சங்கீதம் 20 : 1 (ERVTA)
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது கர்த்தர் பதிலளிக்கட்டும். யாக்கோபின் தேவன் உன் பெயரை முக்கியமாக்கட்டும்.
சங்கீதம் 20 : 2 (ERVTA)
அவரது பரிசுத்த இடத்திலிருந்து தேவன் உதவி அனுப்பட்டும். சீயோனிலிருந்து அவர் உனக்குத் துணை நிற்கட்டும்.
சங்கீதம் 20 : 3 (ERVTA)
நீ அளித்த அன்பளிப்புகளை தேவன் நினைவுகூரட்டும். உன் பலிகளையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளட்டும்.
சங்கீதம் 20 : 4 (ERVTA)
தேவன் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவார் என நம்புகிறேன். உன் எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.
சங்கீதம் 20 : 5 (ERVTA)
தேவன் உனக்கு உதவும்போது நாம் மகிழ்வடைவோம். நாம் தேவனுடைய நாமத்தைத் துதிப்போம். நீ கேட்பவற்றை யெல்லாம் கர்த்தர் தருவார் என்று நான் நம்புகிறேன்.
சங்கீதம் 20 : 6 (ERVTA)
கர்த்தர் தான் தேர்ந்தெடுத்த அரசனுக்கு உதவுகிறார் என இப்போது அறிகிறேன். தேவன் அவரது பரிசுத்த பரலோகத்தில் இருந்தார். அவர் தேர்ந்தெடுத்த அரசனுக்குப் பதில் தந்தார். அவனைப் பாதுகாக்க தேவன் தன் உயர்ந்த வல்லமையைப் பயன்படுத்தினார்.
சங்கீதம் 20 : 7 (ERVTA)
சிலர் தங்கள் இரதங்களை நம்புகின்றனர். மற்றோர் தங்கள் வீரர்களை நம்புகின்றனர். ஆனால் நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தரை நினைக்கின்றோம். அவரின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவோம்.
சங்கீதம் 20 : 8 (ERVTA)
அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அவர்கள் யுத்தத்தில் மடிந்தனர். ஆனால் நாங்கள் வென்றோம்! நாங்கள் வெற்றிபெற்றவர்கள்.
சங்கீதம் 20 : 9 (ERVTA)
கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்த அரசனை மீட்டார்! தேவன் தேர்ந்தெடுத்த அரசன் உதவி வேண்டினான். தேவன் பதில் தந்தார்!

1 2 3 4 5 6 7 8 9