சங்கீதம் 148 : 1 (ERVTA)
கர்த்தரைத் துதியுங்கள்! மேலேயுள்ள தேவ தூதர்களே, பரலோகத்திலிருந்து கர்த்தரைத் துதியுங்கள்!
சங்கீதம் 148 : 2 (ERVTA)
தேவதூதர்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்! அவரது சேனைகள்* அவரது சேனைகள் “தேவதூதர்கள்” அல்லது “நட்சத்திரங்களும் கிரகங்களும்” அல்லது “படை வீரர்கள்” எனப்பொருள் தரும். எல்லோரும் அவரைத் துதியுங்கள்!
சங்கீதம் 148 : 3 (ERVTA)
சூரியனும் சந்திரனும் கர்த்தரைத் துதியுங்கள்! நட்சத்திரங்களும் வானின் விளக்குகளும் அவரைத் துதியுங்கள்!
சங்கீதம் 148 : 4 (ERVTA)
மிக உயரத்திலுள்ள பரலோகமே கர்த்தரைத் துதியுங்கள்! வானின் மேலுள்ள வெள்ளங்களே, அவரைத் துதியுங்கள்!
சங்கீதம் 148 : 5 (ERVTA)
கர்த்தருடைய நாமத்தைத் துதி. ஏனெனில் தேவன் கட்டளையிட்டபோது, நாமெல்லோரும் படைக்கப்பட்டோம்!
சங்கீதம் 148 : 6 (ERVTA)
இவையனைத்தும் என்றென்றும் தொடருமாறு தேவன் செய்தார். என்றும் முடிவடையாத சட்டங்களை தேவன் உண்டாக்கினார்.
சங்கீதம் 148 : 7 (ERVTA)
பூமியிலுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதியுங்கள்! சமுத்திரத்தின் பெரிய விலங்குகளே, கர்த்தரைத் துதியுங்கள்!
சங்கீதம் 148 : 8 (ERVTA)
தேவன் நெருப்பையும் கல்மழையையும் பனியையும் புகையையும் எல்லாவிதமான புயற்காற்றையும் உண்டாக்கினார்.
சங்கீதம் 148 : 9 (ERVTA)
மலைகளையும் குன்றுகளையும் கனிதரும் மரங்களையும் கேதுருமரங்களையும் தேவன் உண்டாக்கினார்.
சங்கீதம் 148 : 10 (ERVTA)
எல்லாக் காட்டு மிருகங்களையும் நாட்டு மிருகங்களையும் ஊர்வனவற்றையும் பறவைகளையும் தேவன் உண்டாக்கினார்.
சங்கீதம் 148 : 11 (ERVTA)
பூமியின் தேசங்களையும் அரசர்களையும் தேவன் உண்டாக்கினார். தலைவர்களையும் நீதிபதிகளையும் தேவன் உண்டாக்கினார்.
சங்கீதம் 148 : 12 (ERVTA)
இளைஞர்களையும் இளம்பெண்களையும் தேவன் உண்டாக்கினார். முதியோரையும் இளையோரையும் தேவன் உண்டாக்கினார்.
சங்கீதம் 148 : 13 (ERVTA)
கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்! அவர் நாமத்தை என்றென்றும் மகிமைப்படுத்துங்கள்! பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்!
சங்கீதம் 148 : 14 (ERVTA)
தேவன் அவரது ஜனங்களைப் பலப்படுத்துகிறார். தேவனைப் பின்பற்றுவோரை ஜனங்கள் வாழ்த்துவார்கள். ஜனங்கள் இஸ்ரவேலை வாழ்த்துவார்கள். தேவன் அவர்களுக்காகப் போராடுகிறார். கர்த்தரைத் துதியுங்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14