சங்கீதம் 30 : 1 (ERVTA)
தாவீது பாடிய பாடல்களுள் ஒன்று. ஆலயத்தின் அர்ப்பணிப்புக்காகப் பாடிய பாடல். கர்த்தாவே, என் தொல்லைகளினின்று என்னை விடுவித்தீர். எனது பகைவர்கள் என்னைத் தோற்கடித்து என்னை நோக்கி நகைக்காமல் இருக்கச் செய்தீர். எனவே நான் உம்மை கனப்படுத்துவேன்.
சங்கீதம் 30 : 2 (ERVTA)
என் தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மிடம் ஜெபித்தேன். நீர் என்னைக் குணமாக்கினீர்.
சங்கீதம் 30 : 3 (ERVTA)
கல்லறையினின்று என்னை விடுவித்தீர். என்னை வாழவிட்டீர். குழிகளில் இருக்கும் பிணங்களோடு நான் தங்கியிருக்க நேரவில்லை.
சங்கீதம் 30 : 4 (ERVTA)
தேவனைப் பின்பற்றுவோர் கர்த்தருக்குத் துதிகளைப் பாடுவார்கள்! அவரது பரிசுத்த நாமத்தைத் துதியுங்கள்!
சங்கீதம் 30 : 5 (ERVTA)
தேவன் கோபங்கொண்டார். அதன் முடிவு “மரணமே”. ஆனால் அவர் அன்பை வெளிப்படுத்தினார், எனக்கு “உயிரைக்” கொடுத்தார். இரவில் அழுதபடி படுத்திருந்தேன். மறுநாள் காலையில் மகிழ்ச்சியோடு பாடிக்கொண்டிருந்தேன்!
சங்கீதம் 30 : 6 (ERVTA)
இப்போது இவ்வாறு நான் கூறமுடியும். அது உண்மையென நிச்சயமாய் நான் அறிவேன். “நான் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்!”
சங்கீதம் 30 : 7 (ERVTA)
கர்த்தாவே, என்னிடம் தயவாயிருந்தீர். எதுவும் என்னை வெல்ல முடியாது என உணர்ந்தேன். சிலகாலம், நீர் என்னை விட்டு விலகினீர், நான் மிகவும் பயந்தேன்.
சங்கீதம் 30 : 8 (ERVTA)
தேவனே, நான் உம்மிடம் திரும்பி ஜெபித்தேன். எனக்கு இரக்கம் காட்டுமாறு வேண்டினேன்.
சங்கீதம் 30 : 9 (ERVTA)
நான், “தேவனே, நான் மரித்துக் கல்லறைக்குள் அடக்கம் பண்ணப்பட்டால் என்ன பயன்? மரித்தோர் புழுதியில் கிடப்பார்கள். அவர்கள் உம்மைத் துதிப்பதில்லை! என்றென்றும் தொடரும் உம் நன்மையை அவர்கள் பேசார்கள்” என்றேன்.
சங்கீதம் 30 : 10 (ERVTA)
கர்த்தாவே என் ஜெபத்தைக் கேளும். என்னிடம் தயவாயிரும்! கர்த்தாவே, எனக்கு உதவும்.
சங்கீதம் 30 : 11 (ERVTA)
நான் ஜெபித்தேன், நீர் எனக்கு உதவினீர்! என் அழுகையை நடனக்களிப்பாய் மாற்றினீர். அழுகையின் ஆடைகளை நீர் அகற்றிப்போட்டீர். மகிழ்ச்சியால் என்னைப் பொதிந்து வைத்தீர்.
சங்கீதம் 30 : 12 (ERVTA)
எனது தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றும் நான் துதிப்பேன். ஒருபோதும் அமைதியாயிராமல் நான் இதைச் செய்வேன். எப்போதும் யாராவது ஒருவர் உம்மை கனப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12