சங்கீதம் 145 : 1 (ERVTA)
{தாவீதின் ஜெபங்களுள் ஒன்று} [PS] என் தேவனும் அரசருமாகிய உம்மைத் துதிக்கிறேன். [QBR2] உமது நாமத்தை நான் என்றென்றும் எப்போதும் போற்றுகிறேன். [QBR]
சங்கீதம் 145 : 2 (ERVTA)
நான் ஒவ்வொரு நாளும் உம்மைத் துதிக்கிறேன். [QBR2] நான் உமது நாமத்தை என்றென்றும் எப்போதும் துதிக்கிறேன். [QBR]
சங்கீதம் 145 : 3 (ERVTA)
கர்த்தர் பெரியவர். [QBR2] ஜனங்கள் அவரை அதிகம் துதிக்கிறார்கள். [QBR2] அவர் செய்கிற பெருங்காரியங்களை நாம் எண்ணமுடியாது. [QBR]
சங்கீதம் 145 : 4 (ERVTA)
கர்த்தாவே, நீர் செய்யும் காரியங்களுக்காக ஜனங்கள் உம்மை என்றென்றும் எப்போதும் துதிப்பார்கள். [QBR2] நீர் செய்யும் உயர்ந்த காரியங்களைக் குறித்து அவர்கள் சொல்வார்கள். [QBR]
சங்கீதம் 145 : 5 (ERVTA)
உமது பெருமைக்குரிய தோற்றமும் மகிமையும் அற்புதமானவை. [QBR2] உமது அதிசயங்களைப் பற்றி நான் சொல்வேன். [QBR]
சங்கீதம் 145 : 6 (ERVTA)
கர்த்தாவே, நீர் செய்யும் வியக்கத்தக்க காரியங்களைப்பற்றி ஜனங்கள் சொல்வார்கள். [QBR2] நீர் செய்யும் மேன்மையான காரியங்களைப்பற்றி நான் சொல்வேன். [QBR]
சங்கீதம் 145 : 7 (ERVTA)
நீர் செய்யும் நல்ல காரியங்களைப்பற்றி ஜனங்கள் சொல்வார்கள். [QBR2] உமது நன்மையைப்பற்றி ஜனங்கள் பாடுவார்கள். [QBR]
சங்கீதம் 145 : 8 (ERVTA)
கர்த்தர் தயவும் இரக்கமுமுள்ளவர். [QBR2] கர்த்தர் பொறுமையும் மிகுந்த அன்புமுள்ளவர். [QBR]
சங்கீதம் 145 : 9 (ERVTA)
கர்த்தர் எல்லோருக்கும் நல்லவர். [QBR2] தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவரது இரக்கத்தைக் காட்டுகிறார். [QBR]
சங்கீதம் 145 : 10 (ERVTA)
கர்த்தாவே, நீர் செய்பவை யாவும் உமக்குத் துதிகளைக் கொண்டுவரும். [QBR2] உம்மைப் பின்பற்றுவோர் உம்மை ஆசீர்வதிக்கிறார்கள். [QBR]
சங்கீதம் 145 : 11 (ERVTA)
உமது அரசு எவ்வளவு மேன்மையானது என அவர்கள் சொல்வார்கள். [QBR2] நீர் எவ்வளவு மேன்மையானவர் என்பதை அவர்கள் சொல்வார்கள். [QBR]
சங்கீதம் 145 : 12 (ERVTA)
கர்த்தாவே, அப்போது பிறர் நீர் செய்யும் உயர்ந்த காரியங்களைப்பற்றி அறிந்துகொள்கிறார்கள். [QBR2] உமது அரசு எவ்வளவு மேன்மையும் அற்புதமுமானது என்பதை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். [QBR]
சங்கீதம் 145 : 13 (ERVTA)
கர்த்தாவே, உமது அரசு என்றென்றும் தொடரும். [QBR2] நீர் என்றென்றும் அரசாளுவீர். [QBR]
சங்கீதம் 145 : 14 (ERVTA)
கர்த்தர் வீழ்ந்து கிடக்கின்ற ஜனங்களைத் தூக்கிவிடுகிறார். [QBR2] கர்த்தர் தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு உதவுகிறார். [QBR]
சங்கீதம் 145 : 15 (ERVTA)
கர்த்தாவே, தங்கள் உணவுக்காக எல்லா உயிரினங்களும் உம்மை நோக்கியிருக்கின்றன. [QBR2] அவற்றிற்குத் தக்க நேரத்தில் நீர் உணவளிக்கிறீர். [QBR]
சங்கீதம் 145 : 16 (ERVTA)
கர்த்தாவே, நீர் உமது கைகளைத் திறந்து, [QBR2] ஒவ்வொரு உயிரினத்திற்கும் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறீர். [QBR]
சங்கீதம் 145 : 17 (ERVTA)
கர்த்தர் செய்கின்ற எல்லாம் நல்லவையே. [QBR2] அவர் செய்பவை எல்லாம் அவர் எவ்வளவு நல்லவர் என்பதைக் காட்டும். [QBR]
சங்கீதம் 145 : 18 (ERVTA)
கர்த்தரிடம் உதவி கேட்கிற ஒவ்வொருவனிடமும் அவர் நெருக்கமுள்ளவராயிருக்கிறார். [QBR2] உண்மையாகவே அவரைத் தொழுதுகொள்கிற ஒவ்வொருவரிடமும் அவர் நெருக்கமுள்ள வராயிருக்கிறார். [QBR]
சங்கீதம் 145 : 19 (ERVTA)
கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோர் விரும்புகின்றவற்றைச் செய்கிறார். [QBR2] கர்த்தர் தம்மைப் பின் பற்றுவோருக்குச் செவிகொடுக்கிறார். [QBR2] அவர்களின் ஜெபங்களுக்கு அவர் பதிலளித்து அவர்களைக் காப்பாற்றுகிறார். [QBR]
சங்கீதம் 145 : 20 (ERVTA)
கர்த்தர் தம்மை நேசிக்கிற ஒவ்வொருவரையும் காப்பாற்றுகிறார். [QBR2] ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார். [QBR]
சங்கீதம் 145 : 21 (ERVTA)
நான் கர்த்தரைத் துதிப்பேன்! [QBR2] என்றென்றைக்கும் எப்போதும் அவரது பரிசுத்த நாமத்தை ஒவ்வொருவரும் துதிக்கவேண்டுமென நான் விரும்புகிறேன். [PE]
❮
❯