சங்கீதம் 150 : 1 (ERVTA)
கர்த்தரைத் துதியுங்கள்! தேவனை அவரது ஆலயத்தில் துதியுங்கள்! பரலோகத்தில் அவரைது வல்லமையைத் துதியுங்கள்!
சங்கீதம் 150 : 2 (ERVTA)
அவர் செய்கிற பெரிய காரியங்களுக்காக தேவனைத் துதியுங்கள்! அவரது எல்லா மேன்மைகளுக்காகவும் அவரைத் துதியுங்கள்!
சங்கீதம் 150 : 3 (ERVTA)
எக்காளத் தொனியோடு தேவனைத் துதியுங்கள்! வீணைகளோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்!
சங்கீதம் 150 : 4 (ERVTA)
தேவனைத் தம்புருக்களோடும் நடனத்தோடும் துதியுங்கள்! நரம்புக் கருவிகளோடும் புல்லாங் குழலோடும் அவரைத் துதியுங்கள்!
சங்கீதம் 150 : 5 (ERVTA)
ஓசையெழுப்பும் தாளங்களோடும் தேவனைத் துதியுங்கள்! பேரோசையெழுப்பும் தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்!
சங்கீதம் 150 : 6 (ERVTA)
எல்லா உயிரினங்களும் கர்த்தரைத் துதிக்கட்டும்! கர்த்தரைத் துதிப்போம்!

1 2 3 4 5 6

BG:

Opacity:

Color:


Size:


Font: