சங்கீதம் 29 : 1 (ERVTA)
தாவீதின் பாடல் தேவனுடைய புத்திரரே, கர்த்தரைத் துதியுங்கள்! அவரது மகிமையையும் வல்லமையையும் துதியுங்கள்.
சங்கீதம் 29 : 2 (ERVTA)
கர்த்தரைத் துதித்து அவர் நாமத்தை கனப்படுத்துங்கள்! உங்கள் விசேஷ ஆடைகளை அணிந்து அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
சங்கீதம் 29 : 3 (ERVTA)
கடலின்மேல் கர்த்தர் தமது குரலை எழுப்புகிறார். மகிமைபொருந்திய தேவனுடைய குரல் பெரும் சமுத்திரத்தின்மேல் இடியாய் முழங்கும்.
சங்கீதம் 29 : 4 (ERVTA)
கர்த்தருடைய குரல் அவர் வல்லமையைக் காட்டும். அவரது குரல் அவர் மகிமையைக் காட்டும்.
சங்கீதம் 29 : 5 (ERVTA)
கர்த்தருடைய குரல் பெரிய கேதுரு மரங்களையும் சின்னஞ்சிறு துண்டுகளாக்கும். லீபனோனின் பெரிய கேதுரு மரங்களை கர்த்தர் உடைத்தெறிகிறார்.
சங்கீதம் 29 : 6 (ERVTA)
கர்த்தர் லீபனோனைக் குலுக்குகிறார். இளங்கன்று நடனமாடினாற்போன்று அது தோன்றுகிறது. எர்மோன் மலை நடுங்குகிறது. இளமையான வெள்ளாடு குதிப்பதைப்போன்று அது தோன்றுகிறது.
சங்கீதம் 29 : 7 (ERVTA)
கர்த்தருடைய குரல் மின்னலைப்போல் ஒளிவிட்டுத் தாக்குகிறது.
சங்கீதம் 29 : 8 (ERVTA)
கர்த்தருடைய குரல் பாலைவனத்தைக் குலுக்குகிறது. கர்த்தருடைய குரலால் காதேஸ் பாலைவனம் நடுங்குகிறது.
சங்கீதம் 29 : 9 (ERVTA)
கர்த்தருடைய குரல் மானை அஞ்சச்செய்யும். கர்த்தர் காடுகளை அழிக்கிறார். அவரது அரண்மனையில், ஜனங்கள் அவரது மகிமையைப் பாடுகிறார்கள்.
சங்கீதம் 29 : 10 (ERVTA)
வெள்ளப்பெருக்கின்போது கர்த்தர் அரசராயிருந்தார். என்றென்றும் கர்த்தரே அரசர்.
சங்கீதம் 29 : 11 (ERVTA)
கர்த்தர்தாமே அவரது ஜனங்களைப் பாதுகாப்பாராக. கர்த்தர் அவரது ஜனங்களை சமாதானத்தோடு வாழும்படி ஆசீர்வதிப்பாராக.

1 2 3 4 5 6 7 8 9 10 11