சங்கீதம் 35 : 1 (ERVTA)
{தாவீதின் பாடல்} [PS] கர்த்தாவே, என் யுத்தங்களையும் [QBR2] என் போர்களையும் நீரே நடத்தும். [QBR]
சங்கீதம் 35 : 2 (ERVTA)
கர்த்தாவே, சிறியதும் பெரியதுமான கேடகத்தை எடுத்துக்கொள்ளும். [QBR2] எழுந்திருந்து எனக்கு உதவும். [QBR]
சங்கீதம் 35 : 3 (ERVTA)
ஈட்டியை எடுத்து என்னைத் துரத்தும் ஜனங்களோடு போரிடும். [QBR2] கர்த்தாவே, என் ஆத்துமாவை நோக்கி, “நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்று கூறும்.
சங்கீதம் 35 : 4 (ERVTA)
சிலர் என்னைக் கொல்ல முயல்கிறார்கள். [QBR2] அவர்கள் ஏமாறவும் வெட்கமடையவும் செய்யும். அவர்கள் திரும்பி ஓடிவிடச் செய்யும். [QBR] அவர்கள் என்னைக் காயப்படுத்தத் திட்டமிடுகிறார்கள். [QBR2] அவர்களை வெட்கமடையச் செய்யும். [QBR]
சங்கீதம் 35 : 5 (ERVTA)
காற்றால் பறக்கடிக்கும் பதரைப்போல் அவர்களை மாற்றும். [QBR2] கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்தட்டும். [QBR]
சங்கீதம் 35 : 6 (ERVTA)
கர்த்தாவே, அவர்களின் பாதை இருளாகவும், வழுக்கலுடையதாகவும் ஆகட்டும். [QBR2] கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்தட்டும். [QBR]
சங்கீதம் 35 : 7 (ERVTA)
நான் பிழையேதும் செய்யவில்லை. [QBR2] ஆனால் அவர்கள் என்னைத் தங்கள் கண்ணியில் சிக்கவைக்க முயல்கிறார்கள். [QBR2] காரணமின்றி அவர்கள் என்னைச் சிக்கவைக்க முயல்கிறார்கள். [QBR]
சங்கீதம் 35 : 8 (ERVTA)
எனவே கர்த்தாவே, அவர்களே தங்கள் கண்ணிகளில் விழட்டும். [QBR2] அவர்கள் தங்கள் வலைகளில் தடுமாறட்டும். [QBR2] அறியாத தீங்கு அவர்களைப் பிடிக்கட்டும். [QBR]
சங்கீதம் 35 : 9 (ERVTA)
அப்போது நான் கர்த்தரில் களிகூருவேன். [QBR2] அவர் என்னை மீட்கும்போது நான் சந்தோஷம்கொள்வேன். [QBR]
சங்கீதம் 35 : 10 (ERVTA)
“கர்த்தாவே, உம்மைப் போன்றோர் யாருமில்லை. [QBR2] கர்த்தாவே, பலமான ஜனங்களிடமிருந்து நீர் ஏழையைக் காப்பாற்றுகிறீர். [QBR] ஏழையினும் கீழ்ப்பட்ட ஏழைகளின் பொருள்களைக் கவரும் கயவர்களிடமிருந்து [QBR2] அவர்களைக் காப்பாற்றுகிறீர்” என்று என் முழு மனதோடும் கூறுவேன். [QBR]
சங்கீதம் 35 : 11 (ERVTA)
சாட்சிகள் சிலர் என்னைத் துன்புறுத்தத் திட்டமிடுகின்றனர். [QBR2] அந்த ஜனங்கள் கேள்விகள் எழுப்புகின்றனர். [QBR2] அவர்கள் பேசுவதைக் குறித்து நான் அறியேன். [QBR]
சங்கீதம் 35 : 12 (ERVTA)
நான் நற்காரியங்களையே செய்திருக்கிறேன். [QBR2] ஆனால் அந்த ஜனங்கள் எனக்குத் தீய காரியங்களைச் செய்கின்றனர். [QBR2] கர்த்தாவே, தகுதியான நற்காரியங்களை எனக்குத் தாரும். [QBR]
சங்கீதம் 35 : 13 (ERVTA)
அந்த ஜனங்கள் நோயுற்றபோது, அவர்களுக்காக வருந்தினேன். [QBR2] உணவு உண்ணாமல் என் துக்கத்தை வெளிப்படுத்தினேன். [QBR2] அவர்களுக்காக ஜெபித்ததினால் நான் பெறும் பலன் இதுவா? [QBR]
சங்கீதம் 35 : 14 (ERVTA)
அந்த ஜனங்களுக்காகத் துக்கத்தின் ஆடைகளை உடுத்திக்கொண்டேன். [QBR2] அந்த ஜனங்களை என் நண்பர்களைப் போலவும், என் சகோதரர்களைப்போலவும் நடத்தினேன். [QBR] தாயை இழந்த மனிதன் அழுவதைப்போன்று நான் துக்கமுற்றேன். [QBR2] அந்த ஜனங்களுக்காக என் துக்கத்தை வெளிப்படுத்துவதற்குக் கறுப்பு நிற ஆடைகளை உடுத்திக் கொண்டேன். [QBR2] துக்கத்தால் தலை குனிந்து நடந்தேன். [QBR]
சங்கீதம் 35 : 15 (ERVTA)
ஆனால் என் தவற்றுக்கு அந்த ஜனங்கள் நகைத்தனர். [QBR2] அந்த ஜனங்கள் உண்மை நண்பர்கள் அல்ல. [QBR] ஜனங்களை நான் அறிந்திருக்கவில்லை. [QBR2] அந்த ஜனங்கள் என்னைச் சூழ்ந்து தாக்கினார்கள். [QBR]
சங்கீதம் 35 : 16 (ERVTA)
அவர்கள் தீய மொழிகளைப் பேசி என்னைப் பரிகசித்தார்கள். [QBR2] அவர்கள் பற்களைக் கடித்துத் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.
சங்கீதம் 35 : 17 (ERVTA)
என் ஆண்டவரே, அத்தீய காரியங்கள் நடப்பதை எத்தனைக் காலம் பொறுத்திருப்பீர்? [QBR2] அந்த ஜனங்கள் என்னை அழிக்க முயலுகிறார்கள். [QBR2] கர்த்தாவே, என் உயிரைக் காப்பாற்றும் குரூரமான சிங்கம் போன்றவர்களாகிய அத்தீயோரிடமிருந்து என் ஆருயிரைக் காப்பாற்றும்.
சங்கீதம் 35 : 18 (ERVTA)
கர்த்தாவே, பெரும் சபையில் உம்மைத் துதிப்பேன். [QBR2] வல்லமைமிக்க ஜனங்கள் மத்தியில் உம்மைத் துதிப்பேன். [QBR]
சங்கீதம் 35 : 19 (ERVTA)
பொய் பேசுகிற என் பகைவர்கள் எப்போதும் நகைத்துக்கொண்டிருக்க முடியாது. [QBR2] தங்களின் இரகசிய திட்டங்களுக்காக என் பகைவர்கள் கண்டிப்பாகத் தண்டனை பெறுவார்கள். [QBR]
சங்கீதம் 35 : 20 (ERVTA)
என் பகைவர்கள் சமாதானத்திற்கான திட்டங்களை நிச்சயமாக வகுக்கவில்லை. [QBR2] இந்நாட்டிலுள்ள சமாதானமான ஜனங்களுக்குத் தீமைகள் செய்வதற்கு இரகசிய திட்டங்களை அவர்கள் வகுக்கிறார்கள். [QBR]
சங்கீதம் 35 : 21 (ERVTA)
என் பகைவர்கள் என்னைக்குறித்துத் தீய காரியங்களையே பேசுகிறார்கள். [QBR2] அவர்கள் மகிழ்ச்சியடைந்து “ஆஹா! [QBR2] நீ என்ன செய்கிறாய் என்பதை நாங்கள் அறிவோம்” என்கிறார்கள். [QBR]
சங்கீதம் 35 : 22 (ERVTA)
கர்த்தாவே, உண்மையில் நடப்பவற்றை நீர் நிச்சயமாகப் பார்க்கமுடியும். [QBR2] எனவே சும்மா இராதேயும். [QBR2] என்னை விட்டு விலகாதேயும். [QBR]
சங்கீதம் 35 : 23 (ERVTA)
கர்த்தாவே விழித்தெழும், எழுந்திரும். [QBR2] என் தேவனே, என் ஆண்டவரே, எனக்காகப் போரிட்டு நியாயமளியும். [QBR]
சங்கீதம் 35 : 24 (ERVTA)
எனது தேவனாகிய கர்த்தாவே, தக்க முறையில் என்னை நியாயந்தீரும். [QBR2] அந்த ஜனங்கள் என்னைப் பார்த்து நகைக்கவிடாதேயும். [QBR]
சங்கீதம் 35 : 25 (ERVTA)
அந்த ஜனங்கள், “ஆஹா! [QBR2] எங்களுக்கு வேண்டியதைப் பெற்றோம்” எனக் கூறவிடாதேயும். [QBR2] கர்த்தாவே, “நாங்கள் அவனை அழித்தோம்!” [QBR2] என அவர்கள் கூறவிடாதேயும். [QBR]
சங்கீதம் 35 : 26 (ERVTA)
என் பகைவர்கள் வெட்கி, நாணுவார்கள் என நம்புகிறேன். [QBR2] எனக்குத் தீயக் காரியங்கள் நிகழ்ந்தபோது அந்த ஜனங்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். [QBR] என்னைக் காட்டிலும் தாங்கள் சிறந்தவர்கள் என்று அவர்கள் எண்ணினார்கள். [QBR2] எனவே அந்த ஜனங்கள் வெட்கத்தினாலும் இழிவினாலும் மூடப்படட்டும். [QBR]
சங்கீதம் 35 : 27 (ERVTA)
எனக்கு நல்ல காரியங்கள் நிகழட்டுமென்று சில ஜனங்கள் விரும்புகிறார்கள். [QBR2] அந்த ஜனங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழுவார்கள் என நான் நம்புகிறேன். [QBR] அந்த ஜனங்கள் எப்போதும், “கர்த்தர் மேன்மையானவர்! [QBR2] அவரது வேலையாளுக்கு நல்லது எதுவோ அதையே அவர் விரும்புவார்” என்று கூறுகிறார்கள்.
சங்கீதம் 35 : 28 (ERVTA)
எனவே கர்த்தாவே, நீர் எவ்வளவு நல்லவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுவேன். [QBR2] ஒவ்வொரு நாளும் நான் உம்மைத் துதிப்பேன். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

BG:

Opacity:

Color:


Size:


Font: