சங்கீதம் 148 : 1 (ERVTA)
கர்த்தரைத் துதியுங்கள்! [QBR] மேலேயுள்ள தேவ தூதர்களே, [QBR2] பரலோகத்திலிருந்து கர்த்தரைத் துதியுங்கள்! [QBR]
சங்கீதம் 148 : 2 (ERVTA)
தேவதூதர்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்! [QBR2] அவரது சேனைகள் [*அவரது சேனைகள் “தேவதூதர்கள்” அல்லது “நட்சத்திரங்களும் கிரகங்களும்” அல்லது “படை வீரர்கள்” எனப்பொருள் தரும்.] எல்லோரும் அவரைத் துதியுங்கள்! [QBR]
சங்கீதம் 148 : 3 (ERVTA)
சூரியனும் சந்திரனும் கர்த்தரைத் துதியுங்கள்! [QBR2] நட்சத்திரங்களும் வானின் விளக்குகளும் அவரைத் துதியுங்கள்! [QBR]
சங்கீதம் 148 : 4 (ERVTA)
மிக உயரத்திலுள்ள பரலோகமே கர்த்தரைத் துதியுங்கள்! [QBR2] வானின் மேலுள்ள வெள்ளங்களே, அவரைத் துதியுங்கள்! [QBR]
சங்கீதம் 148 : 5 (ERVTA)
கர்த்தருடைய நாமத்தைத் துதி. [QBR2] ஏனெனில் தேவன் கட்டளையிட்டபோது, நாமெல்லோரும் படைக்கப்பட்டோம்! [QBR]
சங்கீதம் 148 : 6 (ERVTA)
இவையனைத்தும் என்றென்றும் தொடருமாறு தேவன் செய்தார். [QBR2] என்றும் முடிவடையாத சட்டங்களை தேவன் உண்டாக்கினார். [QBR]
சங்கீதம் 148 : 7 (ERVTA)
பூமியிலுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதியுங்கள்! [QBR2] சமுத்திரத்தின் பெரிய விலங்குகளே, கர்த்தரைத் துதியுங்கள்! [QBR]
சங்கீதம் 148 : 8 (ERVTA)
தேவன் நெருப்பையும் கல்மழையையும் பனியையும் [QBR2] புகையையும் எல்லாவிதமான புயற்காற்றையும் உண்டாக்கினார். [QBR]
சங்கீதம் 148 : 9 (ERVTA)
மலைகளையும் குன்றுகளையும் கனிதரும் மரங்களையும் [QBR2] கேதுருமரங்களையும் தேவன் உண்டாக்கினார். [QBR]
சங்கீதம் 148 : 10 (ERVTA)
எல்லாக் காட்டு மிருகங்களையும் நாட்டு மிருகங்களையும் [QBR2] ஊர்வனவற்றையும் பறவைகளையும் தேவன் உண்டாக்கினார். [QBR]
சங்கீதம் 148 : 11 (ERVTA)
பூமியின் தேசங்களையும் அரசர்களையும் தேவன் உண்டாக்கினார். [QBR2] தலைவர்களையும் நீதிபதிகளையும் தேவன் உண்டாக்கினார். [QBR]
சங்கீதம் 148 : 12 (ERVTA)
இளைஞர்களையும் இளம்பெண்களையும் தேவன் உண்டாக்கினார். [QBR2] முதியோரையும் இளையோரையும் தேவன் உண்டாக்கினார். [QBR]
சங்கீதம் 148 : 13 (ERVTA)
கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்! [QBR2] அவர் நாமத்தை என்றென்றும் [QBR2] மகிமைப்படுத்துங்கள்! [QBR2] பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்! [QBR]
சங்கீதம் 148 : 14 (ERVTA)
தேவன் அவரது ஜனங்களைப் பலப்படுத்துகிறார். [QBR2] தேவனைப் பின்பற்றுவோரை ஜனங்கள் வாழ்த்துவார்கள். [QBR2] ஜனங்கள் இஸ்ரவேலை வாழ்த்துவார்கள். [QBR2] தேவன் அவர்களுக்காகப் போராடுகிறார். [QBR2] கர்த்தரைத் துதியுங்கள். [PE]
❮
❯