சங்கீதம் 27 : 1 (ERVTA)
தாவீதின் பாடல் கர்த்தாவே, நீரே என் ஒளியும் இரட்சகருமானவர். யாருக்கும் நான் பயப்படமாட்டேன்! கர்த்தர் என் வாழ்க்கையின் பாதுகாப்பானவர். எந்த மனிதனுக்கும் நான் அஞ்சேன்.
சங்கீதம் 27 : 2 (ERVTA)
தீய ஜனங்கள் என்னைத் தாக்கக்கூடும். என்னைத் தாக்கி என் சரீரத்தை அழிக்க என் பகைவர்கள் முயலக்கூடும்.
சங்கீதம் 27 : 3 (ERVTA)
ஒரு படையே என்னைச் சூழ்ந்தாலும் நான் அஞ்சமாட்டேன். போரில் ஜனங்கள் என்னைத் தாக்கினாலும் நான் பயப்படேன். ஏனெனில் நான் கர்த்தரை நம்புகிறேன்.
சங்கீதம் 27 : 4 (ERVTA)
எனக்குத் தருமாறு ஒன்றையே நான் கர்த்தரிடம் கேட்பேன். இதுவே என் கோரிக்கை: “என் வாழ்க்கை முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கி கர்த்தருடைய அழகைக்கண்டு அவர் அரண்மனையை தரிசிக்க அனுமதியும்.”
சங்கீதம் 27 : 5 (ERVTA)
ஆபத்தில் நான் இருக்கையில் கர்த்தர் என்னைக் காப்பார். அவரது கூடாரத்தில் என்னை ஒளித்து வைப்பார். அவரது பாதுகாப்பிடம் வரைக்கும் என்னை அழைத்துச் செல்வார்.
சங்கீதம் 27 : 6 (ERVTA)
என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்துள்ளனர். அவர்களைத் தோற்கடிக்கக் கர்த்தர் எனக்கு உதவுவார். அப்போது அவரது கூடாரத்தில் பலிகளைச் செலுத்துவேன். மகிழ்ச்சி ஆரவாரத்தோடு என் பலிகளை அளிப்பேன். கர்த்தரை, மகிமைப்படுத்தும் பாடல்களை இசைத்துப் பாடுவேன்.
சங்கீதம் 27 : 7 (ERVTA)
கர்த்தாவே, என் குரலைக் கேட்டு எனக்குப் பதில் தாரும், என்னிடம் தயவாயிரும்.
சங்கீதம் 27 : 8 (ERVTA)
கர்த்தாவே, உம்மோடு பேசவிரும்புகிறேன். என் இருதயத்திலிருந்து உம்மிடம் பேசவாஞ்சிக்கிறேன். கர்த்தாவே, உம்மிடம் பேசுவதற்காக உமக்கு முன்பாக வருகிறேன்.
சங்கீதம் 27 : 9 (ERVTA)
கர்த்தாவே, என்னிடமிருந்து விலகாதேயும்! உமது ஊழியனாகிய என்னிடம் கோபங்கொண்டு, என்னைவிட்டு விலகாதேயும்! எனக்கு உதவும்! என்னைத் தூரத்தள்ளாதிரும். என்னை விட்டு விடாதிரும்! என் தேவனே, நீரே என் இரட்சகர்!
சங்கீதம் 27 : 10 (ERVTA)
என் தந்தையும் தாயும் என்னை கைவிட்டனர். ஆனால் கர்த்தர் என்னை எடுத்து தமக்குரியவன் ஆக்கினார்.
சங்கீதம் 27 : 11 (ERVTA)
கர்த்தாவே, எனக்குப் பகைவருண்டு. எனவே உமது வழிகளை எனக்குப் போதியும். சரியான காரியங்களைச் செய்வதற்கு எனக்குப் போதியும்.
சங்கீதம் 27 : 12 (ERVTA)
எனது சத்தருக்கள் என்னைத் தாக்கினார்கள். என்னைப்பற்றி பொய்யுரைத்தனர். என்னைத் துன்புறுத்த பொய் கூறினர்.
சங்கீதம் 27 : 13 (ERVTA)
நான் மரிக்கும் முன்னர் கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என நான் உண்மையாகவே நம்புகிறேன்.
சங்கீதம் 27 : 14 (ERVTA)
கர்த்தருடைய உதவிக்குக் காத்திரு. பெலத்தோடும் தைரியத்தோடும் இருந்து, கர்த்தருக்குக் காத்திரு.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14