சங்கீதம் 25 : 1 (ERVTA)
தாவீதின் பாடல் கர்த்தாவே, நான் என்னை உமக்கு அளிக்கிறேன்.
சங்கீதம் 25 : 2 (ERVTA)
என் தேவனே, நான் உம்மை நம்புகிறேன். நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன். என் பகைவர்கள் என்னைக் கண்டு நகைப்பதில்லை.
சங்கீதம் 25 : 3 (ERVTA)
ஒருவன் உம்மை நம்பினால் அவன் வெட்கப்பட்டுப் போகமாட்டான். ஆனால் வஞ்சகர் ஏமாந்து போவார்கள். அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.
சங்கீதம் 25 : 4 (ERVTA)
கர்த்தாவே, உமது வழிகளைக் கற்றுக் கொள்ள உதவும். உமது வழிகளை எனக்குப் போதியும்.
சங்கீதம் 25 : 5 (ERVTA)
எனக்கு வழிகாட்டி உமது உண்மைகளைப் போதியும். நீரே என் தேவன், என் மீட்பர். அனுதினமும் நான் உம்மை நம்புகிறேன்.
சங்கீதம் 25 : 6 (ERVTA)
கர்த்தாவே, என்னிடம் தயவாயிருக்க நினைவு கூரும். எப்போதுமுள்ள உமது மென்மையான அன்பை எனக்குக் காட்டும்.
சங்கீதம் 25 : 7 (ERVTA)
எனது பாவங்களையும் என் சிறுவயதின் தீய செயல்களையும் நினைவில் கொள்ளாதேயும். கர்த்தாவே, உமது நல்ல நாமத்திற்கேற்ப, என்னை அன்பிலே நினைத்தருளும்.
சங்கீதம் 25 : 8 (ERVTA)
கர்த்தர் உண்மையாகவே நல்லவர். பாவிகளுக்கு வாழ்வதற்குரிய வழியை அவர் போதிக்கிறார்.
சங்கீதம் 25 : 9 (ERVTA)
தாழ்மைப்பட்டவர்களுக்கு அவர் தம் வழியைப் போதிக்கிறார். அவர் அந்த ஜனங்களை நியாயமாக நடத்துகிறார்.
சங்கீதம் 25 : 10 (ERVTA)
அவரது உடன்படிக்கையையும், வாக்குறுதிகளையும் பின்பற்றும் ஜனங்களுக்குக் கர்த்தர் தயவுள்ளவரும், உண்மையுமானவர்.
சங்கீதம் 25 : 11 (ERVTA)
கர்த்தாவே, நான் பிழையான காரியங்கள் பலவற்றைச் செய்தேன். ஆனால் உம் நன்மை வெளிப்படும் பொருட்டு நான் செய்தவற்றையெல்லாம் மன்னித்தீர்.
சங்கீதம் 25 : 12 (ERVTA)
கர்த்தரைப் பின்பற்றுவதை ஒருவன் தெரிந்துகொண்டால் அவன் வாழ்வதற்குரிய நல் வழியை தேவன் காட்டுவார்.
சங்கீதம் 25 : 13 (ERVTA)
அம்மனிதன் நல்லவற்றை அனுபவிப்பான். தேவன் வாக்களித்த தேசத்தை அவன் பிள்ளைகள் பெறுவார்கள்.
சங்கீதம் 25 : 14 (ERVTA)
தன்னைப் பின்பற்றுவோருக்குக் கர்த்தர் தன் இரகசியங்களைச் சொல்வார். அவரைப் பின்பற்றுவோருக்குத் தமது உடன்படிக்கையைக் கற்பிக்கிறார்.
சங்கீதம் 25 : 15 (ERVTA)
உதவிக்காக நான் எப்போதும் கர்த்தரை நோக்கியிருக்கிறேன். தொல்லைகளிலிருந்து அவர் எப்போதும் முடிவு உண்டாக்குகிறார்.
சங்கீதம் 25 : 16 (ERVTA)
கர்த்தாவே, நான் காயமுற்றுத் தனித்திருக்கிறேன். என்னிடம் திரும்பி எனக்கு இரக்கத்தைக் காட்டும்.
சங்கீதம் 25 : 17 (ERVTA)
என் தொல்லைகளிலிருந்து என்னை விடுவியும். என் சிக்கல்களைத் தீர்க்க எனக்கு உதவும்.
சங்கீதம் 25 : 18 (ERVTA)
கர்த்தாவே, என் தொல்லைகளையும், துன்பத்தையும் பாரும். நான் செய்த பாவங்களையெல்லாம் மன்னியும்.
சங்கீதம் 25 : 19 (ERVTA)
என் பகைவர்களையெல்லாம் பாரும். அவர்கள் என்னைப் பகைத்துத் தாக்க விரும்புகிறார்கள்.
சங்கீதம் 25 : 20 (ERVTA)
தேவனே, என்னைப் பாதுகாத்து மீட்டருளும். நான் உம்மை நம்புகிறேன், என்னை ஏமாற்றமடையச் செய்யாதேயும்.
சங்கீதம் 25 : 21 (ERVTA)
தேவனே, நீர் உண்மையாகவே நல்லவர். நான் உம்மை நம்புவதால் என்னைப் பாதுகாத்தருளும்.
சங்கீதம் 25 : 22 (ERVTA)
தேவனே, இஸ்ரவேல் ஜனங்களை அவர்களது பகைவர்கள் எல்லோரிடமிருந்தும் மீட்டுக்கொள்ளும்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22