஆமென்! ஆமென்!
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13