சங்கீதம் 33 : 1 (ERVTA)
நல்லோரே, கர்த்தருக்குள் களிப்படையுங்கள்! [QBR2] நல்ல நேர்மையான ஜனங்களே, அவரைத் துதியுங்கள்! [QBR]
சங்கீதம் 33 : 2 (ERVTA)
சுரமண்டலத்தை இசைத்துக் கர்த்தரைத் துதியுங்கள்! [QBR2] பத்து நரம்பு வீணையை இசைத்து கர்த்தரைப் பாடுங்கள். [QBR]
சங்கீதம் 33 : 3 (ERVTA)
புதுப்பாட்டை அவருக்குப் பாடுங்கள்! [QBR2] மகிழ்ச்சியான இராகத்தை இனிமையாய் மீட்டுங்கள். [QBR]
சங்கீதம் 33 : 4 (ERVTA)
தேவனுடைய வாக்கு உண்மையானது! [QBR2] அவர் செய்பவற்றை உறுதியாக நம்புங்கள்! [QBR]
சங்கீதம் 33 : 5 (ERVTA)
நன்மையையும் நேர்மையையும் தேவன் நேசிக்கிறார். [QBR2] கர்த்தர் பூமியை அவரது அன்பினால் நிப்பியுள்ளார். [QBR]
சங்கீதம் 33 : 6 (ERVTA)
கர்த்தர் கட்டளையிட, உலகம் உருவாயிற்று. [QBR2] தேவனுடைய வாயின் மூச்சு பூமியிலுள்ள அனைத்தையும் உருவாக்கிற்று. [QBR]
சங்கீதம் 33 : 7 (ERVTA)
கடலின் தண்ணீரை ஒரே இடத்தில் தேவன் ஒன்று திரட்டினார். [QBR2] அவர் சமுத்திரத்தை அதற்குரிய இடத்தில் வைக்கிறார். [QBR]
சங்கீதம் 33 : 8 (ERVTA)
பூமியிலுள்ளோர் யாவரும் கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கவேண்டும். [QBR2] உலகில் வாழும் ஜனங்கள் எல்லோரும் அவருக்கு அஞ்ச வேண்டும். [QBR]
சங்கீதம் 33 : 9 (ERVTA)
ஏனெனில் தேவன் கட்டளையிட, அக்காரியம் நிறைவேறுகிறது. [QBR2] அவர் “நில்!” எனக்கூற அக்காரியம் நின்றுவிடும். [QBR]
சங்கீதம் 33 : 10 (ERVTA)
எல்லோருடைய அறிவுரையையும் பயனற்றுப்போகச் செய்ய கர்த்தராலாகும். [QBR2] அவர்கள் திட்டங்களை கர்த்தர் அழிக்கக் கூடும். [QBR]
சங்கீதம் 33 : 11 (ERVTA)
கர்த்தருடைய அறிவுரை என்றென்றும் நல்லது. [QBR2] தலைமுறை தலைமுறைக்கும் அவர் திட்டங்கள் நன்மை தரும். [QBR]
சங்கீதம் 33 : 12 (ERVTA)
கர்த்தரை தேவனாக ஏற்றுக்கொண்ட ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். [QBR2] தேவன் தனது சொந்த ஜனங்களாக அவர்களைத் தேர்ந்தெடுத்தார். [QBR]
சங்கீதம் 33 : 13 (ERVTA)
பரலோகத்திலிருந்து கர்த்தர் கீழே பார்த்து, [QBR2] எல்லா ஜனங்களையும் கண்டார். [QBR]
சங்கீதம் 33 : 14 (ERVTA)
அவரது உயர்ந்த சிங்காசனத்திலிருந்து [QBR2] பூமியில் வாழும் மனிதர்களையெல்லாம் பார்த்தார். [QBR]
சங்கீதம் 33 : 15 (ERVTA)
ஒவ்வொருவனின் மனதையும் தேவன் படைத்தார். [QBR2] ஒவ்வொருவனின் எண்ணத்தையும் தேவன் அறிகிறார். [QBR]
சங்கீதம் 33 : 16 (ERVTA)
அரசன் தனது சொந்த வல்லமையால் காப்பாற்றப்படுவதில்லை. [QBR2] ஒரு வீரன் தனது மிகுந்த பெலத்தால் காப்பாற்றப்படுவதில்லை. [QBR]
சங்கீதம் 33 : 17 (ERVTA)
போரில் குதிரைகள் உண்மையான வெற்றியைத் தருவதில்லை. [QBR2] அவற்றின் ஆற்றல் நம்மை தப்புவிக்க வகை செய்வதேயில்லை. [QBR]
சங்கீதம் 33 : 18 (ERVTA)
கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை கவனித்துக் காப்பாற்றுகிறார். [QBR2] அவரது பேரன்பு அவரை தொழுதுகொள்வோரைக் காக்கும். [QBR]
சங்கீதம் 33 : 19 (ERVTA)
தேவன் அந்த ஜனங்களை மரணத்தினின்று காக்கிறார். [QBR2] அவர்கள் பசித்திருக்கையில் அவர் பெலனளிக்கிறார். [QBR]
சங்கீதம் 33 : 20 (ERVTA)
எனவே நாம் கர்த்தருக்காகக் காத்திருப்போம். [QBR2] அவரே நமக்கு உதவியும் கேடகமுமாயிருக்கிறார். [QBR]
சங்கீதம் 33 : 21 (ERVTA)
தேவன் என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறார். [QBR2] அவரது பரிசுத்த நாமத்தை நான் உண்மையாக நம்புகிறேன். [QBR]
சங்கீதம் 33 : 22 (ERVTA)
கர்த்தாவே, நாங்கள் உம்மை உண்மையாக தொழுதுகொள்கிறோம்! [QBR2] உமது பேரன்பை எங்களுக்குக் காண்பியும். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

BG:

Opacity:

Color:


Size:


Font: