சங்கீதம் 31 : 1 (ERVTA)
{இசைத்தலைவனுக்காக தாவீது பாடிய பாடல்} [PS] கர்த்தாவே, நான் உம்மை நம்பியிருக்கிறேன். [QBR2] என்னை ஏமாற்றாதேயும். என்னிடம் தயவாயிருந்து என்னைக் காப்பாற்றும். [QBR]
சங்கீதம் 31 : 2 (ERVTA)
தேவனே, எனக்குச் செவிகொடும். [QBR2] விரைந்து வந்து என்னைக் காப்பாற்றும். [QBR] எனது பாறையாய் இரும். எனக்குப் பாதுகாப்பான இடமாயிரும். [QBR2] எனக்குக் கோட்டையாயிரும். என்னைப் பாதுகாத்தருளும். [QBR]
சங்கீதம் 31 : 3 (ERVTA)
தேவனே, நீரே என் பாறை. [QBR2] எனவே, உமது நாமத்தின் நன்மையால் என்னை நடத்தி, வழி காட்டும். [QBR]
சங்கீதம் 31 : 4 (ERVTA)
என் பகைவர்கள் எனக்கு முன்னே கண்ணியை வைத்தார்கள். [QBR2] அவர்கள் கண்ணிக்கு என்னைக் காப்பாற்றும். நீரே என் பாதுகாப்பிடம் ஆவீர். [QBR]
சங்கீதம் 31 : 5 (ERVTA)
கர்த்தாவே, நான் நம்பவல்ல தேவன் நீரே. [QBR2] என் உயிரை உமது கரங்களில் நான் வைத்தேன். என்னைக் காப்பாற்றும்! [QBR]
சங்கீதம் 31 : 6 (ERVTA)
பொய்த் தெய்வங்களைத் தொழுது கொள்ளும் ஜனங்களை நான் வெறுக்கிறேன். [QBR2] கர்த்தரை மட்டுமே நான் நம்புகிறேன். [QBR]
சங்கீதம் 31 : 7 (ERVTA)
தேவனே, உமது தயவு எனக்கு மிகுந்த களிப்பூட்டுகிறது. [QBR2] நீர் எனது தொல்லைகளைக் கண்டுள்ளீர். [QBR2] என் தொல்லைகளை நீர் அறிகிறீர். [QBR]
சங்கீதம் 31 : 8 (ERVTA)
எனது பகைவர்கள் என்னை வெற்றிகொள்ள விடமாட்டீர். [QBR2] அவர்கள் கண்ணிகளிலிருந்து என்னை விடுவியும். [QBR]
சங்கீதம் 31 : 9 (ERVTA)
கர்த்தாவே, எனக்குத் தொல்லைகள் பல உண்டு, எனவே என்னிடம் தயவாயிரும். [QBR2] என் மனத் துன்பத்தினால் என் கண்கள் நோகின்றன. [QBR2] என் தொண்டையும் வயிறும் வலிக்கின்றன. [QBR]
சங்கீதம் 31 : 10 (ERVTA)
என் வாழ்க்கைத் துயரத்தில் முடிந்து கொண்டிருக்கிறது. [QBR2] பெருமூச்சால் என் வயது கழிந்து போகிறது. [QBR] என் தொல்லைகள் என் வலிமையை அழிக்கின்றன. [QBR2] என் ஆற்றல் என்னை விட்டு விலகிக் கொண்டிருக்கிறது. [QBR]
சங்கீதம் 31 : 11 (ERVTA)
என் பகைவர்கள் என்னை வெறுக்கிறார்கள். [QBR2] என் அக்கம் பக்கத்தாரும் என்னை வெறுக்கிறார்கள். [QBR] என் உறவினர்கள் தெருவில் என்னைப் பார்க்கிறார்கள். [QBR2] அவர்கள் எனக்குப் பயந்து என்னை விட்டு விலகுகிறார்கள். [QBR]
சங்கீதம் 31 : 12 (ERVTA)
காணாமற்போன கருவியைப் போலானேன். [QBR2] ஜனங்கள் என்னை முற்றிலும் மறந்தார்கள். [QBR]
சங்கீதம் 31 : 13 (ERVTA)
ஜனங்கள் என்னைக்குறித்துப் பேசும் கொடிய காரியங்களை நான் கேட்டேன். [QBR2] அந்த ஜனங்கள் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். [QBR2] அவர்கள் என்னைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள்.
சங்கீதம் 31 : 14 (ERVTA)
கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன். [QBR2] நீரே என் தேவன். [QBR]
சங்கீதம் 31 : 15 (ERVTA)
என் உயிர் உமது கைகளில் உள்ளது. [QBR2] என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றும். [QBR] சில ஜனங்கள் என்னைத் துரத்துகிறார்கள். [QBR2] அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். [QBR]
சங்கீதம் 31 : 16 (ERVTA)
உமது வேலையாளை வரவேற்று ஏற்றுக்கொள்ளும். [QBR2] என்னிடம் தயவாயிருந்து என்னைக் காப்பாற்றும்! [QBR]
சங்கீதம் 31 : 17 (ERVTA)
கர்த்தாவே, உம்மிடம் ஜெபித்தேன். [QBR2] எனவே நான் ஏமாந்து போகமாட்டேன். [QBR] தீயோர் ஏமாந்து போவார்கள். [QBR2] அமைதியாக கல்லறைக்குச் செல்வார்கள். [QBR]
சங்கீதம் 31 : 18 (ERVTA)
அத்தீயோர் நல்லோரைக் குறித்துத் தீமையும் பொய்யும் உரைப்பார்கள். [QBR2] அத்தீயோர் பெருமைக்காரர். [QBR2] ஆனால் அவர்களின் பொய் கூறும் உதடுகள் அமைதியாகிவிடும்.
சங்கீதம் 31 : 19 (ERVTA)
தேவனே, உம்மைப் பின்பற்றுவோருக்காக பல அதிசயமான காரியங்களை நீர் மறைவாய் வைத்திருக்கிறீர். [QBR2] உம்மை நம்பும் ஜனங்களுக்கு எல்லோர் முன்பாகவும் நற்காரியங்களைச் செய்கிறீர். [QBR]
சங்கீதம் 31 : 20 (ERVTA)
தீயோர் நல்லோரைத் தாக்க ஒருமித்துக் கூடுகிறார்கள். [QBR2] அத்தீயோர் சண்டையிட முயல்கிறார்கள். [QBR] ஆனால் அந்நல்லோரை மறைத்து அவர்களைக் காப்பாற்றும். [QBR2] உமது அடைக்கலத்தில் வைத்து அவர்களைப் பாதுகாத்தருளும். [QBR]
சங்கீதம் 31 : 21 (ERVTA)
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். [QBR2] நகரம் பகைவர்களால் சூழப்பட்டபோது அவர் தம் உண்மையான அன்பை அதிசயமாக எனக்கு வெளிப்படுத்தினார். [QBR]
சங்கீதம் 31 : 22 (ERVTA)
நான் அஞ்சினேன், “தேவன் பார்க்கமுடியாத இடத்தில் நான் இருக்கிறேன்” என்றேன். [QBR2] ஆனால் தேவனே, நான் உம்மிடம் ஜெபித்தேன். [QBR2] உதவிக்கான என் உரத்த ஜெபங்களை நீர் கேட்டீர்.
சங்கீதம் 31 : 23 (ERVTA)
தேவனைப் பின்பற்றுவோரே, நீங்கள் கர்த்தரை நேசியுங்கள். [QBR2] தம்மிடம் விசுவாசமுள்ள ஜனங்களை கர்த்தர் காக்கிறார். [QBR] ஆனால் தங்கள் வல்லமையைக் குறித்துப் பெருமை பாராட்டுவோரை கர்த்தர் தண்டிக்கிறார். [QBR2] அவர்களுக்கான தண்டனையை தேவன் அளிக்கிறார். [QBR]
சங்கீதம் 31 : 24 (ERVTA)
கர்த்தருடைய உதவிக்காகக் காத்துக் கொண்டிருக்கிற ஜனங்களே, [QBR2] வலிமையும் துணிவும் உடையோராயிருங்கள்! [PE]
❮
❯