சங்கீதம் 17 : 1 (ERVTA)
தாவீதின் ஒரு ஜெபம் கர்த்தாவே, நியாயத்திற்கான என் ஜெபத்தைக் கேளும். எனது ஜெபப் பாடலுக்குச் செவிகொடுத்தருளும். எனது நேர்மையான ஜெபத்தைக் கேளும்.
சங்கீதம் 17 : 2 (ERVTA)
என்னைப் பற்றிய சரியான முடிவு எடுப்பீர். உம்மால் உண்மையைக் காணமுடியும்.
சங்கீதம் 17 : 3 (ERVTA)
நீர் என் இருதயத்தின் ஆழத்தைப் பார்த்தீர். இரவு முழுவதும் என்னோடிருந்தீர். என் இருதயத்தை ஆராய்ந்து என்னில் ஒரு குற்றத்தையும் நீர் காணவில்லை. நான் எந்தத் தீய செயல்களையும் திட்டமிடவில்லை.
சங்கீதம் 17 : 4 (ERVTA)
உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு என்னால் இயன்றமட்டும் முயன்றேன்.
சங்கீதம் 17 : 5 (ERVTA)
உமது வழிமுறைகளை பின்பற்றினேன். உமது வாழ்க்கை வழிகளிலிருந்து என் பாதங்கள் விலகவில்லை.
சங்கீதம் 17 : 6 (ERVTA)
தேவனே, உம்மைக் கூப்பிட்டபோதெல்லாம், எனக்குப் பதிலளித்தீர். எனவே, இப்போதும் எனக்குச் செவிகொடும்.
சங்கீதம் 17 : 7 (ERVTA)
தேவனே, உம்மை நம்புகிற உமது வலது பக்கத்திலிருக்கும் ஜனங்களுக்கு உதவுகிறீர். உம்மைப் பின்பற்றுகிறவனின் இந்த ஜெபத்திற்குச் செவிகொடும்.
சங்கீதம் 17 : 8 (ERVTA)
கண்ணின் மணியைப்போல என்னைப் பாதுகாத்துக்கொள்ளும். உமது சிறகுகளின் நிழலில் என்னை மறைத்துக்கொள்ளும்.
சங்கீதம் 17 : 9 (ERVTA)
கர்த்தாவே, என்னை அழிக்க நினைக்கிற தீயோரிடமிருந்து என்னை மீட்டருளும். என்னைத் தாக்க முயல்கிற ஜனங்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
சங்கீதம் 17 : 10 (ERVTA)
தங்களைப் பற்றிப் பெருமைபாராட்டுகிற அத்தீயோர் தேவனுக்குச் செவிசாய்க்க முடியாதபடி பெருமையுடையோராய் இருக்கிறார்கள்.
சங்கீதம் 17 : 11 (ERVTA)
அந்த ஜனங்கள் என்னைத் துரத்தினார்கள். இப்போது அவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள். என்னைத் தாக்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
சங்கீதம் 17 : 12 (ERVTA)
பிற விலங்குகளைக் கொன்று சாப்பிடக் காத்திருக்கும் சிங்கத்தைப்போன்று அத்தீயோர் காணப்படுகிறார்கள். தாக்கக் காத்திருக்கும் சிங்கத்தைப்போல் மறைந்திருக்கிறார்கள்.
சங்கீதம் 17 : 13 (ERVTA)
கர்த்தாவே, எழுந்து பகைவரிடம் சென்று, அவர்கள் சரணடையச் செய்யும். உமது வாளால் அத்தீயோரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
சங்கீதம் 17 : 14 (ERVTA)
கர்த்தாவே, உயிருள்ளோர் வாழும் தேசத்திலிருந்து அத்தீயோரை உமது வல்லமையால் அப்புறப்படுத்தும். கர்த்தாவே, பலர் உம்மிடம் உதவிக்காக வருவார்கள். இவ்வாழ்க்கையில் அதிகம் பலனில்லை. அவர்களுக்கு அதிக உணவளியும். வேண்டுவனவற்றை அவர்கள் பிள்ளைகளுக்குக் கொடும். அவர்களின் பிள்ளைகளுக்கும் மிகுந்திருக்கும்படியாக அப்பிள்ளைகளுக்குத் திருப்தியாய் உணவளியும்.
சங்கீதம் 17 : 15 (ERVTA)
நான் நீதிக்காக ஜெபிக்கிறேன். கர்த்தாவே, உமது முகத்தைக் காண்பேன். கர்த்தாவே, உம்மைப் பார்ப்பதால் முழுமையான திருப்திகொள்வேன்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15