சங்கீதம் 36 : 1 (ERVTA)
இராகத் தலைவனுக்கு, கர்த்தருடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல் தீயவன் ஒருவன் தனக்குள், “நான் தேவனுக்கு பயப்படவோ, அவரை மதிக்கவோமாட்டேன்” எனக் கூறும்போது அவன் மிகத்தீமையான காரியத்தைச் செய்கிறான்.
சங்கீதம் 36 : 2 (ERVTA)
அம்மனிதன் தனக்குத்தானே பொய் பேசுகிறான். அம்மனிதன் தனது சொந்த தவறுகளைப் பார்ப்பதில்லை. எனவே அவன் மன்னிப்பும் கேட்பதில்லை.
சங்கீதம் 36 : 3 (ERVTA)
அவன் வார்த்தைகள் பயனற்ற பொய்களாகும். அவன் ஞானம் பெறவுமில்லை, நல்லதைச் செய்யக் கற்றுக்கொள்ளவுமில்லை.
சங்கீதம் 36 : 4 (ERVTA)
இரவில், அவன் தீய செயல்களைத் திட்டமிடுகிறான். எழுந்து, நல்லவற்றைச் செய்வதில்லை. ஆனால் தீயவற்றைச் செய்வதற்கு அவன் மறுப்பதில்லை.
சங்கீதம் 36 : 5 (ERVTA)
கர்த்தாவே, உமது உண்மை அன்பு வானத்திலும் உயர்ந்தது. உம் நேர்மை மேகங்களிலும் உயர்ந்தது.
சங்கீதம் 36 : 6 (ERVTA)
கர்த்தாவே, உமது நன்மை உயரமான மலைகளைக் காட்டிலும் உயர்ந்தது. உமது நியாயம் ஆழமான சமுத்திரத்திலும் ஆழமானது. கர்த்தாவே, நீர் மனிதனையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
சங்கீதம் 36 : 7 (ERVTA)
உமது அன்பான இரக்கத்தைக் காட்டிலும் விலையுயர்ந்தது எதுவுமில்லை. ஜனங்கள் உம்மிடத்தில் அடைக்கலம் புகுகின்றனர். உமது கருணையான பாதுகாப்பில் மகிழ்கிறார்கள்.
சங்கீதம் 36 : 8 (ERVTA)
கர்த்தாவே, உம் வீட்டின் நற்காரியங்களால் அவர்கள் புதுவலிமை பெறுகிறார்கள். அற்புதமான நதியிலிருந்து அவர்களைப் பருகப்பண்ணுவீர்.
சங்கீதம் 36 : 9 (ERVTA)
கர்த்தாவே, ஜீவஊற்று உம்மிடமிருந்து புறப்படுகிறது. உமது வெளிச்சம் நாங்கள் ஒளியைக் காண உதவுகிறது.
சங்கீதம் 36 : 10 (ERVTA)
கர்த்தாவே, உம்மை உண்மையில் அறியும் ஜனங்களைத் தொடர்ந்து நேசியும். உமக்கு உண்மையாயிருக்கிற அந்த ஜனங்களுக்கு உமது நன்மை எப்போதும் இருக்கட்டும்.
சங்கீதம் 36 : 11 (ERVTA)
கர்த்தாவே, பெருமை நிரம்பியோர் என்னை அகப்படுத்தாதிருக்கட்டும். தீயவர்கள் என்னைப் பிடிக்கவிடாதிரும்.
சங்கீதம் 36 : 12 (ERVTA)
“துன்மார்க்கர் இங்கே விழுந்து நசுக்கப்பட்டனர். அவர்கள் மீண்டும் எழுந்திருப்பதில்லை” என்பதை அவர்கள் கல்லறைகளில் பொறித்து வையுங்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12