சங்கீதம் 144 : 1 (ERVTA)
{தாவீதின் ஒரு பாடல்} [PS] கர்த்தர் என் கன்மலை. [QBR2] கர்த்தரைப் போற்றுங்கள். [QBR] கர்த்தர் என்னைப் போருக்குப் பழக்கப்படுத்துகிறார். [QBR2] கர்த்தர் என்னை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார். [QBR]
சங்கீதம் 144 : 2 (ERVTA)
கர்த்தர் என்னை நேசித்து என்னைப் பாதுக்காக்கிறார். [QBR2] மலைகளின் உயரத்தில் கர்த்தரே என் பாதுகாப்பிடம். [QBR] கர்த்தர் என்னை விடுவிக்கிறார். [QBR2] கர்த்தர் எனது கேடகம். [QBR] நான் அவரை நம்புகிறேன். [QBR2] நான் என் ஜனங்களை ஆள்வதற்குக் கர்த்தர் உதவுகிறார்.
சங்கீதம் 144 : 3 (ERVTA)
கர்த்தாவே, நீர் ஏன் ஜனங்களை முக்கியமானவர்களாகக் கருதுகிறீர்? [QBR2] நீர் ஏன் அவர்களைக் கண்ணோக்கிக்கொண்டு இருக்கிறீர்? [QBR]
சங்கீதம் 144 : 4 (ERVTA)
ஊதும் காற்றைப்போன்று ஒருவனின் வாழ்க்கை உள்ளது. [QBR2] மறையும் நிழலைப் போன்றது மனித வாழ்க்கை.
சங்கீதம் 144 : 5 (ERVTA)
கர்த்தாவே, வானங்களைக் கிழித்துக் கீழே வாரும். [QBR2] மலைகளைத் தொடும், அவற்றிலிருந்து புகை எழும்பும். [QBR]
சங்கீதம் 144 : 6 (ERVTA)
கர்த்தாவே, மின்னலை அனுப்பி என் பகைவர்களை ஓடிவிடச் செய்யும். [QBR2] உமது “அம்புகளைச்” செலுத்தி அவர்கள் ஓடிப்போகச் செய்யும். [QBR]
சங்கீதம் 144 : 7 (ERVTA)
கர்த்தாவே, பரலோகத்திலிருந்து இறங்கி வந்து என்னைக் காப்பாற்றும்! [QBR2] பகைவர்களின் கடலில் நான் அமிழ்ந்துபோக விடாதேயும். [QBR2] இந்த அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். [QBR]
சங்கீதம் 144 : 8 (ERVTA)
இப்பகைவர்கள் பொய்யர்கள். [QBR2] அவர்கள் உண்மையில்லாதவற்றைக் கூறுகிறார்கள்.
சங்கீதம் 144 : 9 (ERVTA)
கர்த்தாவே, நீர் செய்யும் அற்புதமான காரியங்களைப்பற்றி நான் ஒரு புதிய பாடலைப் பாடுவேன். [QBR2] நான் உம்மைத் துதிப்பேன். பத்து நரம்பு வீணையை நான் மீட்டுவேன். [QBR]
சங்கீதம் 144 : 10 (ERVTA)
அரசர்கள் போர்களில் வெற்றி காண, கர்த்தர் உதவுகிறார். [QBR2] பகைவர்களின் வாள்களிலிருந்து கர்த்தர் அவரது ஊழியனாகிய தாவீதைக் காப்பாற்றினார்.
சங்கீதம் 144 : 11 (ERVTA)
இந்த அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். [QBR2] இப்பகைவர்கள் பொய்யர்கள். [QBR2] அவர்கள் உண்மையில்லாதவற்றைக் கூறுகிறார்கள். [QBR]
சங்கீதம் 144 : 12 (ERVTA)
நம் இளமகன்கள் பலத்த மரங்களைப் போன்றவர்கள். [QBR2] நம் இளமகள்கள் அரண்மனையின் அழகிய அலங்கார ஒப்பனைகளைப் போன்றிருக்கிறார்கள். [QBR]
சங்கீதம் 144 : 13 (ERVTA)
நம் களஞ்சியங்கள் பலவகை தானியங்களால் நிரம்பியிருக்கின்றன. [QBR2] நம் வயல்களில் ஆயிரமாயிரம் ஆடுகள் உள்ளன. [QBR]
சங்கீதம் 144 : 14 (ERVTA)
நம் வீரர்கள் பாதுகாப்பாயிருக்கிறார்கள். [QBR2] எந்தப் பகைவனும் உள்ளே நுழைய முயலவில்லை. [QBR2] நாங்கள் போருக்குச் செல்லவில்லை. [QBR2] ஜனங்கள் நம் தெருக்களில் கூக்குரல் எழுப்பவில்லை.
சங்கீதம் 144 : 15 (ERVTA)
இத்தகைய காலங்களில் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். [QBR2] கர்த்தர் அவர்கள் தேவனாக இருக்கும்போது ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். [PE]
❮
❯