{இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்} [PS] தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது கர்த்தர் பதிலளிக்கட்டும். [QBR2] யாக்கோபின் தேவன் உன் பெயரை முக்கியமாக்கட்டும். [QBR]
சங்கீதம் 20 : 2 (ERVTA)
அவரது பரிசுத்த இடத்திலிருந்து தேவன் உதவி அனுப்பட்டும். [QBR2] சீயோனிலிருந்து அவர் உனக்குத் துணை நிற்கட்டும். [QBR]
சங்கீதம் 20 : 3 (ERVTA)
நீ அளித்த அன்பளிப்புகளை தேவன் நினைவுகூரட்டும். [QBR2] உன் பலிகளையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளட்டும். [QBR]
சங்கீதம் 20 : 4 (ERVTA)
தேவன் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவார் என நம்புகிறேன். [QBR2] உன் எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றுவார் என நம்புகிறேன். [QBR]
சங்கீதம் 20 : 5 (ERVTA)
தேவன் உனக்கு உதவும்போது நாம் மகிழ்வடைவோம். [QBR2] நாம் தேவனுடைய நாமத்தைத் துதிப்போம். [QBR] நீ கேட்பவற்றை யெல்லாம் கர்த்தர் தருவார் என்று நான் நம்புகிறேன்.
சங்கீதம் 20 : 6 (ERVTA)
கர்த்தர் தான் தேர்ந்தெடுத்த அரசனுக்கு உதவுகிறார் என இப்போது அறிகிறேன். [QBR2] தேவன் அவரது பரிசுத்த பரலோகத்தில் இருந்தார். [QBR] அவர் தேர்ந்தெடுத்த அரசனுக்குப் பதில் தந்தார். [QBR2] அவனைப் பாதுகாக்க தேவன் தன் உயர்ந்த வல்லமையைப் பயன்படுத்தினார். [QBR]
சங்கீதம் 20 : 7 (ERVTA)
சிலர் தங்கள் இரதங்களை நம்புகின்றனர். [QBR2] மற்றோர் தங்கள் வீரர்களை நம்புகின்றனர். [QBR] ஆனால் நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தரை நினைக்கின்றோம். [QBR2] அவரின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவோம். [QBR]
சங்கீதம் 20 : 8 (ERVTA)
அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். [QBR2] அவர்கள் யுத்தத்தில் மடிந்தனர். [QBR] ஆனால் நாங்கள் வென்றோம்! [QBR2] நாங்கள் வெற்றிபெற்றவர்கள்.
சங்கீதம் 20 : 9 (ERVTA)
கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்த அரசனை மீட்டார்! [QBR2] தேவன் தேர்ந்தெடுத்த அரசன் உதவி வேண்டினான். தேவன் பதில் தந்தார்! [PE]